ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ரஜினி ஹீரோயிசம் காட்டாத 6 படங்கள்.. நூறாவது படத்தில் தோற்றுப் போன தலைவர்

6 films where Rajini did not show heroism: ரஜினி படங்கள் என்றாலே அவருக்கென்று தனித்துவமான நடிப்பும், ஸ்டைலும் , ஏகப்பட்ட பஞ்ச் டயலாக்குகள் அனைத்தும் இருக்கும். இதுவே ரசிகர்களை கவர்ந்து கோடிக்கணக்கான மக்கள் மனதில் இடம் பிடித்ததற்கான முக்கிய காரணம். ஆனால் எந்தவித ஹீரோயிஸமும் காட்டாமல் எதார்த்தமான நடிப்பை மட்டுமே வைத்து ரஜினி ஒரு சில படங்களில் நடித்து வெற்றி பெற்று இருக்கிறார். அந்த படங்களை தற்போது பார்க்கலாம்.

முள்ளும் மலரும்: இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் முள்ளும் மலரும் திரைப்படம் வெளிவந்தது. இதில் சரத்பாபு, ஜெயலட்சுமி, சோபா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ரஜினி தன்னுடைய தங்கச்சியின் வாழ்க்கைக்காகவும் சந்தோஷத்துக்காகவும் எடுத்து வைக்கும் ஒவ்வொரு விஷயமும் சாதாரண குடும்பத்தில் இருக்கும் ஒரு அண்ணனின் ஏக்கமாக தென்பட்டிருக்கும்.

கை கொடுக்கும் கை: இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் கை கொடுக்கும் கை. இதில் ரஜினி, ரேவதி மற்றும் சின்னி ஜெயந்த் நடித்திருப்பார்கள். இப்படத்தின் கதையானது பார்வையற்று நிற்கும் ரேவதியை திருமணம் செய்து அவருடன் சந்தோஷமாக குடும்பத்தை நடத்தி வருவார். ஆனால் சில சூழ்ச்சியால் ரேவதி உடல் அளவில் பாதிப்பு அடைந்து விடுவார். அதன் பின்னும் ரேவதியை கண்ணும் கருத்துமாய் பாதுகாத்து குடும்ப வாழ்க்கையை மேற்கொள்வார். இப்படம் 100 நாட்களை தாண்டி வெற்றி படமாக ஹிட் அடித்தது.

Also read: மணிரத்னத்தால் முடியாமல் போன காரணம் காரியம்.. மீண்டும் சேர்ந்து நடிக்கப் போகும் ரஜினி, கமல்

உருவங்கள் மாறலாம்: எஸ்வி ரமணன் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் உருவங்கள் மாறலாம் திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவாஜி கணேசன், கமல், ஜெய்சங்கர், வெண்ணிறாடை மூர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஒய் ஜி மகேந்திரன் மற்றும் சுகாசினி நடித்திருப்பார்கள். அத்துடன் இதில் கடவுளின் வெவ்வேறு வடிவங்களில் ரஜினிகாந்த் அவருடைய தீவிர கடவுளான ஸ்ரீ ராகவேந்திரா பக்தராக காட்சியளித்து இருப்பார்.

ஆறிலிருந்து அறுபது வரை: எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு ஆறிலிருந்து அறுபது வரை திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, ஃபடாஃபட் ஜெயலட்சுமி, சோ மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது வறுமையால் வாடும் சந்தானம் கேரக்டரில் ரஜினி ஒரு நல்ல பொறுப்பான கணவன் மற்றும் அப்பாவாக நடிப்பை கொடுத்திருப்பார். கடைசியில் பெற்ற பிள்ளைகள் ஒவ்வொரு திசைக்கு போன நிலையில் மனைவியை இழந்து மனவேதனையில் தவிக்கும் எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.

அக்னி சாட்சி: கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு அக்னி சாட்சி திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவக்குமார், சரிதா மற்றும் கேஎஸ் ஜெயலட்சுமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விருந்தினர் தோற்றத்தில் ரஜினிகாந்த் என்டரி கொடுத்து மற்ற படங்களில் காட்டிய ஹீரோயிசம் எதுவும் இல்லாமல் சாதாரண ஒரு கேரக்டரை காட்டி இருப்பார்.

ஸ்ரீ ராகவேந்திரா: எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு ரஜினியின் நூறாவது படமாக ஸ்ரீ ராகவேந்திரா படம் வெளிவந்தது. இதில் லட்சுமி, விஷ்ணுவர்தன், டெல்லி கணேசன், நிழல்கள் ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை ஆனது ராகவேந்திரா தீர்த்தர் பிறந்தது முதல் மகாசமாதி வரையிலான வாழ்க்கையே மையமாக காட்டப்பட்டிருக்கும். அந்த வகையில் ரஜினி இதில் ஒரு சாமியாராக நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு மக்களிடம் இந்த படம் வெற்றி பெறவில்லை.

Also read: அச்சு அசல் இளம் வயது ரஜினியாகவே மாறிய தனுஷின் மூத்த மகன்.. வைரலாகும் புகைப்படம்

Trending News