கமல் நடிப்பில் வெளிவந்த எத்தனையோ திரைப்படங்கள் வெள்ளி விழா கண்டு சாதனை படைத்திருக்கிறது. அதில் தீபாவளி வெளியீடாக வந்த ஆறு திரைப்படங்கள் 175 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்திருக்கிறது. அந்த வெள்ளி விழா திரைப்படங்களை பற்றி இங்கு காண்போம்.
சிகப்பு ரோஜாக்கள் பாரதிராஜா இயக்கத்தில் கமல், ஸ்ரீதேவி ஆகியோர் நடிப்பில் 1978ம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. சைக்கோ திரில்லர் பாணியில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் கமல் சைக்கோ கொலைகாரனாக நடித்திருப்பார். தீபாவளிக்கு வெளிவந்த இப்படம் 175 நாட்களுக்கு மேல் ஓடியது.
Also read:தேவர் மகளாக மாறிய அக்ஷரா.. முறுக்கு மீசையில் கெத்து காட்டும் கமல்
தூங்காதே தம்பி தூங்காதே எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் கமலுடன் இணைந்து ராதா, சுலக்ஷனா ஆகியோர் நடித்திருப்பார்கள். தீபாவளி வெளியீடாக வெளிவந்த இந்த திரைப்படம் 275 நாட்களுக்கு மேல் ஓடி பாக்ஸ் ஆபிஸை கலக்கியது.
நாயகன் 1987 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் இப்படம் வெளிவந்தது கமல், சரண்யா பொன்வண்ணன், ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் கமல் வேலு நாயக்கராக நடித்திருப்பார். சரித்திரத்தையே புரட்டி போட்ட இந்த வேலு நாயக்கரின் கதை ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அந்த வகையில் இப்படம் தீபாவளி ரிலீஸ் ஆக வெளிவந்து வெள்ளி விழா கண்டது.
Also read:கமலே எதிர்பார்க்காமல் ஃபெயிலியர் ஆன 5 படங்கள்.. கடனாளியாக தத்தளித்தது தான் மிச்சம்
தேவர் மகன் பரதன் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்தது. கமல்ஹாசன், சிவாஜி கணேசன், கௌதமி, ரேவதி உள்ளிட்ட பல நடிப்பில் வெளிவந்த இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்போதும் கூட இந்த படத்தின் இரண்டாம் பாகம் வேண்டும் என்று ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்த அளவுக்கு அனைவரையும் கவர்ந்த இந்த திரைப்படம் 175 நாட்களை தாண்டி ஓடியது.
அவ்வை சண்முகி கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் கமல், மீனா, ஜெமினி கணேசன், நாகேஷ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். முழுக்க முழுக்க காமெடி கலந்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் கமல், சண்முகி மாமி என்ற பெண் கதாபாத்திரத்தில் வருவார். அனைவரையும் கவர்ந்த அந்த கேரக்டர் இப்போது வரை பேசப்பட்டு வருகிறது.
தெனாலி கடந்த 2000 ம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல், ஜோதிகா, தேவயானி, ஜெயராம் ஆகியோர் நடிப்பில் இப்படம் வெளிவந்தது. இதில் கமல் இலங்கை தமிழ் பேசுபவராக நடித்திருப்பார். காமெடி திரைப்படமாக வெளிவந்த இந்த திரைப்படம் 175 நாட்கள் ஓடியது.
Also read:திருமணத்திற்குப் பின் கமலஹாசனுடன் நடிக்க மறுத்த நடிகை.. இப்ப ராகவா லாரன்ஸுடன் ஜோடி