திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

திரிஷாவுக்கு பின் வந்து காணாமல் போன 6 நடிகைகள்.. 40 வயதிலும் நயன்தாராவை ஓரங்கட்டிய குந்தவை

சினிமாவில் பல வருட காலமாக கனவு கன்னியாக இருப்பவர் தான் த்ரிஷா. அத்துடன் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து ஹீரோக்கு இணையாக அந்தஸ்தை பெற்றிருக்கிறார். இவருக்கு அடுத்து பல நடிகைகள் முன்னணியில் நடித்திருந்தாலும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு காணாமல் போய்விட்டார்கள்.

ஆனால் த்ரிஷா 1999 இல் ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக வந்து நடித்ததில் இருந்து தற்போது 40வயதிலும் முன்னணி ஹீரோயினாக இருக்கிறார். ஏன் லேடி சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் நயன்தாராவை ஓரங்கட்டி இருக்கிறார் குந்தவை. எந்த நடிகைகள் எல்லாம் இவருக்கு பிறகு வந்து காணாமல் போயிருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

Also read: நிச்சயதார்த்தத்தோடு சோலி முடிந்த 5 திருமணம்.. டேட்டிங் உறவால் நின்று போன த்ரிஷா கல்யாணம்

சினேகா: இவர் பெரும்பாலும் அனைத்து மொழிகளிலும் நடித்து புன்னகை அரசி என்ற பட்டத்துடன் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடி சேர்ந்திருக்கிறார். அதிலும் தமிழில் கமல், அஜித், விஜய், பிரசாந்த் போன்ற அனைவர்களுடன் நடித்து வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார். அந்த நேரத்தில் பல ரசிகரின் கனவு கன்னியாகவும் இடம் பிடித்திருக்கிறார். தொடர்ந்து இவரால் அதை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் திருமண வாழ்க்கைக்கு சென்று விட்டார்.

கிரண்: இவர் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் விக்ரமுக்கு ஜோடியாக ஜெமினி என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின் வில்லன், அன்பே சிவம், திவான் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் இவரால் தொடர்ந்து முன்னணியில் வர முடியவில்லை.

Also read: யாரை திருப்தி படுத்த நயன்தாரா தியேட்டர் கட்டறாங்க.! பெரிய உருட்டா இருக்கே வியந்து பார்த்த விக்னேஷ் சிவன்

அசின்: இவர் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் முக்கிய நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வந்தார். அத்துடன் அனைத்து இளம் வயது ஹீரோகளுக்கு ஜோடி சேர்ந்து படங்களில் வெற்றி வாய்ப்பை குவித்து கொடுத்தார். மேலும் ரசிகர்கள் இவருடைய நடிப்பை ரசித்துப் பார்த்த நிலையில் திடீரென்று திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.

பூஜா: இவர் தமிழில் ஜே ஜே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் பல படங்களில் நடித்து வந்த இவர் வித்தியாசமான கதைகளையும் எடுத்து கொஞ்சம் கூட தயங்காமல் கதாபாத்திரத்திற்கு ஏற்ப இவரை மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறார். ஆனாலும் இவருக்கு என்று ஒரு தனி இடத்தை இவரால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.

Also read: வாயினால் அழிந்து நாசமான 5 நட்சத்திரங்கள்.. பாலிவுட் தான் முக்கியம் என எல்லாத்தையும் இழந்த அசின்

சதா: இவர் தமிழில் ஜெயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அனைத்து மொழிகளிலும் கதாநாயகியாக நடித்தார். அத்துடன் முன்னணி நடிகர்களாக இருக்கும் விக்ரம், அஜித், மாதவன் இவர்களுக்கு ஜோடி போட்டு வந்து நிலையில் அதை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள தந்திரம் இல்லாததால் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டார்.

ஜெனிலியா: இவர் தெலுங்கு, இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகையாக வந்தார். இவருடைய குறும்புத்தனமான பேச்சும், துருதுருவென்று செய்யும் செயலும் அனைத்து விதமான ரசிகர்களையும் கவர்ந்தது. இதேபோன்று பல படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்திருந்தால் தற்போது வரை முன்னணி நடிகையாக இடம் பெற்றிருப்பார். ஆனால் நடிப்பதில் ஆர்வம் குறைந்து திருமணம் செய்து கொண்டார்.

Also read: ரொமான்ஸுக்காக 15 மணி நேரம் தவம் கிடந்த இயக்குனர்.. பொறுப்பில்லாமல் தூங்கிய விஜய், த்ரிஷா

Trending News