திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இந்த வாரம் வசூல் வேட்டைக்கு தயாராகும் 8 படங்கள்.. ரீ ரிலீஸாகும் வேட்டையாடு விளையாடு

June 23rd Tamil Movie Releases: ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை எண்ணி வெள்ளிக்கிழமை படம் வெளியாவது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஆதிபுருஷ், பொம்மை மற்றும் எறும்பு படங்கள் வெளியாகி இருந்தது. அந்த வகையில் இந்த வாரம் 23ஆம் தேதி 8 படங்கள் வெளியாகிறது.

அதில் வசந்த் ரவி நடித்துள்ள ‘அஸ்வின்ஸ்’ படம் வெளியாக இருக்கிறது. இப்படம் பிளாக் டூரிசம் என்ற திரில்லர் கதைகளை கொண்டுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து ராம் சங்கையா இயக்கத்தில் பசுபதி, ரோகினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி ஆகியோர் நடிப்பில் ‘தண்டட்டி’ படம் உருவாகி இருக்கிறது.

Also Read : காதல் தோல்விக்கு தற்கொலை தான் முடிவு.. தகர்த்தெறிந்த புன்னகை மன்னன் கமலின் 5 ஹிட் படங்கள்

இந்த படம் வெளியாவதற்கு முன் சில சர்ச்சைகளை சந்தித்ததால் படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அடுத்ததாக காதலில் விழுந்தேன் படத்தில் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சுனேனா நடிப்பில் ‘ரெஜினா’ என்ற படம் உருவாகி இருக்கிறது. இப்படமும் ஜூன் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

‘பாயும் ஒளி நீ எனக்கு’ என்ற படத்தில் விக்ரம் பிரபு மற்றும் வாணி போஜன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குனர் கார்த்திக் அத்வைத் இயக்கி உள்ள இப்படம் வருகிற வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மேலும் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மகன் சிவக்குமார் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

Also Read : மார்க்கெட் இறங்கியதால் மதிக்காத சுந்தர் சி.. ஒயிட் பியூட்டி தமன்னாவின் பரிதாப நிலை

‘அழகிய கண்ணே’ என்று உருவாகியுள்ள இப்படத்தில் சிவகுமாருக்கு ஜோடியாக சஞ்சிதா செட்டி நடித்துள்ளார். இப்படத்தில் சம்பளம் வாங்காமலே விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாராம். ஆகையால் இந்த படத்தில் மீதான எதிர்பார்ப்பும் கூடுதலாக இருக்கிறது. மேலும் மற்றொரு த்ரில்லர் படமும் இதே நாளில் வெளியாகிறது.

ஆதர்ஷ் மதிகாந்தம் இயக்கத்தில் காதம்பரி, அருண் ஆகியோர் நடிப்பில் ‘நாயாடி’ என்ற படம் உருவாகி இருக்கிறது. இப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் 16 விருதுகளை பெற்றுள்ளதாம். கண்டிப்பாக ரசிகர்களுக்கு ஏற்படும் பிடிக்கும் என நம்பிக்கை அளித்துள்ளது. அடுத்ததாக சுந்தர் சி நடிப்பில் ‘தலைநகரம் 2’ படம் வெளியாகிறது.

இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் படம் எப்படி இருக்கிறது என்று ரிலீசானால் தெரியவரும். மேலும் கமலின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘வேட்டையாடு விளையாடு’ படம் ஜூன் 23ஆம் தேதி புது பொலிவுடன் ரி ரிலீஸாக இருக்கிறது. இந்த 8 படங்களும் இப்போது வசூல் வேட்டைக்கு தயாராக உள்ளது.

Also Read : பேய் கதை கைவிட்டதால் ஆக்சன் கதையை கையில் எடுத்த சுந்தர் சி .. எப்படி இருக்கு தலைநகரம் 2 ட்ரெய்லர்

Trending News