நடிகைகள் பெரும்பாலும் தங்களது புதிய பட குழுவினருடன் சேரும் போது அவர்களுடன் பார்ட்டி கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் நிறைய நடிகைகள் போதையில் தடுமாறிய வீடியோக்கள் யூடியூப் தளத்தில் ஏராளமாக உள்ளன.
நடிகைகள் மது அருந்துவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் ரசிகர்களுக்கு மிகவும் விருப்பமாக இருக்கும் நடிகைகள் மது அருந்துவதை பார்த்தால் அவரது ரசிகர்கள் கொஞ்சம் வருத்தப்படுவார்கள் அல்லவா.
அந்தவகையில் 17 வருடமாக தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சில் குடியிருப்பவர் தான் திரிஷா. வயது 37 ஆனாலும் இன்னமும் பார்ப்பதற்கு இளமையாகவே தோன்றுகிறார். அதற்காக அவர் யோகா பயிற்சி செய்வதாக கூறுகின்றனர்.
திரிஷா தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வந்தார். பிரபல நடிகை என்பதை விட முன்னணி நடிகையாக இருந்தார் என்பதே சரியாக இருக்கும்.
தமிழ் மற்றும் தெலுங்கில் கொடிகட்டி பறந்த திரிஷா தன்னுடைய இளமைக் காலங்களில் நடிகர்களுடன் சேர்ந்து கொண்டு குடியும் கூத்துமாக இருந்த புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கண்ணிரண்டும் சொருகும் அளவுக்கு சூர போதையில் இருந்துள்ளார் திரிஷா.
திரிஷாவின் பழைய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதால் அடுத்தடுத்து திரிஷா நடிக்கும் படங்களுக்கு சிக்கல் வரும் என எண்ணி தற்போது இந்த புகைப்படத்தை இணையதளத்தில் இருந்து தூக்குவதற்கான வேலையில் இறங்கி விட்டாராம் நம்ம அம்மணி.