சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

ரொம்ப பிஸி என கால்சீட் மறுக்கும் 6 ஹீரோயின்கள்.. படமே ஓடாத நடிகை கூட அலட்டிக் கொள்ளும் அவலம்

தற்போது சில நடிகைகள் பட வாய்ப்புக்காக கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்கள். ஆனால் சில நடிகைகளுக்கு பட வாய்ப்பு கிடைத்தாலும் பிஸி என்ற சொல்லி கால்சீட் கொடுக்க மறுக்கிறார்கள். அவ்வாறு ரொம்ப பிஸி என்று அலட்டி கொள்ளும் 6 நடிகைகள் யார் என்பதை பார்க்கலாம்.

திரிஷா : சமீபத்தில் த்ரிஷா நடிப்பில் பொன்னியின் செல்வன் படம் வெளியாகி ஏகபோக வரவேற்பு பெற்று வருகிறது. இதில் அவரது குந்தவை கதாபாத்திரம் அனைவராலும் ஈர்க்கப்பட்ட உள்ளது. ஆனால் தற்போது வரும் பட வாய்ப்புகளை திரிஷா மறுத்து வருகிறாராம்.

Also Read :புது மாப்பிள்ளைக்கு திரிஷா போட்ட கண்டிஷன்.. மறைமுகமாக சமந்தாவை குத்தி கிளிச்சுட்டாங்க!

கீர்த்தி சுரேஷ் : கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த படத்துக்காக பல சூப்பர் ஹிட் படங்களை தவற விட்டுள்ளார். ஆனாலும் அண்ணாத்த படாதே இவருக்கு ஸ்கோப் இல்லை. இந்த சூழ்நிலையில் அவர் நடிக்கும் படங்கள் எதுவுமே போடவில்லை என்றாலும் ரொம்ப பிசி என தனக்கு வரும் பட வாய்ப்பை நிராகரித்து வருகிறார்.

அதுல்யா ரவி : நாடோடிகள் 2,என் பெயர் ஆனந்தன், முருங்கக்காய் சிப்ஸ், வட்டம் போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர் அதுல்யா ரவி. இவர் டீசல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருடைய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் தற்போது பிசியாக இருப்பதாக இயக்குனர்களிடம் சொல்லி வருகிறாராம்.

Also Read :விஜய் சேதுபதியுடன் இணைய இருந்த கீர்த்தி சுரேஷ்.. ராமராஜனால் நடந்த டிவிஸ்ட்

தன்ஷிகா : பேராண்மை படத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தன்ஷிகா. இவர் கன்னடம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்த வருகிறார். ஆனால் சமீபிலகாலமாக இவருடைய படங்கள் பெரிய வரவேற்பு பெறாத நிலையிலும் தனக்காக வரும் பட வாய்ப்பை நிராகரித்து வருகிறார்.

இந்துஜா : தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான நானே வருவேன் படத்தில் நடித்தவர் இந்துஜா. இவர் தற்போது ஒரு சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். ஆனாலும் தற்போது நல்ல பட வாய்ப்பு வந்தாலும் தான் மற்ற படங்களில் பிசியாக இருப்பதாக சொல்லி கால்சீட் கொடுக்க மறுத்து வருகிறாராம்.

வாணி போஜன் : சின்னத்திரையில் இருந்து வெளித்திரையில் ஒரு ஹீரோயின் என்ற அந்தஸ்தை பெற்றவர் வாணி போஜன். பெரும்பாலும் இவர் செகண்ட் ஹீரோயின் சப்ஜெக்ட்டில் தான் நடித்து வருகிறார். அருண் விஜயின் தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் தொடரிலும் நடித்திருந்தார். இப்போது தன்னை நாடிவரும் இயக்குனர்களிடம் வேறு படங்களில் பிசியாக இருப்பதாக வாணி போஜன் கூறி வருகிறாராம்.

Also Read :பறிபோன சினிமா வாய்ப்பு.. காதலரை கழட்டி விட்ட வாணி போஜன்

Trending News