வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஹீரோவை காதலித்த அக்கா தங்கை கதை அம்சம் கொண்ட 6 படங்கள்.. மாத்தி மாத்தி விட்டுக் கொடுத்த ரம்பா,தேவயானி

மக்களின் ஆழ்மனதை விட்டு நீங்காத அளவிற்கு தமிழ் சினிமாவில் காதலை உணர்த்தும் படங்கள் இடம் பிடித்திருக்கிறது. அதுவும் அக்காலம் முதல் இக்காலம் வரை இது போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கின்றன.

மேலும் ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா தங்கைகள் ஒரு ஹீரோவை காதலிப்பது போன்றும். அதில் யாரை ஹீரோ மணக்கிறார் என்ற சஸ்பென்சை உருவாக்கும் விதமாக படம் அமைந்திருக்கும். அது போன்று அமைந்த ஆறு படங்களை பற்றி இங்கு காணலாம்.

Also Read:கமலின் மருதநாயகத்தை போல ரஜினி, அஜித், விஜய்க்கு டிராப் ஆனா 11 படங்களின் லிஸ்ட்

கருத்தம்மா: 1994ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இப்படம் தேசிய விருது பெற்றது. இதில் ராஜா, ராஜஸ்ரீ,சரண்யா, மகேஸ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் ராஜா ராஜஸ்ரீயை காதலிப்பார் ஆனால் மகேஸ்வரி ஹீரோவை காதலிப்பது போன்று முக்கோண காதலாக காட்டப்பட்டிருக்கும். மேலும் இப்படத்தில் இடம்பெறும் இரு ஹீரோயின்களும் அக்கா தங்கையாக நடித்திருப்பார்கள்.

ராஜகுமாரன்: 1994ல் பிரபு, நதியா மற்றும் மீனா நடிப்பில் வெளிவந்த படம் தான் ராஜகுமாரன். இதில் வரும் நதியாவும், மீனாவும் பிரபுவின் முறை பெண்களாக நடித்திருப்பார்கள். இந்த சூழ்நிலையில் சிக்கி கொள்ளும் பிரபு இப்படத்தில் மீனாவை மணக்க வேண்டி இருக்கும். ஆனால் அதை அறிந்த இவர் காதலியான நதியா தற்கொலையில் ஈடுபடுவது போன்று கதை கொண்டு செல்லப்பட்டிருக்கும்.

Also Read:தேவயானிக்கு இவ்வளவு பெரிய மகள்களா? அடேங்கப்பா! வாயடைத்துப் போன ரசிகர்கள்

காதல் பரிசு: 1987ல் கமல், அம்பிகா, ராதா மற்றும் ராஜ்குமார் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார்கள். இப்படத்தில் கமல் அம்பிகாவை காதலிப்பார். இருப்பினும் ராஜ்குமார் சேதுபதியின் சூழ்ச்சியில் சிக்கிக் கொள்கிறார் ஹீரோயின். அதன்பின் அதை அறிந்து இவரை பிரிந்து செல்கிறார் ஹீரோ. மேலும் அம்பிகாவின் தங்கையான ராதாவை இவர் காதலிப்பது போல இக்கதை கொண்டு செல்லப்பட்டிருக்கும்.

நினைத்தேன் வந்தாய்: 1998ல் வெளிவந்த நினைத்தேன் வந்தாய் படத்தில் விஜய், தேவயானி மற்றும் ரம்பா நடித்திருப்பார்கள். இப்படத்தில் இடம்பெறும் இரு ஹீரோயின்களும் சகோதரிகள் ஆவார்கள். ஹீரோவின் கனவில் தோன்றும் பெண்ணாக ரம்பா இடம்பெற்றிருப்பார். இதில் விஜய்க்கு பார்த்த பெண்ணாக தேவயானி வந்திருப்பார். இப்படத்தின் இறுதியில் இருவரும் தன் காதலை ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பது போன்று கதை அமைந்திருக்கும்.

Also Read:நயன்தாராவின் அடுத்த 5 பிரம்மாண்ட படங்கள்.. ரெட்டை குழந்தைக்கு தாயாகியும் மார்க்கெட் குறையல

பிரண்ட்ஸ்: 2001ல் வெளிவந்த பிரண்ட்ஸ் படத்தில் தேவயானி, அபிநயஸ்ரீ ,சூர்யா,விஜய் ஆகியோர் நடித்திருப்பார்கள். இப்படத்தில் விஜய்யும் சூர்யாவும் சக நண்பர்களாக வருவார்கள். ஆரம்பத்தில் விஜய்யின் மேல் அபிநயஸ்ரீக்கு ஒரு க்ரஷ் ஏற்படுகிறது. பின்னர் பத்மினியாக வரும் தேவயானியை மணந்து கொள்கிறார் ஹீரோ. இப்படத்திலும் இரு ஹீரோயின்களும் அக்கா தங்கைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

யாரடி நீ மோகினி: 2008ல் வெளிவந்த படத்தில் தனுஷ்,நயன்தாரா மற்றும் சரண்யா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்திலும் இரு ஹீரோயின்களும் அக்கா தங்கைகளாக இடம் பெற்றிருப்பார்கள். தனுஷ் நயன்தாராவை காதலிப்பது தெரியாமல் இவரின் தங்கையான சரண்யாவிற்கு ஹீரோ மீது ஒரு க்ரஷ் ஏற்படுகிறது. இறுதியில் உண்மையை உணர்ந்து தங்கை விலகி விடுகிறார். அதன்பின் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர்.

Also Read:லியோ படத்தில் லோகேஷ் வைத்திருக்கும் ட்விஸ்ட்.. இயக்குனர் மிஸ்கின் கொடுத்த அப்டேட்

Trending News