திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அவுட் ஆப் சினிமா என்றாலும் மனதில் நங்கூரம் போட்ட 6 ஹீரோயின்.. ஒத்த பாட்டில் கிரங்கடித்த வாழ மீன்

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் இருந்தாலும், சிலர் மட்டுமே ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிப்பார்கள். அப்படிப்பட்ட நடிகைகள் மார்க்கெட்டில்லாமல் போனால் கூட அவர்களது புகைப்படங்கள் அவர்களது வாழ்வியலை அறிந்துக்கொள்ளவே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அப்படிப்பட்ட 6 நடிகைகளை தற்போது பார்க்கலாம்.

சினேகா: நடிகை சினேகா தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்களில் நடித்தவர். தனது புன்னகையின் மூலமாக இந்திய அளவில் ரசிகர்களை பிடித்த இவர், தற்போது ரியாலிட்டி ஷோக்களில் ஜட்ஜாக வளம் வருகிறார். இப்போது கூட இவருக்கு பட வாய்ப்புகள் பிற மொழிகளிலிருந்து வந்துக்கொண்டுதான் இருக்கிறது. இவர் தற்போது கதாநாயகியாக நடிக்காவிட்டாலும், இவர் நடிப்புக்கு மவுசு இருக்கத்தான் செய்கிறது.

Also Read: சினேகா நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த 5 படங்கள்.. அடையாளப்படுத்திய செல்வராகவனின் புதுப்பேட்டை

நமீதா: தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகள் பற்றாக்குறை வந்த சமயத்தில் நமீதா வந்து அந்த இடத்தை பூர்த்தி செய்தார் என்று தான் சொல்ல வேண்டும். ஹாய் மச்சான் என்று இவரது கொஞ்சல் பேச்சுக்கே மொத்த தமிழ்நாடும் மயங்கிவிட்டது எனலாம். சரத்குமார், அஜித், விஜய் என இவர் போட்ட குத்தாட்டம் ரசிகர்களை தற்போது வரை வாயை பிளக்க வைத்துள்ளது. தற்போது இரண்டு குழந்தைகளுக்கு நமிதா தாயான பின்பும் இவருக்கென தனி இடம் உள்ளது.

மாளவிகா: நடிகை மாளவிகா ஆரம்பத்தில் பல படங்களில் நடித்து பிரபலமானாலும், இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தில் இவரது ஐட்டம் டான்ஸ் தான் இன்று வரை பிரபலம். வாளமீனுக்கும் விளங்குமீனுக்கும் என்ற பாடலில் மஞ்சள் புடவை அணிந்து இவர் ஆடிய நடனம் ஒட்டுமொத்த தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. தற்போது இவர் படங்களில் நடிக்காமல் இருந்தாலும், அந்த பாடலே அவரது கேரியரை முழுமைப்படுத்தியது எனலாம்.

Also Read:  தொடையழகி ரம்பாவை மிஞ்சிய பூனம் பாஜ்வா.. குட்டி டிரஸ்ஸில் அதிரும் இணையதளம்

பூனம் பாஜ்வா : நடிகை பூனம் பாஜ்வா 10 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்தவர். இதனிடையே அக்கடு தேசத்து வாய்ப்பை தேசி ஓடிய இவருக்கு, அங்கும் வாய்ப்பில்லாமல் திணறி வந்தார். சுந்தர்.சியின் அரண்மனை 2 படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்த இவர், தற்போது தமிழிலும் மார்க்கெட்டில்லாமல் உள்ளார். இருந்தாலும் இவரது அழகுக்கே தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ஏராளம்.

அமலாபால்: மைனா படத்தின் மூலமாக அறிமுகமான இவர், விஜய், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்தார். இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்துக்கொண்டு பின்னர் விவாகரத்து பெற்ற நிலையில், தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் தானே தயாரித்து நடித்து வருகிறார். இருந்தாலும் அமலாபாலின் ரசிகர்கள் அவரை மீண்டும் தமிழ் சினிமாவில் காம்பேக் கொடுக்குமாறு எதிர்பார்த்து வருகின்றனர்.

மஞ்சிமா மோகன்: நடிகர் சிம்புவின் அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான இவர், தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார்,அண்மையில் நடிகர் கார்த்திக்கின் மகனான நடிகர் கெளதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். தற்போது வரை பட வாய்ப்புகள் இல்லாதபோதும் ,இவரது ரீ என்ட்ரிக்காக ரசிகர்கள் வெயிட் பண்ணி வருகின்றனர்.

Also Read: விவாகரத்திற்கு பின்னும் கொடிகட்டி பறக்கும் 3 நடிகைகள்.. அமலாபால் கைவசம் ஒரு டஜன் படங்களா?

Trending News