ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

உலகநாயகன் அறிமுகப்படுத்திய 6 தொழில்நுட்பங்கள்.. தேவர் மகன் படத்தில் இப்படி ஒரு டெக்னாலஜி இருந்ததா?

Kamal Haasan: உலகநாயகன் கமலஹாசன் தமிழ் சினிமாவின் என்சைக்ளோபீடியா என்றே சொல்லப்படுகிறார். சினிமாவில் அவர் செய்யாத புதிய முயற்சிகளே இல்லை என்று சொல்லலாம். கமல் எடுக்கும் படங்கள் எப்போது புரியாது 10 வருடங்களுக்கு பிறகு தான் புரியும் என்று ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு அவருடைய படங்கள் அட்வான்ஸ் ஆக இருக்கிறது. கமல் தன்னுடைய படங்களில் முதன்முறையாக இந்த ஆறு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

விக்ரம்: எழுத்தாளர் சுஜாதாவால் குமுதம் வார இதழில் தொடர்கதையாக எழுதப்பட்டு பின்னர் திரைப்படம் ஆக்கப்பட்டது தான் விக்ரம். இந்த படம் 1986 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. தமிழ் சினிமா உலகில் முதன் முதலில் ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான திரைப்படம் இது. மேலும் இந்த படத்தில் தான் முதன்முதலாக கம்ப்யூட்டர் மூலம் இசை அமைக்கப்பட்டது. இந்த படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா.

Also Read:கமலால் தாமதமாகும் விடாமுயற்சி.. எல்லாம் கை கூடி வரும் போது இப்படியா நடக்கணும்

தேவர் மகன்: உலகநாயகன் மற்றும் நடிகர் திலகம் இருவரும் போட்டி போட்டு நடித்த படம் தேவர் மகன். இந்த படம் 1992 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அந்த வருடத்திற்கான பல விருதுகளையும் வாரி குவித்தது. தேவர் மகன் திரைப்படத்திற்கு கமல் ஒரே வாரத்திலேயே கதை திரைக்கதை எழுதி முடித்தார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதும் சாஃப்ட்வேர் வைத்து எழுதப்பட்டிருக்கிறது. இதுதான் முதல் முறையாக தமிழில் திரைக்கதை எழுத தொழில்நுட்பம் உபயோகப்படுத்தப்பட்டதாகும்.

மகாநதி: இயக்குனர் சந்தான பாரதி இயக்கத்தில் கமலஹாசன் நடித்த திரைப்படம் மகாநதி. இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம் என்று கூட சொல்லலாம். 1994 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன இந்த படத்தில் முதன் முதலாக வீடியோ காட்சிகளை எடிட் செய்ய ஆவிட் என்னும் புதிய தொழில்நுட்பம் உபயோகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

Also Read:35 வருடத்திற்கு முன் கமல் பேசிய அரசியல் படத்தால் இயக்குனர்களான 3 பிரபலங்கள்.. காப்பை வைத்து வித்தை காட்டும் GVM

குருதிப்புனல்: கமலஹாசனின் அடையாளங்களில் ஒன்றாக குருதிப்புனல் திரைப்படம் சொல்லப்படுகிறது. இந்த படத்திற்கு கமலஹாசன் தான் கதை மற்றும் திரை கதையும் எழுதினார். படம் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லை இந்தியாவிலேயே முதன் முதலாக டால்பி தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டது. இந்த பட ரிலீஸ் போது சென்னையில் உள்ள தேவி தியேட்டரை கமலஹாசன் தன் சொந்த செலவில் டால்பி திரையரங்கமாக மாற்றினார்.

இந்தியன்: சினிமாவின் மீது தீராத காதல் கொண்ட கமலின் பசிக்கு தீனி போடும் விதமாக அமைந்தவர் தான் இயக்குனர் சங்கர். இந்த படத்தில் கமல் மற்றும் சுகன்யாவை வயதானவர்களாக காட்டுவதற்காக பிராஸ்தடிக் மேக்கப் உபயோகப்படுத்தப்பட்டது. முதல்முறையாக தமிழ் சினிமாவில் இந்த படத்திற்கு தான் இந்த மேக்கப் பயன்படுத்தப்பட்டது.

விருமாண்டி: கமல் கதை, திரைக்கதை எழுதி, தயாரித்து, இயக்கி நடித்த திரைப்படம் விருமாண்டி. இந்தப் படம் ரஷோமோன் விளைவு என்னும் படத்தின் திரைக்கதையை மையமாகக் கொண்டு வந்தது. வணிக ரீதியாக வெற்றி பெற்ற இந்த படம் சாதிய ரீதியாக பல விமர்சனங்களை சந்தித்தது. விருமாண்டி திரைப்படத்தில் தான் முதன்முதலில் காட்சிகள் முழுக்க லைவ் ரெக்கார்டிங் செய்யப்பட்டது.

Also Read:சிம்புவை தூக்கிவிட படாத பாடுபடும் கமல்.. செஞ்ச சத்தியத்தை காப்பாற்றும் ஆண்டவர்

Trending News