வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

Sun Tv : CWC5-க்கு போட்டியாக சன் டிவி இறக்கிய 9 போட்டியாளர்கள்.. நடிகையால் சூடு பிடிக்கும் டாப் குக் டூப் குக்

விஜய் டிவியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இருந்து வெங்கடேஷ் பட் டீம் சன் டிவிக்கு சென்றது சர்ச்சையாக கிளம்பியது. இந்த சூழலில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக தரமான போட்டியாளர்களை இறக்கியுள்ளது சன் டிவி.

அதாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக மாதம்பட்டி ரங்கராஜன் களமிறங்கி இருக்கிறார். மேலும் தொகுப்பாளர்களாக ரக்சன் மற்றும் மணிமேகலை உள்ளனர். போட்டியாளராக விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா, ஸ்ரீகாந்த் தேவா, விடிவி கணேஷ், இர்பான், அக்ஷய் கமல் ஆகியோர் பங்கு பெறுகின்றனர்.

மறுபுறம் சன் டிவியில் ஒளிபரப்பாகும் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியில் நடுவராக வெங்கடேஷ் பட் உள்ளார். வைகைப்புயல் வடிவேலு முதல் ஷோவில் விருந்தினராக வர இருக்கிறார். விஜே ராகேஷ் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்.

டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியில் பங்கு பெறும் 9 போட்டியாளர்கள்

இதில் வில்லன் நடிகர்கள் சாய் தீனா மற்றும் சாமிநாதன் விஜயன் ஆகியோர் பங்கு பெறுகின்றனர். மேலும் சன் டிவியில் கயல் தொடரின் மூலம் ரசிகர்களை கவர்ந்த சைத்ரா ரெட்டி பங்கு பெறுகிறார். குறும்படங்களில் நடித்து பிரபலமான நரேந்திர பிரசாத் டாப் குக் டூப் குக் போட்டியாளராக கலந்து கொள்கிறார்.

மாடல் அழகி மற்றும் குறும்படங்களில் நடித்த ஷாலி நிவேகாஷ், கேடி பில்லா கில்லாடி ரங்கா வீரம் போன்ற படங்களில் நடித்த சுஜாதா சிவகுமார் ஆகியோரும் இதில் பங்கு பெறுகிறார்கள். மேலும் சின்னத்திரை நடிகை ஐஸ்வர்யா ஆகியோரம் பங்கு பெறுகின்றனர்.

கடைசியாக டிஆர்பியை ஏற்றுவதற்காக சன் டிவி பக்கா பிளான் போட்டு நடிகை சோனியா அகர்வால் இறக்கி உள்ளனர். கண்டிப்பாக இவரால் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியின் டிஆர்பி எகிறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Trending News