வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சிவகார்த்திகேயன் கூட பிறந்த நாள் கொண்டாடும் 6 நட்சத்திரங்கள்.. எல்லாமே விஜய் டிவி கண்டுபிடிப்பா இருக்கே!

6 stars celebrating Sivakarthikeyan’s birthday: திறமை இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு உதாரணமாக காமெடி நடிகராக சினிமாவிற்குள் நுழைந்த சிவகார்த்திகேயன் படிப்படியாக அவருக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தற்போது தவிர்க்க முடியாத ஹீரோவாக ஜொலித்து விட்டார். அந்த வகையில் இவருடைய படத்தை குடும்பத்துடன் பார்க்கும் அளவிற்கு ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

அப்படிப்பட்ட சிவகார்த்திகேயன் இன்று அவருடைய 39 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அதேபோல் இதே நாளில் பிறந்த நாளை கொண்டாடி வரும் பிரபலங்களும் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே விஜய் டிவியின் கண்டுபிடிப்புகள் தான்.

திவ்யதர்ஷினி: விஜய் டிவியின் செல்லப்பிள்ளை மற்றும் ஹீரோயின்கள் அளவுக்கு ஒரு தொகுப்பாளனியாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் டிடி. தற்போது இருக்கும் சினிமா பிரபலங்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பையும், அவர்களுக்கு இணையான ஒரு ரேஞ்சும் இவரிடம் இருக்கிறது. அந்த அளவிற்கு பேச்சுதிறமை கொண்ட தொகுப்பாளினி. இவருக்கு தற்போது 39 வயதாகிறது இருப்பினும் அழகும் இளமையும் கொஞ்சம் கூட குறையாமல் துள்ளலாக தான் இருக்கிறார்.

தாடி பாலாஜி: சினிமாவில் ஒரு காமெடியனாக வலம் வந்த தாடி பாலாஜி போகப்போக வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் விஜய் டிவியில் செட்டில் ஆகிவிட்டார். அதில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி ஷோ மற்றும் காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் பெற்றார். அடுத்து இவருக்கும் இவர் மனைவிக்கும் ஏற்பட்ட தகராறால் தொடர்ந்து விஜய் டிவி நிகழ்ச்சியில் வர முடியாமல் அவ்வப்போது தலை காட்டிக் கொண்டு வருகிறார். அப்படிப்பட்ட இவருக்கு தற்போது 46 வயது ஆகிறது.

வடிவேல் பாலாஜி: நகைச்சுவை மற்றும் மிமிக்ரியில் மிகவும் பிரபலமானவர்தான் வடிவேல் பாலாஜி. அத்துடன் மற்ற கலைஞர்களுக்கும் இவரால் முடிந்த உதவிகளை செய்து முன்னேற்றி விடுவார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொடங்கி ஜோடி நம்பர் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இதற்கு இடையில் அது இது எது நிகழ்ச்சி, சிரிச்சா போச்சு என்ற சுற்றுக்கு ஒன் மேன் ஆர்மியாக இருந்து காமெடியில் கலக்கி இருக்கிறார். தற்போது இவர் நம்முடன் இல்லாவிட்டாலும் இவருடைய காமெடிகள் நம்மளை என்னைக்கு மகிழ்விக்கும்.

Also read: சிவகார்த்திகேயன் ஆசையில் விழுந்த மண்.. ரஜினிக்கு வில்லனாக சிஷ்யனை லாக் செய்த லோகேஷ்

சதா: தமிழில் ஜெயம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின் தொடர்ந்து பல படங்களில் முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாக நடித்து இவருக்கான இடத்தை பிடித்துக் கொண்டார். பிறகு 2014 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஜோடி நம்பர் 9வது சீசனில் சதா நடுவராக சேர்ந்தார். அதன் மூலம் மறுபடியும் சதாவிற்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்து டார்ச் லைட் என்ற படத்தில் நடித்தார். தற்போது சதாவிற்கு 39 வயதாகி இன்று அவருடைய பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

விஜே மகேஸ்வரி: ஆரம்பத்தில் சன் மியூசிக் சேனலில் விஜேவாக இவருடைய பயணத்தை ஆரம்பித்தார். அதன் மூலம் சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு ஜீ தமிழில் காமெடி கில்லாடிஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். அதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இன்று 39 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

ரியோ ராஜ்: கனா காணும் காலங்கள் என்ற நாடகத்தின் மூலம் அறிமுகமாகி சரவணன் மீனாட்சி, ஜோடி நம்பர் சீசன் 1, ரெடி ஸ்டெடி போ போன்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அடுத்ததாக பிக் பாஸ் சீசன் 4 ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றார். இதற்கிடையில் வெள்ளி திரையில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்று நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா மற்றும் பிளான் பண்ணி பண்ணனும் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் சமீபத்தில் வெளிவந்த ஜோ படத்திலும் ஹீரோவாக நடித்து அனைத்து ரசிகர்களையும் வென்று விட்டார். தற்போது இவருடைய 34 பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.

Also read: விடாமல் துரத்தும் ஏழரைச் சனி.. சிவகார்த்திகேயன் படத்துக்கு ஏற்பட்ட சிக்கல்

Trending News