புதன்கிழமை, ஜனவரி 22, 2025

6000 நாடகங்கள் 1500 படங்கள், நடித்த நடிகை.. எம்ஜிஆர் முதல் சிம்பு வரை நடித்த ஒரே நடிகை

The only actress who acted from MGR to Simbu: அந்தக் காலத்தில் இருந்து இப்பொழுது வரை தமிழ் சினிமாவில் எத்தனையோ அம்மாக்கள், பாட்டிகள் கதாபாத்திரங்கள் வந்து போயிருக்கிறது. ஆனாலும் அதில் மறக்க முடியாத பல கதாபாத்திரங்கள் மக்களிடம் கைத்தட்டலை பெற்றிருக்கிறது. அப்படி இவர்கள் எல்லாத்துக்கும் மூத்தவராகவும், பழம்பெரும் நடிகையாக எம்ஜிஆர் முதல் சிம்பு வரை நடித்த படங்களில் குணச்சித்திர கதாபத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை எஸ் என் லட்சுமி.

1927 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் செந்நெல்குடி அருகே உள்ள பொட்டல்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்தார். இவர்தான் வீட்டின் கடைசி பிள்ளையாக இருந்ததால் வீட்டின் வறுமையை கருத்தில் கொண்டு இவருடைய நடிப்பை உச்சகட்டமாக கொடுத்தார்.

உலக சாதனை படைத்த நடிகை

பிறகு வீட்டை விட்டு நடிப்பில் முழு கவனத்தை செலுத்துவதற்காக சென்னைக்கு வந்தார். சென்னைக்கு வந்த இவர் பல போராட்டங்களையும் கஷ்டங்களையும் தாண்டி நாடகத்தில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் கண்ணம்மா என் காதலி படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த வகையில் 1948 ஆம் ஆண்டு வெளியாகி இன்றும் வரை தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கும் சந்திரலேகா படத்தில் நடித்தார்.

இதில் கிடைத்த இவருடைய கதாபாத்திரம் தான் தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைப்பதற்கு அஸ்திவாரமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து தாமரைக் குளம், எங்கள் குலதெய்வம், நாலு வேலி நிலம் உள்ளிட்ட படங்களில் நடித்து எம்ஜிஆரின் பாக்தாத் திருடன் படத்தில் நடித்து புலியுடன் சண்டை போட்டு நடித்த காட்சிகள் மிரள விட்டிருப்பார்.

இதனைத் தொடர்ந்து நாகேஷ் நடித்த சர்வர் சுந்தரம் படத்தில் சுந்தரத்தின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து அதன் பின்பு பல படங்களில் அம்மாவாக கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அந்தக் காலத்திலேயே காரை ஓட்டி துணிச்சலுடன் தனி ஒரு நபராக வாழ்ந்து காட்டிய நடிகை. தொடர்ந்து சிவாஜி படங்களில் நடித்து ரஜினி மற்றும் கமலுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

அந்த வகையில் கமலுக்கு மிகவும் பிடித்தவராக மாறிப்போன எஸ் என் லட்சுமி மகாநதி படத்தில் மாமியார் கேரக்டருக்கு கமல் கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். தேவர் மகன், மைக்கேல் மதன காமராஜன், காதலா காதலா, விருமாண்டி, போன்ற பல முக்கியமான படங்களிலும் எஸ் என் லட்சுமிக்கு, கமல் வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். அன்றே தலைமுறைகளுக்கு மட்டுமல்லாமல் இப்பொழுது இருக்கும் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு ஆகிய உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

கடைசியாக விஜய்யுடன் குருவி படத்தில் மற்றும் சிம்புவின் சிலம்பாட்டம் படத்திலும் நடித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் சின்னத்திரையிலும் தென்றல், சரவணன் மீனாட்சி போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார். கலையை மட்டுமே நம்பி காலம் காலமாக வாழ்ந்து வந்த எஸ் என் லட்சுமி கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 85 வயதில் மறைந்திருக்கிறார்.

அந்த வகையில் கிட்டத்தட்ட 64 வருட சினிமா வாழ்க்கையில் 6000 நாடகங்கள் 1500 திரைப்படங்களில் நடித்த ஒரே நடிகை என்று சொல்லும் அளவிற்கு உலக சாதனை படைத்திருக்கிறார்.

கமல் பற்றி சுற்றிய சர்ச்சைகள்

Trending News