சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

சிவகார்த்திகேயனை ஆலமரமாய் வளர்த்தவிட்ட 6 படங்கள்.. 100 கோடி வசூலை தாண்டிய இரண்டு படங்கள்

சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தனது சினிமா பயணத்தை துவங்கிய நடிகர் சிவகார்த்திகேயன் வெள்ளித்திரைக்கு 2012 ஆம் ஆண்டு வெளியான மெரினா படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு 11 ஆண்டுகள் சினிமாவில் 21 படங்களை அசால்டாக நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். அதிலும் சிவகார்த்திகேயனை ஆலமரமாய் வளர்த்துவிட்ட 6 படங்கள் இன்றும் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களின் லிஸ்டில் உள்ளது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்: 2013 ஆம் ஆண்டு இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் அதிரடி காமெடி திரைப்படமாக வெளியான இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதில் போஸ் பாண்டியனாக சிவகார்த்திகேயன் கொடுத்த அலப்பறை நிஜமாகவே கிராமத்தில் சுற்றி தெரியும் இளைஞர்களை அப்படியே பிரதிபலித்தது. இந்தப் படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் பட்டித் தொட்டி எங்கும் பேமஸ் ஆனார்.

ரஜினி முருகன்: சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்த இந்த படத்தில் இவர்களுடன் சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதில் ரஜினி முருகனாக சிவகார்த்திகேயன் மதுரையை சேர்ந்த வேலையில்லா இளைஞர் போல் நடித்து மாஸ் காட்டியிருப்பார். இதில் சூரி உடன் சிவகார்த்திகேயன் செய்த டைமிங் ரைமிங் காமெடிகள் அனைத்தும் இப்போதும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. இந்த படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து குவிய துவங்கியது.

Also Read: பாக்ஸ் ஆபிஸை கலக்கும் சிவகார்த்திகேயன்.. 11 வருடத்தில் செய்த ஒட்டுமொத்த சாதனை

நம்ம வீட்டு பிள்ளை: தமிழ் சினிமாவிற்கு எவ்வளவோ அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் படங்கள் வெளி வந்தாலும் நகைச்சுவை உணர்வுடன் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய இந்த படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தார் . கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடித்தார். இவர்களுடன் சூரி, பாரதிராஜா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இந்தப் படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்கள் குவிந்தது மட்டுமல்லாமல் திரையரங்கில் வசூலிலும் சக்கை போடு போட்டது. மேலும் டைட்டிலுக்கு ஏற்ப சிவகார்த்திகேயன் ரசிகர்களின் ஒவ்வொருவரின் வீட்டுப் பிள்ளையாகவும் மாறினார்.

டாக்டர்: 2021 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் டாக்டராக நடித்திருந்த இந்த படத்தில் கடத்தப்பட்ட சிறுமியை மருத்துவரான சிவகார்த்திகேயன் துணிச்சலுடன் எவ்வாறு செயல்பட்டு காப்பாற்றினார் என்பதுதான் படத்தின் கதை. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது மட்டுமின்றி இந்த படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று 100 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்ததும் குறிப்பிடத்தக்கது.

Also Read: ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் செய்ய போகும் சம்பவம்.. ரஜினி கொடுத்த அந்த வாய்ப்பு

டான்: அட்லியின் உதவி இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2022 ஆம் ஆண்டு டான் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் காதல், காமெடி, டான்ஸ், பைட், சென்டிமென்ட் என அனைத்தையும் பூர்த்தி செய்து இளசுகளை கவரும் விதத்தில் உருவாக்கப்பட்டது. வலுக்கட்டாயமாக இன்ஜினியரிங் படிக்கும் மாணவர், அங்கு படிக்காமல் மாணவர்கள் மத்தியில் டான் ஆக சுற்றி வருவது போல் சிவகார்த்திகேயன் இதில் மாஸ் காட்டி இருப்பார். மேலும் இதில் அவர் செய்யும் சேட்டைகள் அனைத்தும் பார்ப்பதற்கு ரசிக்கும் வகையில் இருந்தது. இந்த படமும் திரையரங்கில் தாறுமாறாக ஓடி 100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது.

கனா: கிரிக்கெட் மற்றும் விவசாயத்தைப் பற்றி ஆணித்தரமாக பேசும் இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து அருண்ராஜா காமராஜ் எழுதிய இயக்கியுள்ளார். இதில் கிரிக்கெட்டே தெரியாத ஐஸ்வர்யா ராஜேஷ் தத்ரூபமாக நடித்து ரசிகர்களின் கைதட்டுகளை வாங்கி குவித்தார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கோச் ஆக வந்த சிவகார்த்திகேயன் தன்னுடைய அல்டிமேட் பெர்ஃபார்மன்ஸை காட்டிருப்பார். மேலும் இதில் பெண்களும் கிரிக்கெட்டில் சாதிக்கலாம் என்பதை வெளிக்காட்டும் விதத்தில் படத்தை உருவாக்கியதால் நல்ல விமர்சனம் கிடைத்தது. அதிலும் குறிப்பாக ஸ்போர்ட்ஸ் படங்களுக்கு உரிய டெம்ப்ளேட்டுகளை உடைத்தெறிந்த படமாகவும் பார்க்கப்பட்டது.

Also Read: ஜெயிலர் படத்தில் வந்த காசை சிவகார்த்திகேயன் என்ன செய்தார் தெரியுமா.? பலரையும் கலங்க வைத்த சம்பவம்

இவ்வாறு இந்த 6 படங்கள் தான் சிவகார்த்திகேயனின் கெரியருக்கு திருப்புமுனையாக அமைந்தது மட்டுமல்லாமல் தளபதி விஜய் போன்றே குழந்தைகள் மற்றும் பெண்கள் விரும்பும் கதாநாயகனாக சிவகார்த்திகேயனை உருவாக்கியது.

- Advertisement -spot_img

Trending News