படங்கள் ஓடாவிட்டாலும் சம்பளத்தை மட்டும் ஹீரோக்கள் குறைப்பதாக இல்லை. ஆர்யா, விஷால், ஜெயம் ரவி, கார்த்தி, கார்த்தி போன்ற இரண்டாம் கட்ட ஹீரோக்கள் தங்களுக்கு சம்பளமாக 15 முதல் 20 கோடிகள் வரை கேட்கிறார்கள்
பெரிய பட்ஜெட் படங்கள், பெரிய தயாரிப்பாளர்கள் என்றால் இவர்கள் கேட்கும் சம்பளத்தை சமாளித்து விடலாம். ஆனால் படத்தின் பட்ஜெட்டே 20 கோடிகள்தான் என்றால் இது சாத்தியமில்லை. படங்கள் ஓடினாலும் பரவாயில்லை இவர்களது படம் முதலுக்கே மோசமாய் முடிகிறது.
இவர்களாலேயே இப்பொழுது ஓ டி டி நிறுவனங்கள் பல அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதிக விலை கொடுத்து வாங்கியும் பல படங்கள் ஓ டி டி க்கு நஷ்டத்தை கொடுத்து வருகிறது. அதனால் சில ஹீரோக்களின் படங்களை அதிக தொகை கொடுத்து வாங்க முடியாது என முட்டுக்கட்டைகள் போட்டு வருகிறது.
200 இருந்து 30 கோடிக்கு சறுக்குன மாஸ் ஹீரோ
பாலிவுட்டில் 200 கோடிகள் வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர் அக்ஷய்குமார். ஆனால் அவருக்கு இப்பொழுது அங்கே கெட்ட நேரம் பிடித்து ஆட்டுகிறது. தொடர்ந்து 9 படங்கள் படுதோல்வி ஆகியுள்ளது. தற்போது ஸ்கை போர்ஸ் என்ற ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அக்ஷய் குமார் தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக குறைத்து விட்டார் 200 கோடிகளில் இருந்து , மொத்தமாய் சறுக்கி இப்பொழுது 30 கோடிகள் மட்டுமே சம்பளம் வாங்குகிறார். அவருடைய படங்கள் அங்கே தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதால் இந்த விபரீத முடிவை எடுத்து விட்டார்.
- பயத்தில் விரட்டியடித்த ஜெயம் ரவி மற்றும் கார்த்தி
- தொடர்ந்து அலைக்கழிக்கும் விஷால், கார்த்தி, ஜெயம் ரவி
- வெளிய போன ரெண்டு பேரும் மணிரத்தினத்திடம் சரண்டர்