திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பாலிவுட் தயாரிப்பாளர்களிடம் கைகட்டி நிற்கும் சங்கர்.. தமிழ்ல கொஞ்ச நஞ்ச பந்தாவா பண்ணுனீங்க, அனுபவிங்க!

தமிழில் சிங்கம் போல் இருந்த சங்கரை பட வாய்ப்பு தருகிறேன் என்று பாலிவுட் மற்றும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் கூட்டிச்சென்று அடிமையை விட மோசமாக நடத்தும் செய்தி தான் தமிழ் தயாரிப்பாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வந்தவர் ஷங்கர்.

ஷங்கரின் ஒவ்வொரு படமும் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். இது எல்லாம் தேவையில்லாத ஆணி என கோலிவுட்டில் பலபேர் சொன்னாலும் ஷங்கர் பெரிய டைரக்டர் என்ற மோகத்தால் தயாரிப்பாளர்கள் கேட்டபாடில்லை.

சங்கர் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றாலும் தயாரிப்பாளர்களுக்கு தொடர்ந்து நஷ்டங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடைசியாக சங்கர் இயக்கிய படங்கள் அனைத்துமே தயாரிப்பாளர்களுக்கு பல்வேறு நெருக்கடியை கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியன் 2 விவகாரத்தில் லைக்கா நிறுவனத்திற்கும் சங்கருக்கும் பஞ்சாயத்து ஏற்பட்டது.

இதற்கிடையில் மற்ற மொழிகளில் படம் இயக்கலாம் என தற்போது தெலுங்கில் ராம்சரணுடன் ஒரு படமும், பாலிவுட்டில் ரன்வீர் சிங்குடன் ஒரு படம் இயக்க உள்ளாராம். இதற்காக இரண்டு மொழி தயாரிப்பாளர்களும் சங்கருக்கு பல்வேறு கண்டிஷன்கள் போட்டுள்ளார்களாம். குறிப்பிட்ட தேதிக்குள் படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் எனவும், பட்ஜெட்டை மீறி பத்து பைசா செலவானாலும் சம்பளத்தில்தான் பிடித்துக் கொள்வேன் எனவும் அக்ரிமென்டில் எழுதிக் கையெழுத்து வாங்கிக் கொண்டார்களாம்.

shankar-cinemapettai
shankar-cinemapettai

சங்கர் எந்த கண்டிஷன்களையும் மறுக்காமல் அவர்கள் சொன்னதற்கு கைகட்டிக் கொண்டு காட்டும் இடத்தில் எல்லாம் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்கிறாராம். இதுவே தமிழ் சினிமாவில் படம் இயக்கும்போது சங்கர் தான் தயாரிப்பாளர்களுக்கு கட்டளை போடுவார் என்பது கோலிவுட் வட்டாரங்கள் மூலம் நாம் அறிந்த செய்திகள்.

தற்போது சங்கரை பார்த்து எப்படி இருந்த மனுசன் இப்படி ஆகிவிட்டாரே என ரசிகர்கள் கவலைப்படுகின்றனர். அதேசமயம் தமிழில் சங்கரை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்கள் கொலைவெறியில் இருக்கிறார்களாம். இனிமேல் எப்படி தமிழில் படம் இயக்குகிறார் என்று பார்த்து விடுவோம் என சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

Trending News