வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

2022 இல் நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட 8 படங்கள்.. விஜய்யை பின்னுக்கு தள்ளிய ராஜமவுலி

கோவிட் தொற்று காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் ஓடிடி தள்ளங்கள் தலை தூக்கியது. இப்போது திரையரங்குகளில் படம் வெளியானாலும் ஒடிடியில் படத்தை பார்க்கத்தான் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அந்த வகையில் 2022 இல் நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட 8 படங்களை இப்போது பார்க்கலாம்.

சூரியவன்ஷி : பாலிவுட்டில் அக்ஷய் குமார் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சூரியவன்ஷி. இந்தப் படம் திரையரங்கு வெளியீட்டுக்கு பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில் இந்த ஆண்டு அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் இப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

ஆர்ஆர்ஆர் : ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் மற்றும் பல பிரபலங்கள் நடிப்பில் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவான ஆர்ஆர்ஆர் படம் இந்த ஆண்டு வெளியானது. இப்படம் திரையரங்கு வெளியிடிலே நல்ல வசூல் பெற்ற நிலையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியும் லாபத்தை தந்தது.

Also Read : டுத்த 500 கோடி பட்ஜெட் படத்தை உறுதி செய்த ராஜமவுலி.. கதை எழுதுவது யார்னு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

கங்குபாய் கதியவாடி : ஆலியா பட், அஜய் தேவகன் ஆகியோர் நடிப்பில் வெளியான கங்குபாய் கதைய வாடி படம் திரையரங்கு வெளியீட்டுக்கு பின் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது. 160 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 209 கோடி வசூல் செய்திருந்தது. இப்படம் ஓடிடியில் பார்க்கப்பட்ட அதிக படங்களில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

பூல் புலையா 2 : அனீஸ் பாஸ்மி இயக்கத்தில் தபு, கார்த்திக் ஆரியன், கியாரா அத்வானி ஆகியோ நடிப்பில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் பூல் புலையா 2. பாலிவுட்ல இந்த ஆண்டு அதிக வசூல் செய்த படங்களில் இந்தப் படம் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தது. இப்படம் ஓடிடியில் வெளியாகி அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது.

பீஸ்ட் : நெல்சன் திலிப்குமார் இயக்கத்தின் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படம் கிட்டத்தட்ட 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் 250 கோடி வசூல் செய்திருந்தது. அதன் பின்பு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகி லாபத்தை பெற்றது.

Also Read : பிரியாணி விருந்தில் வந்த தீராத பகை.. 14 வருடமாக ஜெயலலிதா, விஜய்யை வெறுத்து ஒதுக்கிய ரகசியம்

டார்லிங்ஸ் : ஆலியா பட், ஷெபாலி ஷா, விஜய் வர்மா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் டார்லிங்ஸ். இப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. இப்படத்திற்கு நேர்மையான விமர்சனங்கள் கிடைத்தது மட்டுமல்லாமல் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து சென்றது.

பதாய் டோ : பாலிவோட்டில் முழு நீள நகைச்சுவை படமாக வெளியானது பதாய் டோ. ராஜ்குமார் ராவ் மற்றும் பூமி பெட்னேகர் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிக பார்வையாளர்கள் கொண்ட பட்டியலில் இப்படமும் இடம்பெற்றுள்ளது.

83 : கபீர் கான் இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ஜீவா, கபில் தேவ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் 83. இப்படம் பாலிவுட்டில் நல்ல வசூலை பெற்று தந்தது. அதுமட்டுமின்றி பல விருதுகளையும் வாங்கி குவித்தது. அதன் பிறகு ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.

Also Read : அப்பாவுக்கு போட்டியாக களமிறங்கிய ஜீவா.. சின்ன கல்லை போட்டு பெத்த லாபம் பார்க்க போட்ட பிளான்

Trending News