Actor Sivakarthikeyan Best Movie: நம்ம வீட்டுப் பிள்ளையாகவே இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தன்னுடைய 49வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனால் அவருடைய ரசிகர்களும் திரை பிரபலங்களும் சோசியல் மீடியாவில் தங்கள் வாழ்த்துக்களை குவித்து கொண்டிருக்கின்றனர். இன்றைய தினத்தில் அவரை சினிமாவில் உச்ச நட்சத்திரமாக தூக்கி நிறுத்திய ஐந்து தரமான படங்களை பற்றி பார்ப்போம்.
எதிர்நீச்சல்: சிவகார்த்திகேயன் தன்னை ஒரு ஹீரோவாக நிலை நிறுத்திய படம் தான் எதிர்நீச்சல். தனுஷ் தயாரிப்பில் வெளியான இந்த படம் வழக்கமான காதல், காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் எல்லாவற்றையும் தாண்டி நம் நாட்டில் பணம் படைத்தவர்களுக்கு விளையாட்டுத்துறையும் விலைப்போகும் விபரீதத்தை எடுத்துக்காட்டியது. வித்தியாசமும் விறுவிறுப்பும் நிறைந்த இந்த படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான தரமான படம் என அடித்து சொல்லலாம்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம்: சிவகார்த்திகேயன் போஸ் பாண்டியனாக ரகளை செய்த படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படத்தில் ஒரு கிராமத்து இளைஞன் எந்த அளவிற்கு கேலி கிண்டல் செய்து ஜாலியாக சுற்றி கொண்டிருப்பார் என்பதை தன்னுடைய இயல்பான நடிப்பால் சிவகார்த்திகேயன் வெளிக்காட்டினார். இன்றும் இந்தப் படத்தை எத்தனை தடவை வேணாலும் பார்க்கலாம். அந்த அளவிற்கு சலிப்பு தட்டாமல் காமெடிக்கும் கலகலப்பிற்கும் பஞ்சம் இருக்காது. இதில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காம்போ பக்காவாக வொர்க் அவுட் ஆகி இருக்கும்.
கனா: கிரிக்கெட் மற்றும் விவசாயத்தை அழுத்தமாக பேசிய படம் தான் கனா. அருண்ராஜா காமராஜ் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இந்தப் படம், பெண் கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளி வந்ததால் விளையாட்டு விமர்சர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்த படம் ஸ்போர்ட்ஸ் படங்களுக்கு உரிய டெம்ப்ளேட்டை உடைத்து பலரது கவனத்தையும் ஈர்த்தது. இந்தப் படத்தை தயாரித்தது சிவகார்த்திகேயன் என்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் நெல்சன் திலீப் குமார் என்ற கேரக்டரில் சிவகார்த்திகேயன் ஒரு கிரிக்கெட் கோச் ஆக நடித்தார். ‘இந்த உலகம் ஜெயிச்சிருவேன்னு சொன்னா கேட்காது. ஜெயிச்சவன் சொன்னா கேட்கும். எதுனாலும் ஜெயிச்சதுக்கு அப்புறம் பேசு’ என்று இவர் சொன்ன டயலாக் இளசுகளுக்கு செம மோட்டிவேஷன் ஆக இருந்தது.
Also read: யார் வேணா என்ன வேணா ஆகலாம்.. எதிர்நீச்சல் போட்டு சாதித்த சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு
சிவகார்த்திகேயனின் தரமான படங்கள்
டாக்டர்: சிவகார்த்திகேயன், பிரியா மோகன் நடிப்பில் வெளியான இந்த படம் வசூலில் 100 கோடியை தட்டி தூக்கியது. இது ஒரு சீரியஸ் திரில்லர் படத்தைப் போல துவங்கினாலும், விரைவிலேயே இது ஒரு டார்க் காமெடி திரைப்படம் என்று புரிந்து விட்டது. இதில் டாக்டர் வருண் கேரக்டரில் சிவகார்த்திகேயன் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்டினர். வருண் உடைய காதலியின் அண்ணன் மகள் கடத்தப்பட்டதால், அந்த குழந்தையை கடத்தியது யார்? எதற்காக? எப்படி மீட்கிறார்கள்? என்பதுதான் படத்தின் கதை,
டான்: ஒரு கலகலப்பான படத்தை எடுக்க வேண்டும் என முடிவெடுத்து, பின் படத்தின் கதையைப் பற்றி எல்லாம் துளி கூட கவலைப்படாமல் காலேஜ் வாழ்க்கையை கண்முன் காட்டி கடைசியில் எமோஷனல் காட்சிகளை காட்டி உணர்ச்சிகளை தூண்டிய படம் டான். இந்த படம் இளசுகளை வெகுவாகக் கவர்ந்திழுத்தது. இதனால் தியேட்டர்களில் இளைஞர்களின் கூட்டம் அலை மோதியதால், சுமார் 100 கோடி வசூல் இந்த படத்திற்கு அசால்டாக கிடைத்தது.
அயலான்: தமிழ் சினிமா இதுவரை நெருங்காத ஏலியன் கான்செப்ட்டை துணிச்சலாக சிவகார்த்திகேயன் கையில் எடுத்த படம் தான் அயலான். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி குட்டீஸ் முதல் 60’ஸ் வரை எல்லோரையும் திரையரங்கில் குவிய வைத்தது.
பெரும்பாலும் சிவகார்த்திகேயன் அதிரடியான படங்களில் சீரியஸாக நடிப்பதை காட்டிலும் சின்ன குழந்தைகளையும் பெண்களையும் கவரும் விதத்தில் ஜாலியான படங்களை நடிப்பதில் தான் அதிக கவனம் செலுத்துகிறார். விஜய்க்கு பிறகு குட்டீஸ் மற்றும் பெண் ரசிகைகளின் கூட்டம் சிவகார்த்திகேயனுக்கு தான் அதிகம் இருக்கிறது. இதனால் அரசியலுக்கு செல்ல போகும் தளபதியின் இடத்தை எப்படியாவது பிடித்து விட சிவகார்த்திகேயன் போராடிக் கொண்டிருக்கிறார்.
Also read: சிவகார்த்திகேயன் ஆசையில் விழுந்த மண்.. ரஜினிக்கு வில்லனாக சிஷ்யனை லாக் செய்த லோகேஷ்