September Released Movies: ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் இப்போது வரை வசூலில் சோடை போகாமல் பின்னி பெடலெடுத்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டுமல்ல உலக அளவில் 550 கோடியை கடந்து மாஸ் கட்டிக் கொண்டிருக்கிறது. ‘ஜெயிலர் ஓரம் போங்க’ என அந்தப் படத்திற்கு போட்டியாக செப்டம்பர் முதல் வாரத்தில் மட்டும் 6 படங்கள் வெளியாகிறது.
அதிலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் செப்டம்பர் 1ம் தேதி மட்டும் ரங்கோலி, பரம்பொருள், லக்கி மேன், கிக், கார்மேகம் கலைகின்றன என 5 படங்கள் வரிசையாக ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறது. இந்தப் படங்களுடன் சமந்தா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான குஷி படமும் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது.
Also Read: அஜித், விஜய்யிடம் தோற்றுப் போய் நிற்கும் ரஜினி.. இதுல அடுத்த படம் வேற என்ன நிலைமை ஆகப்போகுதோ?
மேலும் செப்டம்பர்1ம் தேதிக்கு பிறகு தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் குறைந்தது நான்கைந்து படங்களாவது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரசிகர்கள் திரையரங்குகளில் குவிவார்கள். இதை மனதில் வைத்து அடுத்தடுத்து வரிசையாக படங்களை ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் அக்டோபர் மாதம் விஜயதசமியை முன்னிட்டும், நவம்பர் மாதம் தீபாவளி முன்னிட்டு, டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு பல முன்னணி பிரபலங்களின் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. மேலும் 2023 ஆம் ஆண்டில் இதுவரை 140க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி உள்ளது.
Also Read: கைகுலுக்கிய பின் டெட்டாலில் கை கழுவிய அஜித்.. தேவையில்லாத சர்ச்சையை கிளப்பிய விஷமிகள்
அதில் விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு, கவின் நடித்த டாடா, தனுஷின் வாத்தி, சிம்புவின் பத்து தல, சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த விடுதலை, மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன், குட் நைட், போர் தொழில், மாமன்னன், மாவீரன், ஜெயிலர் போன்ற படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றனர். ஆகையால் வரும் மாதங்களில் சில முக்கிய படங்கள் வெளியாகி வசூல் ரீதியான வெற்றி படங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க செய்யப் போகின்றனர்.
அதிலும் தற்போது திரையரங்குகளில் வசூல் வேட்டையாடிக் கொண்டிருக்கும் ஜெயிலர் படத்திற்கு போட்டியாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்கர் பச்சன் இயக்கத்தில், மனித வாழ்வியலை சொல்லும் அழுத்தமான படைப்பான ‘கார்மேகங்கள் கலைகின்றன’ திரைப்படம் முட்டி மோதி ஜெயிக்க காத்திருக்கிறது.