தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகள், காமெடி ஆக்டர்ஸ் இவர்களுக்கு எல்லாம் இருக்கும் ரசிகர்களைப் போலவே இசையமைப்பாளர்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. சினிமாவை பொறுத்த வரைக்கும் ஒரு படத்திற்கு உயிர் கொடுப்பது என்றால் அது மியூசிக் தான். அப்படிப்பட்ட மியூசிக்கை உருவாக்கும் டாப் 6 இசையமைப்பாளர்களின் பட்டியல் தற்போது இணையத்தில் வெளியாகி ட்ரண்டாகி கொண்டிருக்கிறது.
சாம் சி எஸ்: சினிமாவில் மியூசிக் கம்போசர், தயாரிப்பாளர், பாடல் எழுதுபவர், பாடகர் என பன்முக திறமை கொண்ட இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள படங்களிலும் பணியாற்றி வருகிறார். அதிலும் இவர் கார்த்தி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான கைதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார்.
அதன் பின் விக்ரம் வேதா, இரவிற்கு ஆயிரம் கண்கள், நோட்டா, எனிமி போன்ற படங்களுக்கு இசையமைத்தார். மேலும் இந்த வருடம் இவருடைய இசையில் வெளியான ராக்கெட்ரி தி நம்பி விளைவு திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதன் மூலம் இவர் 2022 ஆம் ஆண்டின் சிறந்த இசையமைப்பாளர்களின் பட்டியலில் 6-ம் இடத்தை பிடித்திருக்கிறார்.
டி. இமான்: மனதை வருடும் பாடல்களைக் கொடுக்கும் இமான் இந்த வருடம் ஆர்யாவின் கேப்டன், பிரபுதேவாவின் பொய்க்கால் குதிரை, எதற்கும் துணிந்தவன், விஜய் சேதுபதியின் டிஎஸ்பி போன்ற படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் மனதை கவர்ந்ததுடன் இந்த வருடத்திற்கு சிறந்த இயக்குனர்களின் லிஸ்டில் 5-ம் இடத்தில் உள்ளார்.
ஏஆர் ரகுமான்: ஆஸ்கார் நாயகனாக ஏஆர் ரகுமான் உலக அளவில் ரசிகர்களை தன்வசப்படுத்தி இருக்கிறார். இவருடைய இசையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் இணையத்தில் ட்ரெண்டாகி பலரையும் முணுமுணுக்க வைத்தது. இதன் மூலம் இந்த வருடத்தின் சிறந்த இயக்குனர்களுக்கான லிஸ்டில் ஏஆர் ரகுமான் 4-ம் இடத்தில் உள்ளார்.
தேவிஸ்ரீ பிரசாத்: துள்ளலான பாடல்களை இசையமைப்பதில் பிரபலமான இவர் இந்த ஆண்டு இசையமைத்த தி வாரியர், த்ரிஷ்யம் 2, ரவுடி பாய்ஸ் போன்ற படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் இளசுகளை ரசிக்க வைத்தது. ஆகையால் இந்த ஆண்டிற்கான சிறந்த இசையமைப்பாளர்களின் லிஸ்டில் தேவிஸ்ரீ பிரசாத்துக்கு 3-ம் இடம் கிடைத்திருக்கிறது.
யுவன் சங்கர் ராஜா: இளையராஜாவின் மகனான யுவன் சங்கர் ராஜாவிற்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இவருடைய பாடல்கள் அனைத்தும் எல்லா தரப்பு மக்களையும் ரசிக்க வைக்கும் குறிப்பாக யுவன் இசையமைக்கும் பிஜிஎம் பட்டித் தொட்டி எங்கும் பேசப்படும். அதிலும் ஒரு படத்தின் பிஜிஎம் பெரிதாக பேசப்பட்டது என்றால் அது இவனின் பிஜிஎம் தான்.
ஆகையால் தான் இவர் பேக்ரவுண்டில் அமைக்கப்படும் பிஜிஎம்-ஆல், படத்தில் நடிக்கும் ஹீரோக்களை மாசாக காட்ட முடிகிறது. அப்படி இந்த வருடம் இவருடைய இசையில் வெளியான அஜித்தின் வலிமை, சாணி காகிதம், குருதி ஆட்டம், நானே வருவேன், விருமன், மாமனிதன், காபி வித் காதல் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்து 2022 ஆம் ஆண்டு சிறந்த இயக்குனர்களுக்கான லிஸ்டில் 2ம் இடத்தை பிடித்திருக்கிறார்.
Also Read: 2022-ல் சிறந்த டாப் 5 ஹீரோஸ்.. பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய ஏஜென்ட் விக்ரம்
அனிருத்: சிறுவயதில் இப்படி ஒரு வளர்ச்சியா என பலரையும் பிரமிக்க வைக்கும் அனிருத், தல தளபதி தலைவர் என முன்னணி பிரபலங்களின் படங்களை அடுத்தடுத்து இசையமைத்து சூப்பர் ஹிட் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதிலும் இந்த ஆண்டு விஜய்யின் பீஸ்ட், சிவகார்த்திகேயன் டான், உலக நாயகனின் விக்ரம், விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களுக்கு இசையமைத்திருந்தார்.
அத்துடன் அடுத்த வருடம் இவருடைய இசையில் ரஜினியின் ஜெய்லர், இந்தியன் 2, ஜவான் போன்ற படங்களும் காத்திருக்கிறது. இப்படி இந்த ஆண்டை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் அனிருத் சிறந்த இசையமைப்பாளர்களின் லிஸ்டில் முதலிடத்தில் உள்ளார்
இவ்வாறு இந்த 6 பிரபலங்களும் 2022 ஆம் ஆண்டு இசையமைத்த படங்களின் அடிப்படையில் ரசிகர்களின் மனதை கவர்ந்து அதிலும் ஏஆர் ரகுமானை பின்னுக்குத் தள்ளி ராஜா வீட்டு கண்ணு குட்டி யுவன் சங்கர் ராஜா2ம் இடத்தை பிடித்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.