ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கமல் மீது காதல் வலையில் விழுந்த 6 நடிகைகள்.. திருமணத்தால் நொந்து போன ஆட்டுக்கார அலமேலு

அந்த காலத்தில் கமல் மிகவும் அழகாகவும், நடிப்பு திறமை உள்ளவராகவும் வலம் வந்தார். இதனாலேயே அதிக பெண் ரசிகர்கள் கமலுக்கு இருந்தனர். இது ஒரு புறம் இருக்க நடிகைகளும் போட்டி போட்டுக்கொண்டு கமல் படத்தில் நடிக்க ஆர்வமாக இருந்த காலம் அது.

அந்த சமயத்தில் ஒரே நேரத்தில் ஆறு நடிகைகள் கமல் மீது பைத்தியமாக இருந்துள்ளனர். அதாவது உலக நாயகன் கமலுடன் அதிக படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவருக்கு கமல் மீது காதல் இருந்துள்ளது. இதனால் நேரடியாகவே கமலிடம் தனது மகளை திருமணம் செய்து கொள்ளும்படி ஸ்ரீதேவியின் அம்மா கேட்டுள்ளார்.

Also Read : ஜவான் இந்த கமல் படத்தின் காப்பியா.. மீண்டும் திருட்டு கதையில் சிக்கிய அட்லீ

ஆனால் ஸ்ரீதேவியை தான் அப்படி பார்க்கவில்லை என கமல் மறுத்துவிட்டார். மேலும் நடிகை வாணி கணபதியும் கமலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து பாலிவுட் நடிகையான ரேகாவுக்கும் கமல் மீது கிரஷ் இருந்துள்ளது. ஸ்ரீவித்யாவுக்கு கமல் என்றால் அப்படி ஒரு பைத்தியமாம்.

அவர் மீது அளவற்ற காதல் வைத்திருந்தார். ஆனால் கமல் நான் ஒரு வேறு பெண்ணை காதலிப்பதாக ஸ்ரீவித்யாவிடம் கூறிவிட்டார். ஆனாலும் அதை ஏற்க மறுத்து ஸ்ரீவித்யா விடாப்பிடியாக இருந்தார். கடைசியில் கமலின் திருமணத்தின் போது ஸ்ரீவித்யா மனம் உடைந்து போனாராம்.

Also Read : சிவகார்த்திகேயன் கூட்டணியை உறுதி செய்த கமல்.. இணையத்தில் காட்டுத் தீயாக பரவும் SK21 அறிவிப்பு

அதிலிருந்து மீண்டு வருவதற்கு நீண்ட நாட்கள் ஆகிவிட்டதாம். இதே போல் கமலின் திருமணத்தினால் நடிகை ஸ்ரீபிரியாவும் பெரிதும் பாதிக்கப்பட்டாராம். அதாவது ஆட்டுக்கார அலமேலு படத்தில் தனது திறமையை வெளிப்படுத்தியவர் ஸ்ரீப்ரியா. மிகவும் துணிச்சலான நடிகையான இவர் கமல் ஒருதலையாக காதலித்தார்.

அதன் பிறகு தன்னை மாற்றிக் கொண்டு கமலுடன் தற்போது வரை நட்பாக பழகி வருகிறார். மேலும் கமலின் கட்சியிலும் இவருக்கு முக்கிய பங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கமலை ஸ்ரீவித்யா, வாணி கணபதி, ரேகா, ஜெயசுதா, ஸ்ரீதேவி, ஸ்ரீ பிரியா, கௌதமி ஆகியோர் காதலித்து இருந்துள்ளனர். இதனால் தான் கமலுக்கு சகலகலா வல்லவன் என பெயர் பொருத்தமானதாக அமைந்தது.

Also Read : 10 பவுன்சர்களுடன் பாதுகாப்பாக வந்த கமல்.. ஒத்த ஆளாக வந்து கெத்து காட்டிய சூப்பர் ஸ்டார்

Trending News