வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

அயோத்திக்கு மோடி கூப்பிட்டும் தெனாவட்டு காட்டிய 6 பிரபலங்கள்.. வேலை கெடக்குதுன்னு விவசாயம் செய்த தல தோனி

6 Celebrities did not go to Ayodhya: உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் ராமர் கோயிலின் கும்பாபிஷேக நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக நடந்தது. இதில் அரசியல் தலைவர்கள், முன்னணி தொழிலதிபர்கள், மடாதிபதிகள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் என சுமார் 8000 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ஆனால் இதில் நம்முடைய இந்தியாவின் முதல் குடிமகளான ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒதுக்கப்பட்டது ஏன் என்று பலரும் கொந்தளிக்கின்றனர். மேலும் அயோத்திக்கு ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு மோடி அழைத்தும் ஆறு பிரபலங்கள் வராமல் தெனாவட்டு காட்டி இருக்கின்றனர்.

இதற்குக் காரணம் மத்தியில் ஆளும் கட்சி மதத்தை வைத்து அரசியல் பண்ண பார்க்கிறார்கள். இவர்களிடம் 500 ஆண்டுகளுக்கு பின்னால் உள்ள பிரச்சனையின் அரசியலை கேள்வி கேட்க வேண்டும். ராமர் கோயில் திறப்புக்கு பின்னாடி இருக்கும் மத அரசியலை கவனிக்க வேண்டும். மதச்சார்பின்மை இந்தியா எதை நோக்கி நகர்கிறது என்று சிலர் கொந்தளிக்கின்றனர். அதனால்தான் மோடி அழைத்துமே இந்த ஆறு பிரபலங்களும் அயோத்தி செல்லவில்லை.

Also Read: அயோத்தி சென்ற சூப்பர் ஸ்டார் பேசுனதுல எனக்கு விமர்சனம் இருக்கு.. பரபரப்பான பேட்டியை அளித்த பா ரஞ்சித்

அயோத்திக்கு மோடி அழைத்தும் போகாத ஆறு பிரபலங்கள்

அதிலும் தல தோனி தலைக்கு மேல ஆயிரம் வேலை இருக்கிறது என்று நேற்று மும்முரமாக விவசாயம் செய்திருக்கிறார். அதேபோல் தான் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார், சல்மான் கான், முகேஷ் கண்ணா, ஷாருக்கான் உள்ளிட்ட ஆறு பேர் அயோத்திக்கு போக பிடிக்காமல் அதைவிட தங்களுக்கு முக்கியமான வேலை இருக்கிறது என்பதை காட்டிவிட்டனர்.

ஆனால் இவர்களைத் தவிர கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன், தனுஷ், சிரஞ்சீவி, ராம்சரண், கங்கனா ரனாவத் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, அரவிந்த் மகேந்திரா, ரத்தன் டாடா, கௌதம் அதானி ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

Also Read: ரஜினியை விட உலக நாயகன் எவ்வளவோ மேல்.. 30 வருஷத்துக்கு முன்னாடி அயோத்தி பற்றி கமல் கூறிய கருத்து

- Advertisement -spot_img

Trending News