ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24, 2024

ஒரே வருடத்தில் 50 படங்களில் நடித்த பிரபலம் யார் தெரியுமா? இன்றுவரை முறியடிக்க திணறும் காமெடி நடிகர்கள்

அன்றைய காலத்தில் டி எஸ் பாலையா, சந்திரபாபு, என் எஸ் கிருஷ்ணன், நாகேஷ், மதுரம், தங்கவேலு மற்றும் மனோரமா போன்ற ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் இருந்தனர். அவர்களுக்கு போட்டியாக களத்தில் இறங்கி பல பேர் வந்தார்கள். அவர்களில் சிலர்தான் வெற்றி அடைந்தார்கள்.

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் பல காமெடி நடிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் சுருளி ராஜன். எங்க வீட்டு பிள்ளை என்ற எம்ஜிஆர் படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்த சுருளிராஜன் அடுத்தடுத்து பல நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தார்.

சுருளிராஜனின் தனித்துவமான குரல் அவரது சினிமா வாழ்க்கைக்கு சாதகமாகவே அமைந்தது. அதுமட்டுமில்லாமல் எந்த வேடத்தில் கொடுத்தாலும் அதற்கு தகுந்தாற்போல் தன்னை தயார்படுத்திக் கொண்டு நடிப்பை வெளிப்படுத்தி காட்டுவார்.இது சினிமாவில் இவருக்கு பக்கபலமாக அமைந்தது.

50 படங்களில் நடித்த சுருளிராஜன் கமல்ஹாசனை நடித்த “மீண்டும் கோகிலா” என்ற படத்தில் காமெடி கலந்த இயக்குனராகவும் நடித்தார். இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதால் அதன் பிறகு மீண்டும் காமெடி கதாபாத்திரத்திற்கு திரும்பிச் சென்றார்.

suruli rajan
suruli rajan

ஒரு தலைமுறை காமெடி நடிகர்கள் போன பிறகு அடுத்த தலைமுறையான கவுண்டமணி, செந்தில், வடிவேலு மற்றும் விவேக் நடிகர்கள் காமெடி மூலம் தமிழ் சினிமாவில் ஆட்சி செய்து வந்தாலும் அவர்களுக்கும் ஒரு போட்டியாளராகவே இருந்துள்ளார் சுருளி ராஜன்.

அதுமட்டுமில்லாமல் 1 வருடத்தில் 50 படங்கள் எந்த ஒரு காமெடி நடிகரும் நடிக்கவில்லை. ஆனால் சுருளிராஜனின் ஆட்சிக் காலம் என்பதால் அவர் மட்டும்தான் அன்றைய காலத்தில் 1 வருடத்தில் 50 படங்கள் நடித்துள்ளார்.  இன்று வரை எந்த ஒரு காமெடி நடிகரும் ஒரு வருடத்தில் 50 படங்கள் நடிக்க முடியாமல் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img

Trending News