திங்கட்கிழமை, நவம்பர் 18, 2024

சிம்புவால் இருக்கும் தடம் தெரியாமல் போன 6 இயக்குனர்கள்.. நம்பிக்கை துரோகத்தால் மாயமான மன்மதன்

Directors Missing by Simbu: பொதுவாக சிம்பு என்றாலே சர்ச்சை கூறியவர் தான். படப்பிடிப்புக்கு சொன்ன நேரத்திற்கு வரமாட்டார், அப்படியே வந்தாலும் தேவையில்லாத விஷயங்களை பேசி ஏதாவது தகராறு பண்ணக்கூடியவர். அப்படிப்பட்ட இவரை வைத்து படம் எடுப்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. அதையும் தாண்டி சில இயக்குனர்கள் இவரை வைத்து படம் எடுத்ததால் அவர்களுடைய சினிமா கேரியரே தொலைந்து விட்டது. அதில் குறிப்பிட்ட ஆறு இயக்குனர்களைப் பற்றி நாம் இப்பொழுது பார்க்கலாம்.

ஆதிக் ரவிச்சந்திரன்: இவர் சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக ஸ்ரேயா,தமன்னா நடித்தார்கள். இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. அத்துடன் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்கவில்லை. இப்படம் வெளியாகி பல மாதங்களுக்குப் பிறகு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து சிலம்பரசனின் திமிருத்தனமான நடவடிக்கைகள் மற்றும் எங்களுடைய திட்டங்களில் அதிகமாக தலையிட்டதால் எங்களால் நாங்கள் நினைத்தபடி படத்தை கொடுக்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார்கள். இதனால் இப்படத்தின் தோல்விக்கு காரணம் சிலம்பரசன் தான் என்று அவர்களுடைய ஆதங்கத்தை தெரிவித்து இருக்கிறார்கள்.

Also read: ஒரு வழியா பிரச்சனையை முடித்த சிம்பு.. பிரம்மாண்ட படத்துக்கு கிடைத்த கிரீன் சிக்னல்

தரணி: இவர் இயக்கிய படங்களால் தான் விஜய் மற்றும் விக்ரமுக்கு திருப்புமுனையாக சினிமா கேரியர் அமைந்தது. ஆனால் எப்பொழுது சிம்புவை வைத்து படத்தை எடுக்க நினைத்தாரோ அப்பொழுதே இவருடைய கேரியர் பாழாகி போனது. 2010 ஆம் ஆண்டு ஒஸ்தி திரைப்படம் சிம்புவை வைத்து எடுத்தார். ஆனால் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸில் மந்தமான லாபத்தை கொடுத்தது. இதுவே இவர் இயக்கிய கடைசி படமாக போய்விட்டது.

எஸ்.சரவணன்: இவர் ஒளிப்பதிவாளராக கிட்டத்தட்ட 50 படங்களில் பணி புரிந்திருக்கிறார். முதன்முதலாக இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் சிம்புவை வைத்து சிலம்பாட்டம் படத்தை 2008 ஆம் ஆண்டு இயக்கி இருக்கிறார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வணிகரீதியாக வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்தது. ஆனாலும் இயக்குனருக்கு பெரிய அளவில் எவ்வித பிரயோஜனமும் இல்லாததால் அப்படியே சோர்ந்து போய்விட்டார்.

Also read: சிம்புவால் நாசமா போன படம்.. வெற்றி இயக்குனரின் கேரியரையே காலி செய்த சம்பவம்

தருண் கோபி: இவர் கொஞ்சம் முரட்டுத்தனமான இயக்குனர் என்று சொல்லலாம். ஏனென்றால் இவர் இயக்கிய இரண்டு படங்களுமே அப்படித்தான் அடாவடித்தனமாக இருக்கிறது. அதில் விஷாலை வைத்து திமிரு என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து அடுத்த படத்திலும் இதையே ஃபாலோ பண்ணலாம் என்று சிம்புவை வைத்து காளை என்ற படத்தை எடுத்தார். ஆனால் இப்படம் படு மோசமான விமர்சனத்தை பெற்று வணிக ரீதியாக தோல்வியடைந்தது. இத்துடன் இந்த இயக்குனர் சினிமாவிற்கு பெரிய கும்பிடு போட்டுவிட்டு இருக்கும் தடம் தெரியாமலேயே மாயமாக போய்விட்டார்.

துரை: இவர் சிம்புவை வைத்து 2005 ஆம் ஆண்டு தொட்டி ஜெயா என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் எதிர்பார்த்த அளவைவிட விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்று பாக்ஸ் ஆபீசிலும் வெற்றி பெற்றது. ஆனால் இவருக்கும் சிம்புவிற்கும் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட தகராறால் இனிமேல் சிம்பு நமக்கு செட்டே ஆகாது என்று ஒதுங்கி விட்டார்.

ஏ ஜே முருகன்: 2004 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.ஜே.முருகன் இயக்கத்தில் மன்மதன் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் சிம்பு இரட்டை வேடங்களில் முதன் முதலாக நடித்திருக்கிறார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெளியான நேரத்தில் 150 நாட்களுக்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இப்படத்தின் கதையை சிம்புவிடம் சொல்லியபோது அவர் அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன், என்று பல வாக்குறுதிகளை இயக்குனரிடம் கொடுத்து இருக்கிறார். ஆனால் படம் வெளியான பொழுது இயக்குனரை கண்டு கொள்ளாமல் அவரை டீலில் விட்டு விட்டார். இதனால் சிம்பு, இவருக்கு செய்த நம்பிக்கை துரோகத்தால் எங்கே போனார் என்று தெரியாமல் மாயமாக மறைந்து விட்டார்.

Also read: சனியன தூக்கி பனியன்ல போட்ட எஸ்டிஆர்.. சிம்புவின் வாழ்நாள் பெஸ்ட் படத்திற்கு ஆப்பு வைத்த டிஆர்

- Advertisement -spot_img

Trending News