புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சிவகார்த்திகேயன் டேட்டிங் செய்து கழட்டிவிட்ட 6 நடிகைகள்.. இமானால் காற்றில் பறக்கும் மானம்

Sivakarthikeyan-imman: லியோ வெளி வருவதற்கு சில வாரங்களுக்கு முன்பாகவே சோசியல் மீடியா முழுவதும் அதன் கண்ட்ரோலில் தான் இருந்தது. ஆனால் ரிலீசுக்கு சில நாட்கள் இருக்கும் போது அதை அப்படியே தன் பக்கம் எடுத்துக்கொண்ட பெருமை சிவகார்த்திகேயனையே சேரும். இதற்கு புள்ளி வைத்தது இமானின் ஒரே ஒரு பேட்டி.

சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று அவர் கூறியதில் இருந்து ஒவ்வொரு விஷயமாக வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது அவருடன் அதிக அளவில் கிசுகிசுக்கப்பட்ட ஆறு நடிகைகள் பற்றிய விவரமும் நம்பவே முடியலையே என சொல்ல வைத்திருக்கிறது. இந்த செய்தி எல்லாம் பல வருடங்களுக்கு முன்பாக வெளிவந்தது தான்.

ஆனால் சிவகார்த்திகேயன் அதை அப்படியே மூடி மறைத்த நிலையில் தற்போது இந்த விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. அதன்படி அஞ்சலி, பிந்து மாதவி, ஓவியா, கீர்த்தி சுரேஷ், ஸ்ரீ திவ்யா, பிரியங்கா மோகன் ஆகிய நடிகைகளுடன் தான் இவர் பெருமளவில் கிசுகிசுக்கப்பட்டு இருக்கிறார். இதில் சில நடிகைகளுடன் அவர் அடுத்தடுத்த படங்களில் நடித்ததும் முக்கிய காரணம்.

ஆனால் இதில் அஞ்சலி பெயர் இருப்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால் ஜெய்யுடன் தான் இவர் டேட்டிங் செய்து திருமணம் வரை சென்றார். சிவகார்த்திகேயன் எப்போது இந்த லிஸ்ட்டில் வந்தார் என்ற கேள்வி அனைவருக்கும் தோன்றலாம். ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் இவர்கள் இருவரும் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்ததாக பல பத்திரிகைகளில் கிசுகிசுவாக வெளிவந்தது.

இதை அங்கு வேலை பார்த்த ஒருவரே வெளிப்படையாக போட்டு உடைத்தது பரபரப்பையும் கிளப்பியது. ஆனால் சோசியல் மீடியா பெரிய அளவில் இல்லாத அந்த நேரத்தில் இது அப்படியே அமுக்கப்பட்டு விட்டது. அதைத்தொடர்ந்து பிந்து மாதவியுடனும் இவர் சேர்த்து வைத்தது பேசப்பட்டார். மேலும் அவருடைய முதல் ஹீரோயின் ஓவியாவும் இந்த லிஸ்டில் இருக்கிறார்.

ஆனால் அந்த நட்பு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லையாம். ஆனால் ஸ்ரீதிவ்யா, கீர்த்தி சுரேஷ், பிரியங்கா மோகன் ஆகியோருடன் இவர் அடுத்தடுத்த படங்களில் நடித்தது பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது. அப்போதெல்லாம் சிவகார்த்திகேயன் தன்னுடைய இணைய கூலிப்படையை வைத்து இதையெல்லாம் வெளியில் வராமல் சரி கட்டி விடுவாராம்.

இதற்காக அவர் காசை தண்ணியாக வாரி இறைத்த கதையும் இப்போது மீடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் கமுக்கமாக செய்து வந்த சிவகார்த்திகேயன் மானம் இப்போது இமானால் காற்றில் பறந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆறு நடிகைகளுடன் இவர் டேட்டிங்கில் இருந்ததாக வெளிவந்துள்ள தகவல் அடுத்த பஞ்சாயத்துக்கு ஆரம்பமாக இருக்கிறது.

Trending News