ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

அடிதடி காட்சிகள் இல்லாமல் ஹிட் அடித்த 6 படங்கள்.. ஒத்த சொல்லில் அலறவிட்ட விஜய்சேதுபதி

Nanban Movie: பொதுவாக திரைப்படங்களில் காதல், காமெடி காட்சிகள் எந்த அளவுக்கு ரசிக்கப்படுகிறதோ அதே அளவுக்கு படத்தின் வில்லன் மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் அதிகமாக எதிர்பார்க்கப்படும். ஆனால் இந்த 6 படங்கள் எந்த ஒரு சண்டை காட்சி இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கிறது. உணர்வுபூர்வமான காட்சிகளை வைத்து இந்த படங்கள் ஜெயித்திருக்கின்றன. மேலும் இந்த படங்களுக்கு வில்லன் என்ற கேரக்டரே அவசியம் இல்லாமல் போயிருக்கிறது.

நண்பன்: 3 இடியட்ஸ் என்னும் இந்தி படத்தின் தழுவலாக தமிழில் சங்கர் இயக்கிய திரைப்படம் தான் நண்பன். இந்த படத்தில் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடித்து இருந்தும் எந்த ஒரு மாஸ் காட்சிகளும், சண்டை காட்சிகளும் கிடையாது. கல்வி முறை மற்றும் நண்பர்கள் என மையப்படுத்தி வந்த இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

Also Read:படுதோல்வியை சந்தித்த 5 கேங்ஸ்டர் படங்கள்.. பிளாப் ஆகியும் இரண்டாம் பாகத்திற்கு ஏங்க வைத்த புதுப்பேட்டை

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்: படத்தின் ஒளிப்பதிவாளர் வாழ்க்கையில் நடந்த உண்மை கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். தலையில் அடிபட்டு குறிப்பிட்ட காலத்தில் நடந்தது அத்தனையும் மறந்து விடும் நண்பனின் திருமணத்தை எந்த பிரச்சினையும் இல்லாமல் நடத்த நண்பர்கள் படும் பாடுதான் இந்த படம். இதில் பக்கத்தில் நிற்பது தன் காதலி என்பதை கூட மறந்து அவருடைய மேக்கப் பார்த்து “பா…. யாருடா இந்த பொண்ணு” என்று விஜய் சேதுபதி கேட்கும் வசனம் இன்று வரை பாப்புலராக இருக்கிறது.

தெய்வத்திருமகள்: நடிகர் சீயான் விக்ரமின் வித்தியாசமான நடிப்பில் வெளியான திரைப்படம் தெய்வத்திருமகள். சாமி, அருள் போன்ற அதிரடி ஆக்சன் கதைகளில் நடித்துக் கொண்டிருந்த விக்ரம் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு முழுக்க முழுக்க சென்டிமென்ட்டை மட்டுமே நம்பி நடித்த திரைப்படம் இது. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read:ஹீரோவை மீறி வில்லனாக ரகுவரன் சாதித்த 5 படங்கள்.. மறக்கமுடியாத மார்க் ஆண்டனி

அபியும் நானும்: மகளை மட்டுமே மொத்த உலகமாக பார்க்கும் அப்பாவின் மனநிலையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் அபியும் நானும். இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் மற்றும் திரிஷா அவர்களுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் வில்லனான பிரகாஷ்ராஜ் இருந்தும் இந்த படத்தில் சண்டைக் காட்சிகள் என்று எதுவுமே கிடையாது.

மொழி: ஜோதிகா, பிரகாஷ் ராஜ் மற்றும் பிரித்விராஜின் சிறந்த நடிப்பில் வெளியான திரைப்படம் மொழி. மொழி என்பது வெறும் வார்த்தைகளால் மட்டுமே பேசுவது இல்லை என்பதை உணர்வுபூர்வமாக எடுத்து சொன்ன திரைப்படம் இது. எப்போதும் தன்னுடைய முரட்டுத்தனமான நடிப்பில் மிரட்டி கொண்டு இருந்த பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் முதன்முதலாக காமெடி காட்சிகளிலும் கலக்கி இருந்தார்.

அழகிய தீயே: சினிமாவில் சாதிக்க துடிக்கும் ஒரு இளைஞனை சுற்றி நடக்கும் அழகான காதல் பின்னல் தான் அழகிய தீயே திரைப்படத்தின் கதை. இந்த படத்தை ராதா மோகன் இயக்கியிருந்தார். பிரசன்னா, நவ்யா நாயர், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். சண்டைக் காட்சிகளை இல்லாத இந்த படமும் ரசிகர்களிடையே நேர்மறை விமர்சனத்தை பெற்றது.

Also Read:இயக்குனர் இமயம் படுமோசமாக இயக்கிய 6 படங்கள்.. பிரியாமணியை வைத்து கேவலமாக ஆடிய சைக்கோ ஆட்டம்

- Advertisement -spot_img

Trending News