புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கெட்ட பழக்கமே இல்ல, உத்தமனாக வாழும் 6 ஹீரோக்கள்.. நிஜத்திலும் அப்பாவை மிஞ்சிய கைதி டில்லி

6 actors who have no bad habits: தற்போது இருக்கும் காலகட்டத்தில் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத நபரை சந்திப்பது ரொம்பவே அபூர்வமாக போய்விட்டது. அதிலும் சினிமா துறையில் இருப்பவர்கள் பற்றி சொல்லவே வேண்டாம், பணம் வசதி இருக்கு என்பதால் உல்லாச வாழ்க்கையில் வாழ வேண்டும் என்பதற்காக எல்லாவித பழக்கத்திற்கும் அடிமையாகி விடுகிறார்கள். ஆனால் இதற்கு விதிவிலக்காக சில நடிகர்கள் எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி பார்க்கலாம்.

சிவகுமார்: இவர் தமிழில் மட்டுமே கிட்டதட்ட 190 படங்களுக்கு மேல் நடித்து மூன்று பிலிம்பேர் விருதுகளையும், இரண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளையும் பெற்றிருக்கிறார். அப்படிப்பட்டவருக்கு முதன்மையான விஷயம் என்றால் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்து குடும்பத்தை சீரமைப்புடன் கொண்டு வர வேண்டும் என்பதுதான். அத்துடன் சமூக சேவை மற்றும் மற்றவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக பேச்சுக்கள் மூலம் கலாச்சாரம் பண்பாட்டை தீவிரமாக கடைப்பிடிக்க கூடியவர். அப்படிப்பட்டவர் எந்தவித கெட்ட பழக்கத்துக்கும் ஆளாகாமல் ஒழுக்கமாக இருந்து மற்றவர்களுக்கு முன் உதாரணமாக வாழ்ந்து வருகிறார்.

அப்பாவை போல் வாழ்ந்து வரும் கார்த்தி

ராமராஜன்: 80களில் குடும்பத்துடன் பார்க்கும் படமாக கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் நடித்து மக்கள் நாயகனாக ரசிகர்கள் மனதை வென்றார். அந்த காலத்தில் இவருடைய படத்துக்கு முன் ரஜினி மற்றும் கமல் படங்கள் வெளி வந்தால் பின்னடைவு தான் சந்திக்கும் என்று சொல்லும் அளவிற்கு ராமராஜன் கொடி கட்டி பறந்தார். அந்த அளவிற்கு மக்களுக்கு பிடித்தமான ஒரு நடிகராக செயல்பட்டார். அப்படிப்பட்டவர் தற்போது வரை எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்.

டி ராஜேந்தர்: காதல், குடும்பம், சென்டிமென்ட் படங்களை எடுப்பதில் பெயர் எடுத்தவர் தான் டி ராஜேந்தர். அதிலும் இவருடைய படம் என்றால் அந்த படத்தை இயக்கி, நடித்து, தயாரித்து, இசையமைத்து போன்ற அனைத்து விஷயங்களிலும் இவரே முன்னே நின்று பண்ணக்கூடிய திறமைசாலி. இப்படிப்பட்டவர் உஷா என்பவரை காதலித்து கல்யாணம் பண்ணி குடும்பம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். மனைவியை இப்படித்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு வரைமுறை போட்டு அதன்படி வாழ்ந்து வருகிறார்.

ஆனந்த்ராஜ்: இவரை முக்கால்வாசி படங்களில் வில்லனாக பார்த்து திட்டியது தான் அதிகம். ஆனால் நிஜத்தில் இவர்தான் ஹீரோ என்று சொல்லும் அளவிற்கு இவரிடம் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாமல் டீ டோட்டலராகவே இருந்திருக்கிறார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத ஒரே வில்லன் நடிகர் ஆனந்த்ராஜ்.

கார்த்தி: அப்பா எட்டடி பாஞ்சா பிள்ளை 16 அடி பாயும் என்று சொல்வார்கள். அது போல தான் சிவக்குமாரை போல கார்த்தியும் வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதற்காக அப்பாவை ரோல் மாடலாக நினைத்து எந்த கெட்ட பழக்கத்திற்கும் ஆளாகாமல் ஒரு ஒழுக்கமான பிள்ளையாக வளர்ந்து வந்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன்: 2கே கிட்ஸ்க்கு மட்டுமல்ல அனைத்து ரசிகர்களுக்கும் இவரை பிடிக்கும் என்று சொல்லும் அளவிற்கு நடிப்பால் அனைவரையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டவர். எந்தவித சினிமா புழக்கமும் இல்லாத இவர் கொஞ்சம் கொஞ்சமாக திறமையை வளர்த்துக் கொண்டு அதன் மூலம் சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தை தொட்டிருக்கிறார். அதனால் கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். எப்படி வந்தோம் என்பதை மறந்து விடக்கூடாது என்று சொல்லும் அளவிற்கு இப்பொழுது வரை எந்த தீய பழக்கத்திற்கு ஆளாகாமல் இருக்கிறார்.

Trending News