வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கிராமிய மணம் வீசும் 7 படங்கள்.. கொம்பன் கார்த்திக்கு 2 ஹிட் கொடுத்த முத்தையா

பாரதிராஜாவின் படங்கள் கிராமத்து மனம் மாறாமல் ரசிகர்களுக்கு கொண்டு சேர்ப்பார். இவருக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் கிராமத்து கதையில் படங்களை எடுத்து வெற்றி காண்பவர் இயக்குனர் முத்தையா. இவருடைய இயக்கத்தில் வெளியான 7 படங்களை தற்போது பார்க்கலாம்.

குட்டிப் புலி : முத்தையா இயக்கத்தில் சசிகுமார், லட்சுமிமேனன் நடிப்பில் வெளியான திரைப்படம் குட்டிப் புலி. எப்போதுமே கிராமத்து கதை கொண்ட படங்களை தேர்ந்தெடுக்கும் நடிக்கும் சசிகுமார் குட்டி புலி படத்தில் முரட்டு ஆளாக நடித்திருந்தார். ஒரு உணர்ச்சி பூர்வமான படமாக இப்படம் அமைந்திருந்தது.

Also Read : நானும் செட்டிலாக வேண்டாமா என ஆர்யா செய்த வேலை.? பறிபோன பட வாய்ப்பு, தட்டிப்பறித்த கார்த்தி

மருது : முத்தையா இயக்கத்தில் கிராமத்து கதையம்சம் கொண்ட படமாக வெளியானது மருது. விஷால், ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிப்பில் இந்த படம் உருவாகிறது. கிராமத்து கதாபாத்திரங்களுக்கு பக்காவாக பொருந்தும் விஷால் இந்த படத்தில் மருது கதாபாத்திரத்தில் அசத்தி இருந்தார்.

கொம்பன் : முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லட்சுமிமேனன், ராஜ்கிரன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் கொம்பன். கார்த்தியின் அறிமுகப்படமான பருத்திவீரன் கிராமத்து கதையம்சம் கொண்ட படம் தான். அதேபோல் கொம்பன் படத்திலும் அனைத்து கதாபாத்திரங்களும் பக்காவாக பொருந்தி இருந்தது.

கொடிவீரன் : முத்தையா இயக்கத்தில் மீண்டும் சசிகுமார் நடிப்பில் வெளியான திரைப்படம் கொடிவீரன். அண்ணன், தங்கையின் பாசத்தை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. தங்கையின் வாழ்க்கைக்காக எதையும் செய்யும் இரண்டு அண்ணன்களின் கதையாக இப்படம் அமைந்திருந்தது.

Also Read : சாதி பெருமைகளை பேசியே முத்தையா எடுத்த 5 படங்கள்.. கார்த்தியை வைத்து செய்த 2 வசூல் வேட்டை

தேவராட்டம் : முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக், மஞ்சுமா மோகன், சூரி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தேவராட்டம். இந்த படத்தில் வெற்றி என்ற கதாபாத்திரத்தில் கௌதம் கார்த்திக் நடித்திருந்தார். இந்தப் படமும் கிராமத்து மணம் வீசும் படமாக அமைந்திருந்தது.

புலிக்குத்தி பாண்டி : முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் புலிகுத்தி பாண்டி. தனது கணவனை கொலை செய்தவர்களை எப்படி மனைவி பழி வாங்குகிறார் என்பதே புலிக்குத்தி பாண்டி படத்தின் கதை. இதில் லட்சுமி மேனன் துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

விருமன் : முத்தையா இயக்கத்தில் இந்த ஆண்டு மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது விருமன். கார்த்தி, அதிதி சங்கர் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கிடைத்தது. அதுமட்டுமின்றி வசூலிலும் இப்படம் பட்டையை கிளப்பியது.

Also Read : விஷாலுக்கு சொம்படிக்கும் நட்பு வட்டாரம்.. பலகோடி நஷ்டம், கண்டுகொள்ளாத விருமன்

Trending News