திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சிவாஜி, எம்ஜிஆர் உடன் குழந்தை நட்சத்திரமாய் கலக்கிய ஸ்ரீதேவியின் 6 படங்கள்.. மூன்று வயதில் முருகன் அவதாரம்

6 Movies: எம்ஜிஆர், சிவாஜி காலத்திலேயே தன் நடிப்பிற்கு பிள்ளையார் சுழி போட்ட நடிகை தான் ஸ்ரீதேவி. அக்கால பிரபல ஹீரோயின் ஆன ஜெயலலிதாவுடன் இவர் இணைந்து நடித்த 6 படங்களை பற்றிய தகவலை இத்தொகுப்பில் காணலாம்.

கந்தன் கருணை: 1967ஆம் ஆண்டு வெளிவந்த கந்தன் கருணை படத்தில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெயலலிதா, சாவித்திரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்றி நடித்திருப்பார்கள். இப்படம் தெய்வ நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாய் கதை அமைக்கப்பட்டிருக்கும். மேலும் இப்படத்தின் போது மூன்று வயது ஆகும் ஸ்ரீதேவி முருகன் அவதாரம் ஏற்று நடித்திருப்பார்.

Also Read: லியோ பட வசூலை தொம்சம் செய்ய ரிலீஸ் ஆகும் 3 முக்கிய படங்கள்.. லோகேஷ், தளபதியை புலம்ப விட்டுட்டாங்க!

நம் நாடு: 1969 ஆம் ஆண்டு ஜம்புலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த நம் நாடு படத்தில் ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்கள். இப்படத்தில் ராஜா என்னும் ஆண் வேடத்தில் குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீதேவி தன் எதார்த்தமான நடிப்பினை வெளிக்காட்டி இருப்பார்.

என் அண்ணன்: 1970ல் திரில்லர் படமாய் வெளிவந்த என் அண்ணன் படத்தில் எம் ஜி ஆர், ஜெயலலிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று, 100 நாட்களுக்கு மேல் ஓடி பெருமை பெற்றது. இப்படத்திலும் தங்கம் கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீதேவி நடித்திருப்பார்.

Also Read: கமலுக்கு முன்பு சப்பானியாக நடிக்க இருந்த ஹீரோ.. அல்வா போல் கிடைத்த வாய்ப்பு, 45 வருட சீக்ரெட்டை உடைத்த பிரபலம்

ஆதிபராசக்தி: 1971 ஆம் ஆண்டு தெய்வ நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாய் வெளிவந்த ஆதிபராசக்தி படத்தில் ஜெமினி கணேசன், ஜெயலலிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். பார்வதி தேவி கதாபாத்திரத்தில் ஜெயலலிதா நடித்திருப்பார். இவரிடம் ஆசிபெறும் ஊமை குழந்தையாய் கார்த்திகேயா கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி நடித்திருப்பார்.

திருமாங்கல்யம்: 1974 ஆம் ஆண்டு வின்சென்ட் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் ஜெயலலிதா, முத்துராமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். சென்டிமென்ட் நிறைந்த கதை அம்சம் இடம்பெற்ற இப்படத்தில் சாந்தி கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி நடித்திருப்பார்.

Also Read: ஜெயிலர் வெற்றியால் அடுத்தடுத்து நெல்சன் கூட்டணியில் உருவாகும் 5 படங்கள்.. தலைசுற்ற வைக்கும் சன் பிக்சர்ஸ் பட்ஜெட்

உன்னை சுற்றும் உலகம்: 1977 ஆம் ஆண்டு சுப்ரமணிய ரெட்டியார் இயக்கி வெளிவந்த படம் தான் உன்னை சுற்றும் உலகம். இப்படத்தில் ஜெயலலிதா, கமலஹாசன், சாவித்திரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இளம் பெண்ணாக ஸ்ரீதேவி தன் எதார்த்தமான நடிப்பினை வெளிக்காட்டி இருப்பார்.

Trending News