சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

50 கோடிக்கு மேல் கஜானாவை நிரப்பிய சிவகார்த்திகேயனின் 6 படங்கள்.. மேஜிக்கோடு லாஜிக் காட்டிய மாவீரன்

சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சியில் வாய்ப்பு பெற்று, அதன் பின் வெள்ளி திரையில் தனக்கான அடையாளத்தை உருவாக்கி கொண்டு தற்பொழுது முதல் நிலை கதாநாயகனாய் வலம் வருபவர் தான் சிவகார்த்திகேயன். இந்நிலையில் வசூலில் 50 கோடிக்கு மேல் கஜானாவை நிரப்பிய இவரின் 6 படங்களை பற்றி இங்கு காண்போம்

ரெமோ: 2016ல் காமெடி நிறைந்த படமாய், சிவகார்த்திகேயன் பெண் கதாபாத்திரம் ஏற்று நடித்த படம் தான் ரெமோ. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். காதலை வலியுறுத்தும் இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸ் வசூலாய் சுமார் 52 கோடியை பெற்றது.

Also Read: படு மொக்க, தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்ட விஜய்யின் 6 படங்கள்.. ரத்த கண்ணீர் வர வைத்த சுறா

வேலைக்காரன்: 2017 மோகன் ராஜா இயக்கத்தில் உருவான படம் தான் வேலைக்காரன். இப்படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, சினேகா, பகத் பாசில், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். உணவு கலப்படம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாய் கதை அம்சம் கொண்ட இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸில் 51 கோடியை வசூலித்தது.

நம்ம வீட்டு பிள்ளை: 2019ல் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் நம்ம வீட்டு பிள்ளை. இப்படத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரகனி, சூரி, பாரதிராஜா ஆகிய முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்கள். அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் கதை அம்சம் கொண்ட இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, பாக்ஸ் ஆபிஸில் 70கோடி வசூலை பெற்று தந்தது.

Also Read: நடிகர் முரளியை வைத்து ஹிட் கண்ட இயக்குனரின் புது அவதாரம்.. என்ன 47 வயதில், 23 வயது நடிகை உடன் ஜோடியா?

டாக்டர்: 2021ல் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். காமெடி நிறைந்த படமாய், மக்களின் பேராதரவை பெற்று நல்ல விமர்சனங்களை கண்டு சுமார் 100 கோடி வசூலை அல்லியது.

டான்: 2022ல் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளிவந்த படம் தான் டான். இப்படத்தில் சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, பிரியங்கா அருள் மோகன், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். கல்லூரி பருவத்தில் மேற்கொள்ளும் நிகழ்வை கதையாக கொண்டு செல்லப்பட்டிருக்கும். இப்படத்தின் கிளைமாக்ஸ் இல் இடம்பெறும் தகவல் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று 100 கோடி வசூலை பெற்று தந்தது.

Also Read: கொஞ்சம் மோசமான ரஃக்டு லுக்கை வைத்து ஜெயித்த 6 நடிகர்கள்.. யோகி பாபு போல புகழ் பெற்ற 4 ஆக்டர்ஸ்

மாவீரன்: சமீபத்தில் வெளிவந்த இப்படத்தில் சிவகார்த்திகேயன், அதிதி, யோகி பாபு, சரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்கள். கோழையாய் பயந்து வாழும் ஹீரோ சூப்பர் ஹீரோவாய் மாறுவது போன்று கதை அமைக்கப்பட்டிருக்கும். இவை மேஜிக்கோடு லாஜிக் காட்டும் விதமாய் நல்ல விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபீஸில் சுமார் 78 கோடி வசூலை பெற்றது.

Trending News