புதன்கிழமை, ஜனவரி 22, 2025

நடிப்புக்கு மட்டுமில்ல, இசைக்கும் ஆண்டவர் தான் போல.. கமலின் குரலில் இந்த 6 பாட்டை மிஸ் பண்ணாம கேட்டுடுங்க

Kamal Haasan: சமீபத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான மெய்யழகன் படத்தில் கமலஹாசன் யாரோ என்னும் பாடலை பாடியிருந்தார். இந்தப் பாடலில் கமலஹாசனின் குரலைக் கேட்டு பலரும் பிரம்மித்துப் போனார்கள்.

இதையும் தாண்டி கமலஹாசன் நிறைய பாடல்கள் மூலம் நம் மனதை வருடி இருக்கிறார். அதில் முக்கியமான பாடல்கள் ஆறு. கமலஹாசனின் குரலைக் கேட்டு மெய் மறக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த ஆறு பாடல்களை மிஸ் பண்ணாமல் கேட்டு விடுங்கள்.

6 பாட்டை மிஸ் பண்ணாம கேட்டுடுங்க

அன்பே சிவம்: கமலஹாசனின் சினிமா பயணத்திலும் முக்கியமான படம் தான் அன்பே சிவம். இதில் வரும் அன்பே சிவம் பாடலையும் கமல்தான் பாடி இருக்கிறார். ‘ இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும், அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்’ இந்த வரிகளை கமலின் குரலில் கேட்கும் பொழுது மெய் சிலிர்த்து விடும்.

மகாநதி: மகாநதி படத்தில் வரும் தன்மானம் உள்ள நெஞ்சம் எப்போதும் சாயாது இந்தப் பாடலையும் கமல்தான் பாடியிருக்கிறார். பாடலின் தொடக்கத்தில் வரும் பாரதியாரின் கவிதையை கமல் தன்னுடைய குரலில் சொல்வது கம்பீரமாக இருக்கும். அதன் பிறகு காவேரி தாய் மடியில் வாழ்ந்த பிள்ளையடி என்ற வரிகளில் கமலின் குரலை கேட்கும் பொழுது மனதிற்கு ரொம்பவே நெருடலாக இருக்கும்.

விருமாண்டி: விருமாண்டி படத்தில் எல்லா பாடல்களையும் இளையராஜா தான் இசையமைத்திருப்பார். இதில் உன்ன விட என்ற பாடலை கமல் பாடியிருக்கிறார். உன்னை விட என தொடங்கும் வரிகளாக இருக்கட்டும், 100 ஜென்மம் நமக்கு போதுமா, வேற எதுவும் வராமல் கேட்போமா சாகா வரம் கேட்போம் என்ற வரிகளில் தன்னுடைய மொத்த காதலையும் அள்ளிக் கொடுத்திருப்பார்.

மன்மதன் அம்பு: மன்மதன் அம்பு படத்தில் வெளியான நீ நீல வானம் என்னும் பாடல் இன்றும் அனைவரது பிளே லிஸ்டிலும் இடம்பெற்று இருக்கிறது. இந்தப் பாடலின் வீடியோ காட்சியில் எல்லாமே ரிவர்ஸில் வரும். அதே போல் கமல் பாடலையும் ரிவர்சில் பாடி அதன் பின்னர் ரிவைண்டு பண்ணி இருப்பார்கள். நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது இன்னொரு உயிர் தானடி என்ற வரிகளை கமலின் குரலில் கண்டிப்பாக கேட்டே ஆக வேண்டும்.

விஸ்வரூபம்: கமலின் குரலில் கண்டிப்பாக கேட்க வேண்டிய ஒரு பாடல் என்றால் அது விஸ்வரூபம் படத்தில் வந்த உன்னை காணாது நான் எங்கும் நான் இல்லையே. கமலின் நடனத்தோடு அவருடைய குரலில் கொஞ்சி கொஞ்சி பாடுவது பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கும்.

மெய்யழகன்: கமலஹாசன் பாடிய பாடல்களில் சமீபத்திய பேவரட் ஆக இணைந்திருக்கும் பாடல் தான் யாரோ இவன் யாரோ. மெய்யழகன் படம் நிறைய பேருக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. படத்தோடு சேர்ந்த இந்த பாடல் பலருக்கு மனதிற்கு நெருக்கமான ஒன்றாக அமைந்திருக்கிறது.

Trending News