வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சிவகார்த்திகேயன் வளர்ச்சியை கெடுக்கும் 6 பேர்.. கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி வைக்கும் எதிரிகள்

Sivakarthikeyan: பொதுவாக பாலிவுட்டில் தான் புதிய நடிகர்களை சினிமாவிற்குள் நுழைய விடமாட்டார்கள் என்று ஒரு போக்கு இருந்து வருகிறது. ஆனால் இப்போது தமிழ் சினிமாவிலும் இதே நிலைமை தான் என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு பல விஷயங்கள் அரங்கேறி வருகிறது. அதாவது சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை தடுக்க சில நடிகர்கள் பின்னால் இருந்து வேலை செய்வதாக கூறப்படுகிறது. அவர்கள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சூர்யா : வாரிசு நடிகராக சினிமாவில் நுழைந்த சூர்யா பல வருடமாக ஒரு வெற்றிப் படத்தை கொடுக்கவே திணறி வந்தார். பாலாவின் பிதாமகன் படம் தான் அவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஆனாலும் அயன் படத்தின் மூலம் தான் தன்னை ஒரு நிலையான இடத்தில் சூர்யா தக்க வைத்துக் கொண்டார். ஆனால் சிவகார்த்திகேயன் மிகக் குறுகிய காலத்திலேயே 100 கோடி கிளப்பில் இணைந்து விட்டார். அதோடு மட்டுமல்லாமல் சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் அடிக்கடி மோதிக் கொண்டும் இருக்கிறது.

கார்த்தி : கார்த்தி பருத்திவீரன் என்ற பிளாக்பஸ்டர் படத்தை முதலிலேயே கொடுத்தாலும் அதன் பிறகு ஹிட் படங்களை கொடுக்க தடுமாறினார். அந்த சமயத்தில் தான் சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்த சிவகார்த்திகேயன் விஸ்வரூப வளர்ச்சி அடைந்தார். இதனால் கார்த்திக்கு இவர் மீது பொறாமை இருப்பதாக ஒரு பேச்சு போய்க் கொண்டிருக்கிறது.

தனுஷ் : சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் விவகாரம் இந்த ஊர் உலகமே அறிந்த ஒன்றுதான். ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் சினிமாவில் நுழைய காரணமாக தனுஷ் தான் இருந்தார். தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அவருக்கு நிறைய படங்கள் கொடுத்திருந்தார். பிறகு ஏற்றிவிட்ட ஏணியை உதாசீனப்படுத்துவது போல் சிவகார்த்திகேயன் நடந்து கொண்டதால் தனுஷ் கோவப்பட்டார்.

சிம்பு : சிம்பு குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகமானாலும் தற்போது வரை தன்னை நிலை நிறுத்திக் கொள்ள போராடிக் கொண்டிருக்கிறார். சிவகார்த்திகேயன் மிகக் குறுகிய காலத்திலேயே டாப் 10 நடிகர்களுக்குள் முக்கிய இடத்தை பிடித்து விட்டார். இதனால் இவரின் வளர்ச்சி சிம்புக்கு பிடிக்கவில்லை என செய்திகள் வெளியாகி வருகிறது.

ஜெயம் ரவி : சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டு இருந்த ஜெயம் ரவி முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி போன்ற நடிகர்கள் ஒரே குடும்பமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் வளர்ச்சி அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அருண் விஜய் : சிவகார்த்திகேயனின் சீமராஜா படம் வெளியான போது யாரெல்லாம் மாஸ் ஹீரோ என்று விவஸ்த்த இல்லாம போச்சு என அருண் விஜய் ஒரு ட்விட் செய்திருந்தார். மறைமுகமாக சிவகார்த்திகேயனை குறிப்பிட்டு தான் அருண் விஜய் இந்த பதிவை போட்டு இருக்கிறார் என அப்போது பிரளயமே வெடித்தது.

இதில் முக்கியமாக ஒன்றை கவனிக்க வேண்டும் இவர்கள் அனைவரும் தன் குடும்பத்தின் மூலம் உள்ளே நுழைந்து வெற்றி பெற பல காலம் ஆனது அதுவும் 100 கோடி வசூல் செய்ய பல வருடங்கள் ஆகியது. ஆனால் சிவகார்த்திகேயன் இதை எளிதாக அடைந்து விட்டார். இவர்கள் என்ன செய்தாலும் சிவகார்த்திகேயன் வளர்ச்சியை தடுக்க முடியவில்லை. ஆனால் சிவகார்த்திகேயன் தானாக ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொண்டது இவர்களுக்கு எளிதாக அமைந்து விட்டது. இனிமேல் சிவகார்த்திகேயன் படங்கள் வெளியாவதை தடுக்க இவர்களுக்கு எளிதாக அமைந்து விடும்.

Trending News