செகண்ட் இன்னிங்சில் திரையுலகினரை மிரள விடும் சிம்பு.. விட்டா சூப்பர் ஸ்டாரை மிஞ்சிடுவார் போல!

தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாபிக் ஆக இருப்பவர் தான் நடிகர் சிம்பு. என்னதான் இவர் சிறுவயதிலேயே குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமாகி தனது பன்முகத் திறமையை வெளிக்காட்டி இருந்தாலும், பல சர்ச்சைகளில் சிக்கியதால் இவருடைய மவுசு மங்கியது.

அதேபோல், சிம்புவும் வயதுக்கு மீறிய தோற்றத்தைக் கொண்டு இருந்ததால் அவருக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. இதனால் சிம்புவின் ரசிகர்கள் பெரும் மனக்கவலையில் தத்தளித்து வந்தனர்.

சமீபத்தில் சிம்பு தன்னுடைய ரசிகர்களுக்காக உடல் எடையை பெருமளவு குறைத்து, தனது சினிமா வாழ்க்கையின் செகண்ட் இன்னிங்சையும் தொடங்கிவிட்டார். ஆம், பொங்கலன்று தான் இவருடைய நடிப்பில் 35 நாட்களில் தயாரான ‘ஈஸ்வரன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி, அவருடைய ரசிகர்களை குஷி ஆக்கியது.

இந்த நிலையில் சிம்பு தற்போது தனது வழக்கத்திற்கு மாறான ஒரு புதிய பழக்கத்தை கையிலெடுத்து உள்ளதாகவும், இதனால் திரையுலகினர் அதிர்ச்சியில் உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது நடிகர் சிம்பு, முதலில் படப்பிடிப்புகளுக்கு தாமதாக வருவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனால் தற்போது சிம்பு டோட்டலாக மாறி விட்டாராம்.

ஏனென்றால், படப்படிப்பு 6 மணிக்கு என்றால் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு ஐந்து மணிக்கே வந்து விடுகிறாராம் சிம்பு. இதற்கு முக்கிய காரணம் அவரின் ஆன்மீக ஈடுபாடு தான் என்றும் சொல்லப்படுகிறது.

மேலும் சிம்புவின் இந்த புதிய பழக்கம் சினிமா உலகத்தினரை ஆச்சரியப்படுத்தி உள்ளதாகவும், அவருடைய ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.