புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஒரே நாளில் 5, 6 படங்கள் நடித்த கேரக்டர் ஆர்டிஸ்ட்.. ரஜினி, கமல் என தேடி வந்த பட வாய்ப்புகள்

90களின் காலகட்டத்தில் ரொம்பவும் பிசியாக இருந்த கேரக்டர் ஆர்டிஸ்ட் தான் இந்த நடிகர். அதாவது ஒரே நாளில் ஐந்தாறு பட சூட்டிங்கில் கலந்து கொள்ளுவாராம் இவர். மேலும் 24 மணி நேரம் என்பதே இவர் கொடுத்த கால் சீட்டுக்கு பத்தாது என்பது போல் வரிசையாக படங்களில் நடித்து தள்ளி இருக்கிறார் இந்த நடிகர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன், தளபதி விஜய், அஜித் குமார் போன்றோர்களின் படங்களில் நடிப்பதற்கு தயாரிப்பாளர்கள் இவரைத்தான் தேடி வருவார்களாம். அந்த அளவுக்கு திறமையாக நடிக்க கூடியவர் இந்த நடிகர். அதே நேரத்தில் ஆரம்ப காலங்களில் சினிமாவில் கொஞ்சம் ஏமாற்றத்தையும் சந்தித்திருக்கிறார்.

Also Read: கரண் சினிமாவில் காணாமல் போக காரணம் இதுதானாம்.. வருடங்களுக்கு பிறகு வெளியான தகவல்

பின்னர் சுதாகரித்து கொண்டு அடுத்தடுத்த வாய்ப்புகளை உபயோகப்படுத்தி இருக்கிறாரார். கொஞ்சம் திமிராக பயங்கரமான வில்லத்தனத்தை காட்ட வேண்டும் என்றால் நடிகர்கள் தொடங்கி தயாரிப்பாளர்கள் வரை அணுகும் நடிகர் கரண் தான் இந்த கேரக்டர் ஆர்டிஸ்ட். வில்லத்தனமாக மட்டும் இல்லை குணச்சித்திர கதாபாத்திரத்திலும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் கரண்.

வில்லன் கேரக்டராக இருக்கட்டும் அல்லது உயிரைக் கொடுக்கும் நண்பனாக இருக்கட்டும் படத்தின் திருப்புமுனையாக அமையும் கேரக்டராக இருக்கட்டும் எதுவாக இருந்தாலும் பக்காவாக பொருந்தக் கூடியவர் நடிகர் கரண். ரஜினியின் தொடங்கி நடிகர்கள் பிரசாந்த், பிரபு போன்றோரின் படங்களிலும் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருக்கிறார் நடிகர் கரண்.

Also Read: நடிச்சா ஹீரோ தான் என வீணாப்போன 6 ஹீரோக்கள்.. பொழைக்கத் தெரியாத புள்ளைங்க!

கரணுக்கு தமிழ் சினிமாவில் நல்ல அடையாளத்தை கொடுத்த படம் என்றால் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வந்த நம்மவர் திரைப்படத்தை சொல்லலாம். மேலும் கோயம்புத்தூர் மாப்பிள்ளை திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாகவும் அடுத்து வந்த லவ் டுடே திரைப்படத்தில் விஜய்யின் நண்பனாகவும் நடித்து அசத்தியிருப்பார் கரண். அதுபோலத்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாமலை திரைப்படத்திலும் இவருடைய கேரக்டர் பேசும்படி அமைந்திருக்கும்.

மேலும் அதற்கு பின்னான காலகட்டத்தில் சாமி படம் என்றாலே சாமியை எதிர்க்கும் வில்லனாக நடித்த ஒரே கேரக்டர் கரண் தான். கண்ணாத்தாள், பாளையத்தம்மன், கோட்டை மாரியம்மன் என அடுத்தடுத்து இவர் இது போன்ற திரைப்படங்களில் நடித்தார். ஆரம்ப காலத்தில் சம்பள விஷயத்தில் கூட ஏமாற்றப்பட்ட கரண் ஏமாற்றங்களையும், தோல்விகளையும் உடைத்து தள்ளி ஆலமரமாய் வளர்ந்தார்.

Also Read: திறமை இருந்தும் வளராத 7 நடிகர்கள்.. இந்த ஒரு வாரிசு நடிகருக்கும் லக் இல்லை

 

 

Trending News