ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

6 கிளாமர் குயின்ஸ் சேர்ந்து நடித்த ஒரே படம்.. கவர்ச்சியில் வீழ்த்தி விடலாம் என நினைத்து கிரண் வாங்கிய கும்மாங்குத்து

Glamour Heriones: எவ்வளவு பெரிய ஹிட் ஹீரோ நடித்தாலும் அந்தப் படத்தில் ஒரு கவர்ச்சி நடிகையை ஒரு சில சீன்களுக்கு நடிக்க வைப்பது தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதியாக இருந்தது. கிளாமராக நடிப்பதற்கு என்று தனியாக நடிகைகளும் இருந்தார்கள். சிஐடி சகுந்தலா, சில்க் ஸ்மிதா, நமீதா போன்றவர்கள் எல்லாம் இந்த லிஸ்டில் இருந்த நடிகைகள் தான். ஆனால் சமீப காலமாக கதாநாயகிகளே தாராளமாக கவர்ச்சி காட்ட ஆரம்பித்து விட்டதால் இந்த கிளாமர் ஹீரோயின் கலாச்சாரம் தமிழ் சினிமாவில் இப்போது இல்லை.

ரஜினி மற்றும் கமலஹாசன் படங்கள் என்றால் கூட அந்த படத்தை ஓட்டுவதற்கு சில்க் ஒரு பாட்டுக்காவது ஆட வேண்டும் என்ற கட்டாயம் அப்போது இருந்தது. அதேபோன்றுதான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நமிதா இருந்தாலே படம் ஹிட் என இருந்தது. ஒரு படத்தில் ஒரு கிளாமர் ஹீரோயின் நடித்தாலே மிகப்பெரிய விஷயம் என இருந்த காலகட்டத்தில், ஒரே படத்தில் ஆறு கிளாமர் ஹீரோயின் சேர்ந்து நடித்து இருக்கிறார்கள்.

கிளாமர் குயின்ஸ்

மங்கை ஹரி ராஜன் என்னும் இயக்குனர் தான் இந்த வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு அவர் எழுதி இயக்கிய படம் தான் இளமை ஊஞ்சல். பேருக்கு ஏற்றபடி அதிக இளமை துள்ளலுடன் தான் இந்த படம் இருந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அந்த படத்தில் ஒன்று சேர்ந்து நடித்த ஆறு கிளாமர் நடிகைகள் காட்டிய தாராள கவர்ச்சி தான்.

Also Read:நடிகையின் கன்னத்தை பதம் பார்த்த சில்க்.. கடைசி வரை வெறுப்புடன் இருந்த பிரபலம்

கல்லூரி மாணவர்கள் எல்லோரும் இணைந்து ஒரு இன்பச் சுற்றுலாவுக்காக மலைப்பிரதேசத்திற்கு செல்கிறார்கள். அங்கு பெண்கள் அடுத்தடுத்து கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். அவர்களை யார் கடத்தி கொலை செய்வது, எதற்காக இந்த கொலை நடக்கிறது என்பதை கண்டுபிடிக்கும் மர்மமான திரில்லர் கதை தான் இளமை ஊஞ்சல் என்னும் படம்.

இந்த படத்தில் நமீதா, கிரண் ரத்தோட், கீர்த்தி சாவ்லா, மேக்னா நாயுடு, சிவானி சிங், ஆர்த்தி என ஆறு கிளாமர் ஹீரோயின்ஸ்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து விஜயகுமார், பாண்டு, பாண்டியராஜன், அனு மோகன், டி.பி கஜேந்திரன், போண்டாமணி, சுமித்ரா இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஆரம்பத்தில் விநியோகஸ்தர்கள் கிடைக்காததால் படம் எடுக்கப்பட்டு நான்காண்டுகள் கழித்து தான் ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது.

பட வாய்ப்புகளே இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த கிரண் கிளாமருக்கு முழுசாக மாறியது இந்த படத்தின் மூலம் தான். இந்த படத்தை வைத்து கிளாமர் ரூட்டை பிடித்து விடலாம் என நினைத்த கிரணுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சி இருக்கிறது. இந்த படத்திற்குப் பிறகு இவர் தமிழ் சினிமாவில் எந்த ஒரு பட வாய்ப்புமே இல்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.

Also Read:கடத்தல் வழக்கில் சிக்கிய சில்க் ஸ்மிதா.. பின்னணியில் இருந்த பிரபல இசையமைப்பாளர்?

Trending News