செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

ஓவர் கிளாமர் காட்டி பெயரைக் கெடுத்துக்கிட்ட 6 நடிகைகள்.. ஆண் நண்பர்களால் சிக்கிய வாரிசு நடிகை

சினிமாவில் சில நடிகைகள் திறமை இருந்தும் அவர்களது ஒருசில செயல்களால் ரசிகர்களிடம் கெட்ட பெயர்களை வாங்கி தங்களது கேரியரை தொலைத்து விடுகின்றனர். அதிலும் உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் தொடர்ந்து ஆண் நண்பர்களுடன் நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு, அடிக்கடி பாய் ஃப்ரெண்ட்களை மாற்றும் கலாச்சாரத்தை பின்பற்றியதால் ரசிகர்களிடம் அவபெயரை வாங்கியதால் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்பு கிடைக்காமல் போனது.

அமலா பால்: மலையாள நடிகையான இவர், சிந்து சமவெளி என்ற சர்ச்சைக்குரிய படத்தில் நடித்து அதன் பிறகு மைனா படத்தில் பிரபலமானார். பிறகு ஏஎல் விஜய் இயக்கிய தெய்வத்திருமகள், தலைவா போன்ற படத்தில் நடிக்க அமலாபால் அவர் மீது காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டார்.

ஆனால் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர். விவாகரத்துக்குப் பிறகு கிளாமர் தூக்கலாக நடிகையாக மாறிய அமலாபால் பார்ட்டி, பப்களில் ஆண் நண்பர்களுடன் குடித்துவிட்டு கூத்தடிக்கும் புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு தன்னுடைய இமேஜை கெடுத்து கொண்டார். இவர் தயாரித்து நடித்திருக்கும் கடாவர் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓடிடியில் ரிலீஸ் ஆகியிருக்கிறது.

ஸ்ரீ ரெட்டி: சோசியல் மீடியாவில் சர்ச்சைக்கு பெயர் போன ஸ்ரீரெட்டி தெலுங்குப் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பிரபலங்கள் பலரும் தன்னை படுக்கைக்கு பயன்படுத்திவிட்டு ஏமாற்றியதாக பல தெலுங்கு மற்றும் தமிழ் பிரபலங்களை பட்டியலிட்டு அதிர வைத்தார்.

இதனால் தெலுங்கு நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளவில்லை என்பதால் ஹைதராபாத்தில் உள்ள திரைப்பட வர்த்தக சபை முன்பு அரைநிர்வாண போராட்டம் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு அதில் இரட்டை அர்த்தத்துடன் கருத்துக்களையும் டேக் செய்து ட்ரெண்ட் ஆனார். மீ டு(Me Too) மூலம் புதுசு புதுசாக சர்ச்சைகளைக் கிளப்பி சமூக வலைதளங்களில் சர்ச்சை நாயகியாக வலம் வந்து தனது பெயரை கெடுத்துக் கொண்டார்.

யாஷிகா ஆனந்த்: தமிழில் கவலைப்படவேண்டாம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான யாஷிகா ஆனந்த், அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானார். மேலும் சோசியல் மீடியாவில் இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு கிளாமரான நடிகையாக மாறினார்.

சில வருடங்களுக்கு முன்பு நைட் பார்ட்டி சென்றுவிட்டு வரும்போது கார் விபத்தில் சிக்கி படுகாயம் ஏற்பட்டு, அதிலிருந்து மீண்ட யாஷிகா ஆனந்த் பார்ட்டி, பப்களில் ஆண் நண்பர்களுடன் லூட்டி அடிப்பதும், நேரலையில் லிப்லாக் கொடுப்பதும் என இல்லாத ஆட்டம் எல்லாம் போட்டார். பட வாய்ப்பிற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் என்ற நிலைக்கு வந்த பிறகும், இவருக்கு கிடைத்த அவபெயரால் சினிமாவில் தனது கேரியரை தொலைத்து விட்டார்.

ஆண்ட்ரியா: தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமான ஆண்ட்ரியா, அதன்பிறகு பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்தார். பிறகு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தக்கொண்டிருந்த ஆண்ட்ரியா சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றியது மட்டுமல்லாமல் தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்களையும் வெளிப்படையாகப் பேசி முகம் சுளிக்க வைத்தவர்.

ஸ்ருதிஹாசன்:உலக நாயகன் கமலஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து டாப் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருந்தார். தனது ஆண் நண்பர் செய்யும் சேட்டைகளுக்கு வெட்கப்பட்டு சிரிக்கும் வீடியோவையும் பதிவிட்டு சர்ச்சையைக் கிளப்பினார்.

ஒருவேளை அவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என ரசிகர்கள் நினைத்த போது, அடிக்கடி ஆண் நண்பர்களை ஏமாற்றி அவர்களுடன் இன்ஸ்டாகிராமில் செய்யும் லூட்டி கொஞ்சநஞ்சமல்ல. இதனாலேயே இவரது பெயர் கெட்டுப் போனது. இந்த விஷயத்தில் அப்பாவையே மிஞ்சிய மகளாக மாறியிருக்கிறார்.

அஞ்சலி: தமிழ், கன்னடம், தெலுங்கில் பல படங்களில் நடித்து ரசிகர்களுக்கு பரிச்சயமான அஞ்சலி, கடந்த சில வருடங்களாக உடல் பருமன் அதிகமானதால் படவாய்ப்புகள் குறைந்தது. மேலும் இவர் தற்போது கிளாமர் நடிகையாக ஒரு சில படங்களில் கவர்ச்சியான பாடல்களுக்கு நடனமாடி கவர்ச்சி நடிகையாக மாறிவிட்டார்.

இவ்வாறு இந்த 6 நடிகைகளும் சினிமாவில் டாப் நடிகைகளாக வலம் வர வாய்ப்பு கிடைத்தாலும், அதை சரியாக பயன்படுத்தாமல் தங்களது தவறான செய்கைகளால் பெயரை கெடுத்துக் கொண்டதால் படவாய்ப்புகள் இல்லாமல் கேரியரை தொலைத்து விட்டனர்.

Trending News