திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அடுத்தடுத்து வரவிருக்கும் கமலின் 6 படங்கள்.. ரஜினியின் மார்க்கெட்டை உடைக்க தரமான 6 இயக்குனர்களுடன் கூட்டணி

கமல்ஹாசனின் விக்ரம் படத்திற்கு முன்னதாக நான்கு வருடங்கள் கமலின் படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த அப்செட்டில் இருந்தனர். இந்த சூழலில் கமல் மீண்டும் பழைய எனர்ஜியுடன் அடுத்தடுத்த படங்களில் களமிறங்க உள்ளார். ரஜினியின் தற்போதைய மார்க்கெட்டை உடைக்க தரமான 6 இயக்குனர்களுடன் கமல் கூட்டணி போட உள்ளார்.

ஷங்கர் : கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணியில் ஏற்கனவே இந்தியன் படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இதே கூட்டணியில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. லைக்கா ப்ரொடக்ஷன் இப்படத்தை தயாரிக்கிறது. அடுத்த ஆண்டு இந்தியன் 2 படம் வெளியாக உள்ளது.

Also Read :65 ஆண்டுகளாக கமல் சம்பாதித்த மொத்த சொத்து.. லண்டனில் வீடு, சொகுசு காரு என மறைக்கப்பட்ட லிஸ்ட்

பா ரஞ்சித் : தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை எடுத்து வெற்றி கண்டு வருகிறார் பா ரஞ்சித். தற்போது இவரது இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தங்கலான் படம் உருவாகி வருகிறது. இதைத்தொடர்ந்த கமலின் 233வது படத்தை பா ரஞ்சித் இயக்க உள்ளார். இவர் கமலுக்காக ஒரு தரமான கதையை தயார் செய்து வைத்துள்ளார்.

மணிரத்தினம் : கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் வெளியான நாயகன் படம் தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இந்நிலையில் நேற்று கமலின் பிறந்தநாள் அன்று அவரின் 234 வது படத்தை மணிரத்தினம் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படம் 2024 இல் வெளியாக உள்ளது.

Also Read :அடுத்தடுத்து வரிசைகட்டி நிற்கும் ரஜினி, கமல் படங்கள்.. மீண்டும் மோதிக் கொள்ளும் உலக நாயகன், சூப்பர் ஸ்டார்

எச் வினோத் : வினோத் தற்போது அஜித்தின் துணிவு படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்த கையோடு கமல்ஹாசனின் படத்தை வினோத் இயக்க உள்ளார். முதல் முறையாக இந்தக் கூட்டணி இணைய உள்ளது. இது கமலின் 235 ஆவது படமாகும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும்.

வெற்றிமாறன் : இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி, விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து விடுதலை படத்தை எடுத்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார். அதன் பிறகு உலகநாயகனுடன் கைகோர்த்து அவரின் 236 ஆவது படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார்.

மகேஷ் நாராயணன் : மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் கமல் உறுதி செய்திருந்தார். அந்த வகையில் கமலஹாசனின் 237 வது படத்தை மகேஷ் நாராயணன் இயக்க உள்ளார்.

Also Read :கமல்ஹாசனை வியக்க வைத்த பிரபலம்.. இறுதிவரை அவருடன் இணைய முடியாமல் போன துரதிர்ஷ்டம்

Trending News