ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

பெண்களுக்கு தைரியத்தை கொடுக்கும் வகையில் வந்த 6 படங்கள்.. கெத்தாக வந்து ஜெயித்துக் காட்டிய ஜோ

6 films that came to give courage to women: கமர்சியல் படங்களுக்கு மத்தியில் பெண்கள் சப்ஜெக்ட் படங்கள் வந்தால் அதற்கு மக்களிடம் ஏகபோக வரவேற்புகள் கிடைத்துவிடும். அதிலும் அந்த படத்தை பார்ப்பதற்கு உற்சாகமாகவும், தன்னம்பிக்கையாகவும் கதைகள் இருந்தால் அதை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறது. அப்படி பெண்களுக்கு தைரியத்தை கொடுக்கும் வகையில் வந்த படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

மொழி: ராதா மோகன் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு மொழி திரைப்படம் வெளிவந்தது. இதில் ஜோதிகா, ஸ்வர்ணமால்யா, பிரித்விராஜ், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை, ஜோதிகாவிற்கு வாய் பேச முடியாமல் அவருடைய சைகையை வைத்து மட்டுமே கதை நகரும். அத்துடன் கிளைமாக்ஸ் காட்சியிலும் பேசாமலேயே அனைவரிடமும் கைதட்டலை பெற்றது. இந்த கதாபாத்திரத்தில் ஜோதிகா தவிர வேறு யார் நடித்தாலும் இந்த அளவிற்கு உணர்வுபூர்வமாக இருந்திருக்காது என்று சொல்லும் அளவிற்கு இப்படத்தின் மூலம் ஜோதிகா அனைவரும் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.

கட்டா குஸ்தி: செல்ல அய்யாவு இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு கட்டா குஸ்தி திரைப்படம் வெளிவந்தது. இதில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், முனீஸ்காந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். குஸ்தி விளையாட்டில் ஆர்வம் உள்ள ஐஸ்வர்யாவை விஷ்ணு விஷால் திருமணம் செய்து கொள்வார். தான் ஒரு வீராங்கனை என்பதை கணவரிடம் மறைத்து வருவார். அடுத்து உண்மை வெளிவந்த பிறகு தன்னுடைய லட்சியத்திற்காக போராடி ஜெயிக்க வேண்டும் என்று முயற்சியில் ஜெயித்து காட்டுவார்.

பொன்னியின் செல்வன்: மணிரத்தினம் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளிவந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த வருடம் இரண்டாம் பாகமும் வெற்றி பெற்றது. இதில் விக்ரம், ஐஸ்வர்யாராய், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ஐஸ்வர்யாராய், த்ரிஷா மற்றும் பூங்கலி கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி கேரக்டர்கள் அனைத்தும் துணிச்சலாகவும் நினைத்த காரியங்களை சாதித்து வெற்றி பெறும் அளவிற்கு கதை நகர்ந்து வரும்.

Also read: டாப் ஹீரோயின்களை ஓரம் கட்டிய ஜோதிகா.. 45 வயதில் சேர்த்த மொத்த சொத்து மதிப்பு

36 வயதினிலே: ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு 36 வயதினிலே திரைப்படம் வெளிவந்தது. இதில் ஜோதிகா, ரகுமான், அபிராமி, நாசர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ஜோதிகா, கணவன் குழந்தை மற்றும் குடும்பத்துக்காக தன் சுய கௌரவத்தை விட்டு நான்கு சுவற்றுக்குள்ளே முடங்கிக் கிடப்பார். ஆனால் அப்படி இருக்கும் பட்சத்தில் அதே கணவன் மற்றும் குழந்தையால் ஒதுக்கப்படுவதால் எப்படி தன்னை நிரூபித்து வெற்றி பெறுகிறார் என்பதை கெத்தாக நடித்துக் காட்டியிருப்பார்.

அறம்: கோபி நயினார் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு அறம் திரைப்படம் வெளிவந்தது. இதில் நயன்தாரா, ராமச்சந்திரன் துரைராஜ், வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் நயன்தாரா நேர்மையான கலெக்டராக இருந்து இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்ட ஒரு குழந்தையை காப்பாற்றும் விதமாக அதிகமான ரிஸ்க்களை எடுத்து நம்பிக்கையுடன் செயல்படும் விதமாக கதை நகர்ந்து வரும். அந்த வகையில் எந்த ஒரு சூழ்நிலையிலும் தைரியத்தை கைவிடாமல் தொடர்ந்து முயற்சி செய்து வந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஏற்ற மாதிரி இருக்கும்.

கனா: அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு கனா திரைப்படம் வெளிவந்தது. இதில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன், தர்ஷன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதைையானது பெண்கள் கிரிக்கெட் விளையாட கூடாது என்று முட்டுக்கட்டை போடுபவர்களுக்கு மத்தியில் தன்னுடைய கனவை நிறைவேற்றும் விதமாக துணிச்சலுடன் போராடி கடைசியில் நினைத்ததை அடைந்த திருப்தியுடன் ஜெயித்து கட்டி இருப்பார்.

Also read: Shaitaan Movie Review- ஜோதிகாவை ஆட்டிப்படைக்கும் சைக்கோ மாதவன்.. அஜய் தேவ்கனின் சைத்தான் முழு விமர்சனம்

Trending News