சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

90களில் கொடி கட்டி பறந்து திடீரென காணாமல் போன 5 நடிகைகள்.. சுவடே தெரியாமல் போன சுவலட்சுமி

90s Top 5 Actress: சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் 60 வயதிற்கு மேலும் தங்களை ஹீரோவாக காட்டிக்கொள்ள முடிகிறது. ஆனால் நடிகைகள் 30 வயதை தாண்டினாலே அவர்களது மார்க்கெட் சரிந்து விடுகிறது. இருப்பினும் சில நடிகைகள் உச்சத்தில் இருக்கும்போதே திடீரென்று காணாமல் போய்விடுகின்றனர். அப்படிப்பட்ட 5 நடிகைகளை பற்றி பார்ப்போம்.

ரூபினி: மும்பையை சேர்ந்த நடிகை ரூபினி, 1987 முதல்1994 வரையிலான இடைப்பட்ட காலத்தில் தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டாப் நடிகர்களான மம்முட்டி, ரஜினி, கமல், மோகன்லால், சத்யராஜ், விஜயகாந்த், மோகன், ராமராஜன் உள்ளிட்ட தென்னிந்திய முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து சினிமாவை ஒரு கலக்கு கலக்கியவர். இவர் தமிழ் சினிமாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான மனிதன் என்ற படத்தில் ரூபா என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

அதன் பிறகு வரிசையாக கூலிக்காரன், என்ன பெத்த ராசா, அபூர்வ சகோதரர்கள், உழைப்பாளி போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். இவ்வாறு 90களில் கொடி கட்டி பறந்த ரூபினி 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பின், சினிமாவிற்கு முற்றிலுமாக முழுக்கு போட்டு விட்டார். இப்போதும் அவர் எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என்பதெல்லாம் ரசிகர்களுக்கு தெரியவில்லை. எங்கேயோ குடும்பம், குழந்தை குட்டி என சினிமாவை விட்டு ஒதுங்கி வாழ்ந்து வருகிறார்.

Also Read: கமல் தேடி போய் வாய்ப்பு கொடுக்கும் 5 நடிகைகள்.. ராசியான நடிகை என பெயர் வாங்கிய ஆண்ட்ரியா

அமலா: கோலிவுட்டின் ஜாம்பவான்களாக இருக்கும் கமல் மற்றும் ரஜினி இருவருடனும் நிறைய படங்களில் நெருக்கமாக நடித்து கிசு கிசுக்கப்பட்டவர் தான் நடிகை அமலா. கடைசியில் இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். கொல்கத்தாவை சேர்ந்த அமலா, தமிழ் சினிமாவிற்கு ‘மைதிலி என்னை காதலி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன் பிறகு ‘மெல்ல திறந்தது கதவு’ என்ற வெற்றி படத்தை கொடுத்தார். இவர் 90களில் டாப் நடிகையாக வலம் வந்தபோது ரஜினியுடன் ஓவர் நெருக்கம் காட்டினார்.

அதிலும் குறிப்பாக வேலைக்காரன் படத்தில் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் போது திரையில் மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்க்கையிலும் இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதாகவும், ரஜினியை அவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கிசு கிசுக்கப்பட்டது. ஆனால் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நாகர்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்த அமலா, அவ்வப்போது சின்னத்திரை நிகழ்ச்சியில் எட்டிப் பார்த்தார். ஆனால் இப்போது அதுவும் இல்லாமல், சமூக சேவை சம்பந்தப்பட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

Also Read: அமலாவுக்கு பின் ரஜினியின் காதல் சர்ச்சையில் சிக்கிய கேரளத்து நடிகை.. விவாகரத்து நோட்டீஸ் வரை சென்ற கிசுகிசு!

கனகா: 90களில் ரஜினி, ராமராஜன், சரத்குமார் என டாப் நடிகர்களுடன் மாபெரும் ஹிட் படங்களை கொடுத்த நடிகை தான் கனகா. இவர் நடித்த முதல் படமான கரகாட்டக்காரன் படத்தில் ராமராஜனுடன் போட்டி போட்டு கரகம் ஆடி சூப்பர் ஹிட் கொடுத்தார். ஒரு கட்டத்தில் இவருக்கு சினிமா பட வாய்ப்பு வராமல் போனது. ஏனென்றால் கனகாவின் உதவியாளரின் காதல்தான் அவருடைய கேரியரை சீரழித்து விட்டது. அதுமட்டுமல்ல சொத்து பிரச்சனை, தந்தையோடு மோதல், காதல் தோல்வி, பொறுப்பில்லாத கணவர் என கனகா அடுத்தடுத்து பல பிரச்சினைகளை சந்தித்ததால் இப்போது பெரும் மன அழுத்தத்தில் வாழ்ந்து வருகிறார். இவர் 30 ஆண்டு காலமாக தன்னைத்தானே மறைத்துக்கொண்டு தனிமையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சங்கீதா: 90களில் தமிழிலும் மலையாளத்திலும் டாப் நடிக்கையாக கலக்கிக் கொண்டிருந்தவர் தான் நடிகை சங்கீதா. இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகி வரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதிலும் கமலஹாசனின் மகாநதி படத்தில் பெரிய காவிரி ஆக கச்சிதமாக பொருந்தி நடித்திருப்பார். அதன் தொடர்ச்சியாக தளபதி விஜய்யின் கேரியருக்கு ட்ரைனிங் பாயிண்ட் ஆக அமைந்த பூவே உனக்காக படத்தில் சங்கீதா தான் அவருக்கு கதாநாயகியாக நடித்தார். மேலும் இவர் ராஜ்கிரனுடன் நடித்த ‘எல்லாமே என் ராசாதான்’ என்ற படத்தின் மூலம் பட்டித் தொட்டி எங்கும் ஃபேமஸானர். அதன்பின் இவர் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் சரவணனை திருமணம் செய்து கொண்டு, சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். மேலும் இவரது கணவர் இயக்கிய சிலம்பாட்டம் படத்தில் சங்கீதா உதவியாளராக இருந்துள்ளார்.

Also Read: வளையோசை கலகலவென நடிகையை துரத்தி துரத்தி காதலித்த வில்லன் நடிகர்.. விவாகரத்துக்கு பின் மலர்ந்த காதல்

சுவலட்சுமி: வங்காள நடிகையான சுவலட்சுமி 1994 ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களான அஜித், கார்த்திக், விஜய் உள்ளிட்டோருடன் இணைந்து ஆசை, கோகுலத்தின் சீதை, நிலாவே வா என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். இவருடைய வட்டம் முகம், கவர்ச்சியான பார்வை, ஹோம்லி லுக் என அம்சமாக இருக்கும் சுவலட்சுமிக்கு என்றே 90களில் தனி ரசிகர்பட்டாளமே இருந்தது. ஆனால் 2001 ஆம் ஆண்டு சயின்டிஸ்ட் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஜெனிவா, சுவிட்சர்லாந்து, சான் பிரான்சிஸ்கோ போன்ற நாடுகளில் வாழ்ந்து வந்தார். இவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்த சுவடு தெரியாமல் காணாமல் போனது அவருடைய ரசிகர்களை ஏங்க வைத்தது.

இவ்வாறு இந்த 5 நடிகைகள் தான் 90களில் டாப் நடிகைகளாக கொடி கட்டி பறந்து, அதன் பின் திடீரென்று காணாமல் போனவர்கள். அதிலும் சுவலட்சுமி சினிமாவை விட்டு விலகியது ரசிகர்களால் இன்று வரை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

Trending News