தமிழ் படங்களில் சில பாடல் காட்சிகளில் நிறைய வெளிநாட்டு பெண்களை ஆட வைப்பார்கள் அல்லது ஏதாவது ஒரு காட்சிக்கு சிறப்பு தோற்றமாக வெளிநாட்டவர்கள் நடித்திருப்பார்கள். இது எப்போதுமே தமிழ் ரசிகர்களால் அதிகமாக கவனிக்கப்படும் காட்சிகளாக இருக்கும். சமீபத்தில் நிறைய படங்களில் வெளிநாட்டவர்களை வில்லனாக நடிக்க வைக்கிறார்கள். இது தமிழ் ரசிகர்களிலேயே நல்ல வரவேற்பை பெறுகிறது. அப்படி எட்டு வெளிநாட்டவர்கள் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் ஆழமாக பதியும் கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள்.
நாதன் ஜோன்ஸ்: நடிகர் ஜெயம் ரவி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான பூலோகம் திரைப்படத்தில் நாதன் ஜோன்ஸ் நடித்திருந்தார். இவர் ஒரு ஆஸ்திரேலியா நடிகர் மற்றும் மல்யுத்த வீரர் ஆவார் . இந்த படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
சன்னி லியோன்: ஜெய் மற்றும் சுவாதி ரெட்டி நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வடகறி. இந்த படத்தில் பிரபல நடிகை சன்னிலியோன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இவருக்காகவே இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
Also Read:வசீகரத்தால் கைவசப்படுத்திய சன்னி லியோனின் 4 படங்கள்.. ஆட்டத்தைப் பார்க்க ஹவுஸ்புல்லான திரையரங்கு
ப்ருனா அப்துல்லா: நடிகை ப்ருனா அப்துல்லா கடந்த 2019 ஆம் ஆண்டு அஜித்குமார் நடிப்பில் வெளியான பில்லா 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர். சுற்றுலா பயணியாக இந்தியா வந்த இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஜானி ட்ரை ஙுயென்: இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ஏழாம் அறிவு. இதில் சீன நாட்டை சேர்ந்த ஜானி ட்ரை ஙுயென், டாங்கலி என்னும் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்தார்.
ரோலந்த் கிக்கிங்கேர்: நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் பேராண்மை. இந்தப் படத்தில் ரோலந்த் கிக்கிங்கேர் என்ற வெளிநாட்டு நடிகர் ரவிக்கு வில்லனாக நடித்திருந்தார். சண்டை காட்சிகளில் தன்னுடைய கட்டுக்கோப்பான உடல் அமைப்பை வைத்து மிரட்டி இருந்தார் இவர்.
Also Read:வசமாய் மாட்டி கொண்ட சன்னி லியோன்.. விடாமல் துரத்திய வழக்கு
எமி ஜாக்சன்: ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன் மதராபட்டினம் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில் பல வருடங்கள் கழித்து ஒரு வெளிநாட்டவர் கதாநாயகியாக நடித்தது இந்த படத்தில் தான். அதன் பிறகு எமி ஜாக்சனுக்கு அடுத்தடுத்து நிறைய தமிழ் பட வாய்ப்புகள் கிடைத்தன.
அன்டி ஜாஸ்கிலேன்: தமிழ் சினிமாவின் இதுவரை வெளியான திரில்லர் படங்களில் வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகி, மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் டிமான்டி காலனி. இந்த படத்தில் சர் டிமாண்டியின் ஆவியாக வரும் அன்டி ஜாஸ்கிலேன் தன்னுடைய பார்வையிலேயே ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டி இருந்தார்.
ரிச்சர்ட் ஆஷ்டன்: நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் விஜய் டிவி புகழ் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் 1947. இந்த படத்தில் ரிச்சர்ட் ஆஷ்டன் எனும் வெளிநாட்டவர் ராபர்ட் கிளைவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
Also Read:பிரமோஷன் செய்தும் அடிமாட்டு விலைக்கு போன படம்.. உச்சகட்ட பதட்டத்தில் இருக்கும் சன்னி லியோன்