இன்னும் ஒரே வாரத்தில் சுல்தான் படத்தின் ரிலீசை வைத்துக் கொண்டு படக்குழுவினர் படத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்து வருவது படத்தை பாதித்து விடுமோ என இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் பதட்டத்தில் இருக்கிறாராம்.
மாஸ்டர் படத்திற்கு பிறகு தியேட்டர்களில் வெளியாகும் மிகப்பெரிய திரைப்படம் என்றால் அது கார்த்தி நடிப்பில் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகும் சுல்தான் திரைப்படம் தான். இந்த படத்திற்கு கணிசமான எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
முன்னதாக படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் டிரெய்லர் என அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக விவேக் மெர்வின் இசையில் இதுவரை வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளன.
சமீபத்தில் வெளியான சுல்தான் படத்தின் ட்ரைலரில் உள்ள பின்னணி இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சின்ன பசங்களுக்கு இவ்வளவு திறமையா என அனைவரும் ஆச்சரியப்படும் நிலையில் அதற்கு காரணம் நான்தான் என யுவன் சங்கர் ராஜா என்ட்ரி கொடுத்துள்ளார்.
ஆம். சுல்தான் படத்தின் ட்ரைலருக்கு பின்னணி இசை கொடுத்தவர் யுவன் சங்கர் ராஜாதான். அதுமட்டுமில்லாமல் சுல்தான் படம் மொத்தத்துக்கும் யுவன் சங்கர் ராஜாவே பின்னணி இசையை கவனித்துக்கொள்கிறாராம்.
படத்தின் தயாரிப்பாளர் விவேக் மெர்வின் என்ற இளம் வயது இசையமைப்பாளர்களை வைத்துக்கொண்டு மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் சுல்தான் படத்தின் பின்னணி இசையில் ரிஸ்க் எடுக்க முடியாது எனவும், இதன் காரணமாகவே அனுபவமுள்ள யுவன் ஷங்கர் ராஜாவை உள்ளே அழைத்து வந்ததாகவும் குறிப்பிடுகிறாராம்.
பின்னணி இசையில் யுவன் ஷங்கர் ராஜாவை அடித்துக் கொள்ள ஆளில்லை தான். இருந்தாலும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து விட்டு இறுதியில் இசையமைப்பாளரை மாற்றினால் அது அவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்பது போல் தானே. அதுமட்டுமில்லாமல் ஒரே வாரத்தில் ரிலீசை வைத்துக்கொண்டு எதற்கு இத்தனை மாற்றங்கள் செய்து வருகின்றனர் என கோலிவுட் வட்டாரமே குழப்பத்தில் இருக்கிறதாம்.