வியாழக்கிழமை, பிப்ரவரி 13, 2025

கர்வத்தில் நம்பர் 1ல் இருக்கும் 6 ஹீரோக்கள்.. இன்று வரை மாற்றாத கொள்கை

சினிமாவில் முன்னணி இடத்தில் இருக்கும் ஹீரோக்கள் தங்களுக்கு என ஒரு கொள்கையை கடைப்பிடித்து வருவார்கள். அதில் சிலர் தேவைக்கு ஏற்றார் போல் அட்ஜஸ்ட் செய்து கொண்டாலும் பல நடிகர்கள் தங்கள் கொள்கைகளை எதற்காகவும் விட்டுத்தர மாட்டார்கள். அப்படி பல வருடமாக ஒரே கொள்கையை பின்பற்றி கர்வத்துடன் இருக்கும் ஆறு நடிகர்களை பற்றி இங்கு காண்போம்.

ராம்கி 90 காலகட்டத்தில் நம்பர் ஒன் நடிகராக வலம் வந்த இவர் தனக்கென ஒரு கொள்கையுடன் தான் நடித்தார். அது என்னவென்றால் பல நடிகர்களும் விளம்பர படங்களில் நடித்து கல்லாகட்டி வரும்போது இவர் மட்டும் விளம்பர படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இப்போதும் கூட அந்த வாய்ப்புகள் வந்தால் இவர் நிராகரித்து விடுகிறார்.

Also read:இப்போதுள்ள ஹீரோயின்கள் கூட ஜொள்ளுவிடும் 90’s ஹீரோக்கள்.. ராம்கி ஹேர் ஸ்டைலை இன்றும் மறக்காத குஷ்பூ

ராஜ்கிரண் ஹீரோவாக அறிமுகமாகி இன்று குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். பல வெற்றி திரைப்படங்களில் நடித்தாலும் இவர் எந்த விளம்பர படங்களிலும் நடிக்க மாட்டேன் என்ற உறுதியுடன் இருக்கிறார். இப்போது வரை அவரின் அந்த உறுதியை யாராலும் தகர்க்க முடியவில்லை.

ராமராஜன் 80 காலகட்டத்தில் ரஜினி, கமலுக்கு இணையாக இருந்த இவர் தற்போது ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். வயசு ஏறினாலும் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்ற கொள்கையுடன் இருந்த இவருக்கு தற்போது தான் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also read:இப்போதுள்ள ட்ரெண்டுக்கு மாறி வரும் 5 ஹீரோக்கள்.. இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த ராமராஜன்

மோகன் ஒரு காலத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துர் பிசியாக இருந்த இவர் சில வருடங்களாக எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். அப்பா போன்ற கேரக்டர்கள் வந்தாலும் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்று அடம் பிடித்த இவர் தற்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

சந்தானம் பல திரைப்படங்களில் காமெடி வேடத்தில் கலக்கிய இவர் தற்போது ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். முன்னணி நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கிய ஒரே காமெடியனும் இவர்தான். ஆனால் ஹீரோவாக நடிக்க வந்த பின்பு இவர் காமெடி வேடத்தில் நடிக்க மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார்.

அஜித் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் இவர் பல வருடங்களாகவே ஒரு கொள்கையை உறுதியுடன் பின்பற்றி வருகிறார். அதாவது இவர் நடிக்கும் படங்களின் எந்த ப்ரமோசனிலும் கலந்து கொள்ள மாட்டார். அது எவ்வளவு பெரிய தயாரிப்பாளராக இருந்தாலும் இவர் பிரமோஷன் உட்பட எந்த நிகழ்விலும் கலந்து கொள்ள மாட்டார்.

Also read:பெண் போட்டியாளரிடம் ரேசில் தோற்ற அஜித்.. வேண்டுமென்றே சீண்டும் பிரபலம்

Trending News