வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

டாப் ஹீரோக்கள் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடித்த 6 படங்கள்.. நானே வருவேன் படத்தில் மிரட்டிய தனுஷ்

டாப் ஹீரோக்கள் ஒரு வலுவான திரைக்கதை உள்ள திரைப்படத்தில் நடித்து வெற்றி பெற வேண்டும் என்பதுதான் அவர்களுடைய இலக்காக இருக்கும். ஆனால் தற்போது திரைக்கு வரும் பல தமிழ் திரைப்படங்களில் நாயகனை விட வில்லன் கதாபாத்திரம் பெரிதும் பேசப்படுகிறது.

ஒரு திரைப்படத்தின் அதிரடி மற்றும் திரில்லர் கலந்த வில்லன் கதாபாத்திரத்தின் அழுத்தம் கொண்டே படத்தின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. அதையே நாம் செய்தால் என்ன என, சில பிரபலங்கள் ஒரே படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ஹிட் கொடுத்து இருக்கின்றனர்

எந்திரன்: 2010 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ஆகும். இதில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் ஜோடி சேர்ந்துள்ளனர். இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வசூலிலும் தாறுமாறாக வெற்றி பெற்றது.

இதில் சிட்டி என்கின்ற ரோபோவாக சூப்பர் ஸ்டார் தனது அல்டிமேட் நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். இத்திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் மற்றும் தொழில்நுட்பம் பலரால் பாராட்டப்பட்டு பல விருதுகளையும் வென்றுள்ளது. படத்தின் தொடர்ச்சியாக 2.0 படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

Also Read: வசூல் வேட்டையாடிய 10 படங்கள்.. எந்த படம் எவ்வளவு வசூல் தெரியுமா?

ஆளவந்தான்: 2001 ஆம் ஆண்டு வெளியான ஆளவந்தான் திரைப்படத்தில் கமலஹாசன் மனிஷா கொய்ராலா மற்றும் பலர் நடித்துள்ளனர். கமல்ஹாசனின் மாறுபட்ட நடிப்பில் வெளியாகிய பிரபலமான திரைப்படமாகும். இத்திரைப்படத்திற்காக இவர் உடல் எடையை குறைத்து இந்த கதாபாத்திரத்தின் வேற்றுமையை திரையில் காண்பித்துள்ளார்.

வாலி: 1999 ஆம் ஆண்டு எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்த வாலி திரைப்படம் மக்கள் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்துள்ளது. இதில் அஜித் குமாருடன் சிம்ரன் மற்றும் ஜோதிகா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகின. வாலி திரைப்படத்தில் ஹீரோ, வில்லன் என இரண்டு கதாபாத்திரத்தில் அஜித் நடித்து பல விருதுகளை பெற்றுள்ளார். இத்திரைப்படத்தினை தொடர்ந்து வில்லன் படத்திலும் நடித்து புகழ்பெற்றுள்ளார். இவருடைய சினிமா கேரியரின் வளர்ச்சிக்கு என்ன படங்கள் முக்கிய காரணமாக அமைந்தது.

Also Read: இதுவரை அதிக ஷேர்களை தட்டி தூக்கிய 10 தமிழ் படங்கள்.. பாதிக்கு பாதி தளபதி ராஜ்ஜியம் தான்!

அழகிய தமிழ் மகன்: 2007 ஆம் ஆண்டு இயக்குனர் பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான அழகிய தமிழ் மகன் திரைப்படம் விஜயின் நடிப்பில் முதன் முதலில் வெளிவந்த இரட்டை வேட திரைப்படம் ஆகும். இதில் விஜயுடன் நமீதா, ஸ்ரேயா சரண், சந்தானம் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் விஜய்  மாஸ் காட்டியிருப்பார்.

24: 2016 ஆம் ஆண்டு விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யாவுடன் சமந்தா, நித்யா மேனன், ருத் பிரபு ஆகியோர் நடித்துள்ளனர். டைம் ட்ராவலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் சூர்யா 3 கதாபாத்திரத்தில் தோன்றியிருப்பார். இதில் அப்பா மகனாகவும் தோற்றத்தில் மாற்றம் காட்டி இருக்கும் சூர்யா, மூன்றாவது வேடத்தில் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.

நானே வருவேன்: இயக்குனர் செல்வராகவன் இயக்கிய இத்திரைப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் வித்தியாசமாக நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருப்பார். தனுஷின் நடிப்பில் வெளியான நானே வருவேன் திரைப்படம் மிரட்டலான ஹாரர் திரில்லர் கதையை மையமாக கொண்டு அமைந்துள்ளது.

Also Read: 200 கோடிக்கு மேல் வசூலை தட்டிச்சென்ற படங்களின் வரிசை.. அரண்டு போன திரையுலகம்!

இவ்வாறு இந்த 6 படங்களிலும் மாஸ் ஹீரோக்கள் தனது திறமைகளை வில்லன் மற்றும் ஹீரோ என இரட்டை வேடங்களில் நடித்து மக்கள் மனதில் இன்றளவும் நிலைத்து இருக்கின்றன.

Trending News