புதன்கிழமை, நவம்பர் 20, 2024

வில்லனுக்கு உண்டான மரியாதையை கெடுத்த 6 படங்கள்.. மொத்தமா சோலிய முடிச்ச பீஸ்ட்

திரைப்படங்களில் கதாநாயகன்களுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அதே அளவிற்கு வில்லன்னுடைய கேரக்டரும் வலுவாக இருக்க வேண்டும். அப்போதுதான் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கிற விறுவிறுப்பு இருக்கும். ஆனால் சமீபத்தில் வெளியான 6 படங்களில் வில்லன்களுக்கு உண்டான மரியாதை சுத்தமாகவே இல்லை. அதிலும் மலையாளத்தில் இருந்து விஜய்யின் பீஸ்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த நடிகரின் சோலி மொத்தமா முடிஞ்சு போச்சு.

கடைக்குட்டி சிங்கம்: 2018 ஆம் ஆண்டு பாண்டியராஜ் இயக்கத்தில்  சூர்யா தயாரித்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தி உடன் சாயிஷா, பிரியா பவானி சங்கர், பானுப்பிரியா, பொன்வண்ணன், சூரி உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். ஒரு கூட்டு குடும்பத்தில் இருக்கும் கதாநாயகன் எப்படி எல்லாம் பிரச்சினையை சமாளிக்கிறார் என்றும், விவசாயத்தின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் படமாகவும் அமைந்தது. இதில் கதாநாயகன் கார்த்திக், சாயிஷாவை காதலிப்பார்.

ஆனால் சாயிஷாவின் முறைமாமன் அவர்களது காதலை பிரிக்க வேண்டும் என நேருக்கு நேர் மோதாமல் முதுகில் குத்தும் வில்லனாக கொடியரசு என்ற கேரக்டரில் தெலுங்கு நடிகர் ஷத்ரு நடித்திருப்பார். கார்த்தியின் கூட்டு குடும்பத்தை பிரிப்பதற்கு இவர் முன்வைக்கும் திட்டங்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. இந்த படத்தில் கடைசி வரை வில்லனை டம்மியாகவே காட்டி விட்டனர்.

Also Read: பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்த கௌதம் மேனன்.. காப்பாற்றிவிட்ட விஜய் பட தயாரிப்பாளர்

உடன்பிறப்பு: 2021 ஆம் ஆண்டு சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடித்த குடும்ப திரைப்படம் தான் உடன்பிறப்பு. இதில் அண்ணன் தங்கையின் பாசத்தை அழகாக காண்பித்திருப்பார்கள். ஆனால் வில்லனாக நடித்திருக்கும் கலையரசன், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து தன்னுடைய இச்சையை தீர்த்துக் கொள்ளும் கேவலமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். கடைசியில் ஜோதிகாவிடமும் அவருடைய வேலையை காட்டியதால், அவர் கலையரசனை கொன்று விடுவார். இப்படி வில்லனுக்குரிய மரியாதையே இந்த படத்தில் சுத்தமாகவே இல்லை. 

தி லெஜண்ட்: கடந்த ஆண்டு சரவணா ஸ்டோர் உரிமையாளர் அருள் சரவணன் அண்ணாச்சி நடிப்பில் வெளியான தி லெஜண்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற 5 மொழிகளில்  வெளியாகி  கலவையான விமர்சனங்களை பெற்றது.  இதில் அருள் இளமையான தோற்றத்தில் ரோபோ போல் நடித்து ஏகப்பட்ட கேலி கிண்டலுக்கு ஆளானார். இவர் மட்டுமல்ல இந்த படத்தில் வில்லனாக நடித்த சுமன் கதாபாத்திரமும் சுத்தமாகவே எடுபடவில்லை.

இதற்கு முன்பு நிறைய படங்களில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்திருந்த சுமனுக்குனு இருந்த ரேஞ்சை இந்தப் படம் குறைத்துவிட்டது. நீரிழிவு நோய்க்கு மருந்து கண்டுபிடித்து நாட்டுடைமையாக்க போராடும் கதாநாயகனின் கதை தான் தி லெஜண்ட். இந்த படத்தின் வில்லனான சுமன் மிகப்பெரிய பார்மா கம்பெனியை நடத்துபவராக  நடித்திருப்பார். இதில் இவருடைய வில்லத்தனம் சுத்தமாகவே எடுபடவில்லை.

Also Read: என்னதான் படம் நல்லா இருந்தாலும் மார்க்கெட்ல விலை போகல.. மனக்கசப்பால் சறுக்கி விழுந்த சசிகுமார்.!

பீஸ்ட்: கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், ரசிகர்களிடம் கலவையான விமர்சனம் கிடைத்தது. ஏனென்றால் ஒரு மாஸ் ஹீரோ நடிக்கும் கதையை ஒரே மாலில் நடக்கும் சம்பவங்களாக கோர்த்து உருவாக்கி இருந்ததே இந்த படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதிலும் இந்த படத்தில் பயங்கரவாதிகளில் ஒருவராகவும் பின்னர் அவர்களிடம் இருந்து விலகி அப்ரூவராக  மாறி விஜய்க்கு  உதவுபவராகவும்  நடித்திருப்பார்.

மலையாள வில்லன் நடிகர் ஹைன் டாம் சாக்கோ இவர் தமிழில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என பீஸ்ட் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். ஆனால் இந்த படத்தில் நடித்த டெரரிஸ்ட் மற்றும் டெரரிஸ்ட்களின் பாஸ் உள்ளிட்ட அனைவரையுமே நெல்சன் டம்மியாக காட்டிவிட்டார். இதனால் வில்லன்களுக்கே உண்டான மரியாதை போனதுடன் பீஸ்ட் படத்துடன் மொத்த சோலியும் முடிந்துவிட்டது.

வீரமே வாகை சூடும்: 2022 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான வீரமே வாகை சூடும் என்ற படம் வெளியானது. ஒரு சராசரி மனிதன் அதிகாரத்திற்கு எதிராக வெகுண்டெழுவதே இந்த படத்தின் கதை. இதில் போலீஸ் எஸ்ஐ ஆக முயற்சி செய்து கொண்டிருக்கும் இளைஞர் போரஸ் என்ற கதாபாத்திரத்தில் விஷால் நடித்திருப்பார். இவர் வளங்களை சுரண்டி மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை ஊக்கப்படுத்தும் கார்ப்பரேட் வில்லனான நெடுஞ்செழியனை எதிர்த்து சுலபமாக வென்று விடுவார்.

இந்த நெடுஞ்செழியன் கதாபாத்திரத்தில்  நடிகர் பாபுராஜ்  நடித்திருப்பார். அஜித்தின் ஜனா மற்றும் விக்ரமின் ஸ்கெட்ச் போன்ற படங்களில் மோசமான வில்லனாக நடித்த மலையாள நடிகர் பாபுராஜை, வீரமே வாகை சூடும் படத்தின் இறுதியில் வெத்து வேட்டாக காட்டி அவருடைய வில்லத்தனத்தையே டேமேஜ் செய்து விட்டனர்.

Also Read: அட்வான்ஸ் வாங்கி இரண்டு வருஷமாய் டபாய்த்த விஷால்.. தூண்டில்ல சிக்காதவருக்கு தயாரிப்பாளர் போட்ட வலை

லத்தி: கடந்த ஆண்டு இறுதியில் விஷால் நடிப்பில் வெளியான லத்தி திரைப்படத்தில் பயில்வான் கான்ஸ்டபிள் பி.என். சுனில் வில்லனாக நடித்திருப்பார். பார்ப்பதற்கு மிரட்டலான தோற்றத்துடன் இருக்கும் இவர், இந்தப் படத்தில் கடைசியில் வில்லனுக்குரிய அதிரடி காட்சியில் இடம்பெறாமலே மறைந்து போவார்.

இவ்வாறு இந்த 6 படங்கள் தான் நடிகர்களுக்கு இணையாக வலுவான கதாபாத்திரமாக பேசப்படும் வில்லன்களை டம்மியாக்கிய படங்களாகும். அதிலும் மோலிவுட்டில் இருந்து கோலிவுட்டிற்கு தளபதி விஜய்யின் படத்தில் என்ட்ரி கொடுத்த மலையாள நடிகர் ஹைன் டாம் சாக்கோ கனவை பீஸ்ட் திரைப்படம் குழிதோண்டி புதைத்து விட்டது.

- Advertisement -spot_img

Trending News