ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

முதல் பந்திலேயே அனல் பறக்கும் சிக்சரை வெளுத்த 6 வீரர்கள்.. நம்ம சேவாக் இல்லாம எப்படி

கிரிக்கெட்டில் தைரியமாக விளையாடக்கூடிய வீரர்கள் பலர் இருக்கின்றனர். சில பேர் தங்களுக்கு உரிய பாணியில் முதலிலிருந்தே மட்டையை சுழற்றி வீசும் அதிரடி ஆட்டக்காரர்களாக இருப்பார்கள். இன்னும் சில பேர் ராகுல் டிராவிட் போன்ற நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரராக இருப்பார்கள். அப்படி ஆக்ரோசமாக முதல் பந்தையே சிக்ஸர் பறக்கவிட்ட 6 வீரர்களை இதில் பார்க்கலாம்.

விரேந்திர சேவாக்: இவர் பல போட்டிகளில் முதல் பந்தில் சிக்சர்கள் அடித்து உள்ளார். குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிராக டிம் சவுதி பந்துவீச்சில் முதல் ஓவரிலேயே மூன்று சிக்ஸர்கள் அடித்து உள்ளார்.

சாகித் அப்ரிடி: இவரை பூம் பூம் அப்ரிடி என்று தான் கூறுவார்கள். இவருடைய வரலாற்றில் நிதானம் என்பதே கிடையாது . கிட்டதட்ட எல்லாப் போட்டிகளையும் இவர் சிக்ஸ் மூலம்தான் தொடங்குவார். அதிலும் இவர் இலங்கைக்கு எதிராக உலக கோப்பையில் சமிந்தா வாஸின் முதல் பந்திலேயே சிக்சரை பறக்க விட்டு உள்ளார்.

Also read: விரேந்திர சேவாக்கின் மறக்க முடியாத 5 வரலாற்று சாதனைகள்.. முல்தான் இன் சுல்தான்

கிறிஸ் கெயில்: மேற்கிந்திய தீவுகள் அணியின் ஏலியன் இவர். சில பந்துகளை மைதானத்திற்கு வெளியில் அடித்து தொலைத்தும் விடுவார். இவர் பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் முதல் பந்திலேயே சிக்ஸர் பறக்க விட்டுள்ளார்.

பிலோ வாலஸ்: இவர் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு ஒரு காலத்தில் ஓபனிங் வீரராக களம் இறங்கி வந்தார் . ஜவகல் ஸ்ரீநாத் வீசிய முதல் பந்தை சிக்ஸர் அடித்தார்.

Also read: கிறிஸ் கெயில் ஒரு நாள் போட்டியிலிருந்து விலகல்.! ரசிகர்கள் அதிர்ச்சி

ஹெர்ஷெல் கிப்ஸ்: 6 பந்துகளில் 6 சிக்சர் அடித்து சாதனை படைத்த வீரர்களில் இவரும் ஒருவர். இவர் ஆஸ்திரேலிய அணியின் ஜேசன் கில்லஸ்பி வீசிய முதல் பந்தை அசால்டாக 6 ரன்களை அடித்து அரங்கத்தை ஆரவாரம் செய்ய வைத்தார்.

செய்யது அன்வர்: எப்பொழுதுமே இந்தியாவிற்கு தலைவலி கொடுக்கும் வீரர்களில் ஒருவர் அன்வர். குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக இவருடைய பெர்பாமன்ஸ் நன்றாக இருக்கும். இவர் ஜிம்பாப்வேக்கு எதிராக ஒரு போட்டியில் ஆட்டம் தொடங்கிய முதல் பந்தில் சிக்சர் விளாசினார்.

Also read: சாதனை படைத்த கிரிஸ் கெயில்- பைன் போட்ட ஐபிஎல் நிர்வாக குழு

Trending News