எனக்கு அந்த கொரியன் பட ஹீரோயின் தான் வேணும்.. முதல்நாளே தயாரிப்பாளரின் அடிமடியில் கைவைத்த சங்கர்

shankar
shankar

இந்தியன் 2 படத்தின் சலசலப்புகளுக்கு பிறகு தற்போது ஷங்கர் தெலுங்கில் ராம்சரனை வைத்து பிரமாண்ட படம் ஒன்றை இயக்க சென்றுவிட்டார். அதனைத் தொடர்ந்து பாலிவுட்டிலும் ஒரு படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

பிரமாண்டத்திற்கு பெயர்போன ஷங்கரை ஆரம்பத்திலேயே அடக்கி வைத்தது தெலுங்கு தயாரிப்பு நிறுவனம். இவ்வளவு தான் படத்தின் பட்ஜெட் எனவும், இவை தாண்டி பத்து பைசா கூட செலவு செய்ய முடியாது எனவும் திட்டவட்டமாக எழுதி வாங்கி விட்டார்களாம்.

இதனால் சங்கர் ஒரு குறிப்பிட்ட வரையரைக்குள் படத்தை எடுத்துக் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இருந்தாலும் சங்கரின் பிரமாண்டத்திற்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் உருவாக இருக்கிறதாம் ராம்சரண் திரைப்படம்.

அந்த வகையில் முதல் நாளே தயாரிப்பாளரின் அடி மடியில் கை வைக்கும் விதமாக கொரியன் பட நடிகைதான் வேண்டுமென ஒற்றைக்காலில் நிற்கிறாராம் சங்கர். அந்த கொரியன் நடிகையை ஒப்பந்தம் செய்தால் கண்டிப்பாக பட்ஜெட்டில் இடிக்கும் என தயாரிப்பாளர் யோசித்து வருகிறாராம்.

நம்ம ஆளு தான் பேச்சிலேயே கில்லியாச்சே. பேச்சாலேயே சாதித்துவிட்டாராம். அந்த நடிகை மட்டும் படத்தில் சேர்த்தால் படம் உலக அளவில் சூப்பர் ஹிட் அடிக்கும் என தயாரிப்பாளரின் மண்டையை கழுவ, அவரும் பணத்தாசையால் ஒப்புக் கொண்டாராம். இந்நிலையில் தற்போது கொரியன் பட நடிகை பே சூஜி என்பவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம் படக்குழு.

Bae-Su-ji-korean-actress
Bae-Su-ji-korean-actress

மேலும் சங்கர், ராம் சரண் கூட்டணியில் உருவாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் உருவாக உள்ளது. முதல்நாளே ஷங்கர் தயாரிப்பாளரை தன்னுடைய வலையில் வீழ்த்தியதால் கண்டிப்பாக படம் இறுதிக்கட்டத்தை நெருங்க நெருங்க குறித்த பட்ஜெட்டைவிட அதிகமாக செலவாகும் என இப்போது தமிழிலிருந்து பல தயாரிப்பாளர்கள் தெலுங்கு தயாரிப்பாளருக்கு போன் பண்ணி எச்சரிக்கை விடுத்து வருகிறார்களாம்.

Advertisement Amazon Prime Banner