திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

உழைப்பாளர் தினத்தில் ரிலீஸ் ஆன 7 வெற்றி படங்கள்.. எவர்க்ரீன் ஹிட் கொடுத்த ரஜினிகாந்த்

ஆண்டுதோறும் மே மாதம் முதலாம் தேதி உழைப்பாளர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் நடிகர் அஜித்குமாரின் பிறந்த நாளையும் அவருடைய ரசிகர்கள் இந்த தேதியில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தீபாவளி மற்றும் பொங்கலுக்கு எப்படி புது படங்கள் ரிலீஸ் ஆகிறது அதேபோன்று மே தினத்திலும் புதுப்படங்கள் ரிலீஸ் ஆகும். இதுவரை மே தினத்தில் ரிலீஸ் ஆன படங்களில் ஏழு படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்து இருக்கின்றன.

சாமி: இயக்குனர் ஹரி இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான அதிரடி ஆக்சன் திரைப்படம் சாமி. இந்த படம் நடிகர் விக்ரமுக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பல வருடம் கழித்து தமிழ் சினிமாவில் ஒரு நல்ல போலீஸ் கதை ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது என்றால் அது இந்த சாமி திரைப்படம் தான். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழில் மீண்டும் நிறைய போலீஸ் படங்கள் வர ஆரம்பித்தது.

Also Read:சூப்பர் ஸ்டார் ஆசைப்பட்ட அந்த மூன்று விஷயம்.. வெளிப்படையாக எல்லா மேடைகளிலும் சொல்லும் ரஜினி

பசங்க: இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பசங்க. முழுக்க முழுக்க சின்ன குழந்தைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த சமூக விழிப்புணர்வு திரைப்படம் எந்த ஒரு முக்கிய ஹீரோவும் இல்லாமலேயே மிகப்பெரிய வெற்றி பெற்றது.

ஜனா: வாலி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமாரின் பிறந்த நாளான மே 1ல் ரிலீசான திரைப்படம் ஜனா. இந்த படத்தில் சினேகா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். படத்தின் கதை கொஞ்சம் நாயகன், பாட்ஷா போன்ற திரைக்கதைகளுடன் ஒன்றியது போல் இருந்தாலும் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.

எதிர்நீச்சல்: இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக இருந்த துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முதன் முதலில் ஒரு சீரியஸ் கதாநாயகனாக நடித்த திரைப்படம் எதிர்நீச்சல். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. 17 கோடி வரை வருமானம் ஈட்டியது .

Also Read:சூப்பர் ஸ்டாரை சரமாரியாக விளாசிய ரோஜா.. விஷயம் தெரியாமல் பேசி சிக்கலில் மாட்டிக்கொண்ட ரஜினி

தில்லு முல்லு: இயக்குனர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதன் முதலில் நடித்த முழு நீள நகைச்சுவை திரைப்படம் தில்லு முல்லு. இந்த படத்தில் ரஜினிகாந்த் காமெடியிலும் வெற்றி பெற்றிருந்தார். இன்றைய தலைமுறை வரை இந்த படத்தை சினிமா ரசிகர்கள் விரும்பி பார்க்கும் அளவிற்கு எவர்கிரீன் ஹிட் ஆக இருக்கிறது.

சூது கவ்வும்: இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் சூது கவ்வும். இந்த படம் விஜய் சேதுபதிக்கு சினிமா வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. வழக்கமான கதைக்களம் இல்லாத வித்தியாசமான காட்சிகளுடன் அமைந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

வாலி: இயக்குனர் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்த வாலி திரைப்படம் அவருடைய பிறந்தநாள் அன்று ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்தில் அஜித் வித்தியாசமான நெகட்டிவ் ஷேட் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

Also Read:உறுதி செய்யப்பட்ட தலைவர் 171.. சம்பளம் எல்லாம் முக்கியமில்ல, இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினி

Trending News