தமிழ் சினிமாவில் ஜாம்பவான்களாக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன் இருவரும் திரை உலகத்தை தாண்டி தங்களின் நிஜ வாழ்க்கையிலும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆகையால் கடந்த 1987 ஆம் ஆண்டு கமல் நடித்த நாயகன் திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், நண்பர் கமலுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, ‘4 பெக்க விட வேலு நாயக்கர் போதை அதிகமா இருக்கு என்று தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இந்த உண்மையான ரகசியத் தகவலை பிரபல இயக்குனர் பி.வாசு ஒரு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் பி.வாசு இருவரும் நல்ல நண்பர்களாவர்.
மேலும் சத்யராஜ் நடிப்பில் வெளியான வேலை கிடாச்சுடுச்சு, வால்டர் வெற்றிவேல் போன்ற திரைப்படத்தை தான் நடித்திருக்கலாம் என்று ரஜினிகாந்த் தன்னிடம் கூறியதாக இயக்குநர் வாசு தெரிவித்துள்ளார் .
அதுமட்டுமின்றி இருவரும் ஷூட்டிங் நேரம் அல்லாமல் இதர நேரங்களிலும் ஒருவருக்கொருவர் தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொள்வார்களாம். சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அப்போது ரஜினியை நேரில் சென்று இயக்குனர் பி.வாசு பார்த்தபோது கூறியது, ‘நீங்கள் எம்ஜிஆர் போல் மருத்துவமனையிலிருந்து திரும்பி வரவில்லை, அமிதாப்பச்சனை போல் மீண்டு வந்துள்ளீர்கள். ஏனெனில், அமிதாப்பச்சன் சிகிச்சைக்குப் பிறகு பல ஆண்டுகள் எந்த உடல் ரீதியான பிரச்சினையும் இல்லாமல் நன்கு வாழ்ந்தார் என்பதை சுட்டிக்காட்டினார் இயக்குனர் வாசு’.
மேலும் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் பி.வாசு இருவரும் இணைந்து செய்த, மெகாஹிட் திரைப்படமாக வலம் வந்த, சந்திரமுகி திரைப்படம் இன்றும் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு தான் வருகிறது. இத்திரைப்படத்தின் மூலம் ரஜினியிடம் தான் இன்னும் நெருங்கிய நண்பனாக பழக வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்துள்ளார் இயக்குனர் வாசு.