Violent Tamil Movies: தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான படங்களில் ஓவர் வயலன்ஸ் காட்டி பிரச்சனையில் சிக்கிய நிறைய படங்கள் இருக்கின்றது. அதிலும் நேற்று வெளியான ஜெயிலர் படத்தை விட 80களில் வெளியான படம் ஒன்றிற்கு சென்சார் போர்டு தடை விதித்திருக்கிறது. அந்த அளவிற்கு படத்தில் வன்முறையை காட்டி இருக்கின்றனர்.
குருதிப்புனல்: உலகநாயகன் கமலஹாசன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் இருவரும் ஐபிஎஸ் அதிகாரியாக மிரட்டிவிட்ட படம் தான் குருதிப்புனல். காவல்துறைக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் யுத்தம் தான் இந்தப் படம். இதில் இருதரப்பிற்கும் இடையே நடக்கும் சண்டை மற்றும் மோதல் காட்சிகளால் படம் முழுக்கவே வன்முறையாக இருக்கும்.
ஊமை விழிகள்: விஜயகாந்த், அருண் பாண்டியன், கார்த்திக், சந்திரசேகர், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் இணைந்து நடித்த கிரைம் திரில்லர் படம் தான் ஊமை விழிகள். இதில் ரவிச்சந்திரன் மற்றும் மலேசியா வாசுதேவன் இருவரும் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருப்பார்கள். இந்த படம் திரையரங்கில் 150 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை படைத்தது. அதிலும் இந்த படத்தில் கண்களை நேசிக்க கூடிய வில்லன் பார்க்கக்கூடிய பெண்களின் கண்களை எடுக்க விரும்புவது போல் கொடூரமான சம்பவங்கள் நிகழும்.
இதில் அடுத்தடுத்து நிகழும் மரணத்திற்கு காரணத்தை கண்டுபிடிக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் வில்லன்களுக்கும் இடையே ஆன மோதல் இந்த படத்தில் கொடூரமாக காட்டப்பட்டிருக்கும். இதனால் இந்தப் படத்திற்கு அப்போதே சென்சார் தடை விதித்ததும் குறிப்பிடத்தக்கது.
Also Read: ஜெயிலரை பார்த்தபின் நெல்சனுக்கு போன் போட்ட விஜய்.. என்ன சொன்னார் தெரியுமா.?
ஹேராம்: கமலஹாசன் இயக்கி தயாரித்து திரைக்கதை எழுதி நடித்த திரைப்படம் தான் ஹேராம். இந்த படம் முழுக்க துப்பாக்கி சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டே இருக்கும். அந்த அளவிற்கு கலவரங்களும் துப்பாக்கி சூடும் நிகழும். அது மட்டுமல்ல வன்முறைகளும் கலவரங்களும் இந்த படத்தில் தலை துக்கி நிற்கும். கழுத்தை அறுக்கும் காட்சிகளும் பெண்களை வன்கொடுமை செய்யும் காட்சியும் இதில் காட்டப்பட்டிருக்கும்.
விசாரணை: சமீப காலமாகவே லாக்கப் டெத் அதிகரித்துக் கொண்டிருக்கிறது, அதை வெட்ட வெளிச்சமாக்கிய திரைப்படம் தான் விசாரணை. வெற்றிமாறன் எழுதி இயக்கிய இந்தப் படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி தைரியம் வேண்டும். ஏனென்றால் இந்த படத்தில் அப்பாவிகளாக இருக்கும் நான்கு பேரை கைது செய்து அவர்கள் மீது பொய் வழக்கை பதிவு செய்து, அதை ஒத்துக் கொள்ளும்படி அடித்தது துவைப்பார்கள். இவர்கள் கைதிகளை அடிக்குவதற்காக ஒவ்வொரு முறையும் கொடூரமான ஆயுதங்களை பயன்படுத்தி கடைசியில் என்கவுண்டரும் செய்து விடுவார்கள். இந்த படம் கொடூரத்தின் உச்சத்தைக் காட்டியது.
Also Read: சர்வதேச அளவில் ட்ரெண்டான தமன்னா.. காவலா பாட்டுக்கு காரணமான 2 பேர்
நடுநிசி நாய்கள்: ஓவர் வயலன்ஸ் காட்டிய படங்களில் நடுநிசி நாய்கள் படமும் முக்கிய இடத்தைப் பிடிக்கும். ஏனென்றால் இந்த படத்தில் எட்டு வயது தாய் இல்லாத சிறுவனுக்கு அவருடைய தந்தையே அந்தரங்க டார்ச்சர் செய்வதாக படத்தில் காட்டி இருப்பார்கள். அதன் தொடர்ச்சியாக கதாநாயகன் கொடூரமாக கத்தியால் கொலை செய்வார். இப்படி அடுக்கடுக்காக படம் முழுக்க கொடூரமான காட்சிகளை நிரம்பி இருக்கும்.
ஜெயிலர்: அண்ணாத்த படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஜெயிலர் படம் நேற்று ரிலீஸ் ஆகி திரையரங்கை அலங்கரித்துள்ளது. இந்த படத்தில் ஃபேமிலி சென்டிமென்ட் இருந்தாலும் அதைவிட அதிகமாக வன்முறைதான் இருக்கிறது. ஏனென்றால் பூனை போல் இருக்கும் சூப்பர் ஸ்டார் தன்னுடைய மகனுக்காக புலி போல் மாறிவிடுகிறார். இதனால் அவர் கையில் துப்பாக்கியுடன் எதிரிகளை வேட்டையாடும் காட்சி பதைபதைக்க வைக்கும் அளவுக்கு இருக்கிறது.
Also Read: பழம் தின்னு கொட்டை போட்டவர்கள் கொடுத்த ஜெயிலர் ரிவ்யூ.. பத்திரிக்கையாளர் ஷோவில் நடந்த கலாட்டா