பக்கா கமர்ஷியல் இயக்குனராக தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக வெற்றி நடை போட்டுக் கொண்டிருப்பவர் ஹரி. ஒரு காலத்தில் மார்க்கெட் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த பல முன்னணி நடிகர்களும் மிகப்பெரிய வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.
சரத்குமார், சூர்யா, விக்ரம் ஆகியோருடன் கூட்டணி போட்டு வெளியான ஹரி படங்கள் அனைத்துமே வசூல் ரீதியாக சூப்பர் டூப்பர் வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது. அதிலும் அன்றைய காலகட்டத்தில் வெளியான சாமி, ஐயா, வேல், சிங்கம் போன்ற படங்கள் இன்றும் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களாக உள்ளன.
ஹரி படங்களில் நடிக்க அப்போதே பல முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டினார். அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசன் மற்றும் ஹரி கூட்டணியில் ஒரு படம் உருவாக இருந்ததாம்.
ஹரி இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான தமிழ் திரைப்படத்தை பார்த்துவிட்டு தயாரிப்பாளர் ஞானவேல் என்பவர் ஹரியை அழைத்துக்கொண்டு கமலஹாசனிடம் பேசி ஒரு படத்திற்கு அட்வான்ஸ் கொடுத்து விட்டார்களாம்.
தேவர்மகன் ரேஞ்சுக்கு அந்த படம் உருவாக இருந்த நிலையில் எதிர்பாராத சூழ்நிலையில் அந்த படம் கைவிடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் கைவிடப்பட்ட அதற்கான காரணத்தை தெரிவிக்காமல் படம் டிராப் என்பதை மட்டும் மேலோட்டமாக தெரிவித்துவிட்டார் தயாரிப்பாளர் ஞானவேல்.
ஹரி மற்றும் கமலஹாசன் கூட்டணியில் ஒரு படம் வெளியாகி இருந்தால் அந்த படம் எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப்பார்க்கவே புல்லரிக்கிறது. ஹரியிடம் தற்போது வேண்டுமானால் சரக்கு இல்லாமல் இருக்கலாம். அந்த கால கட்டங்களில் இயக்குனர் ஹரி தான் உச்சத்தில் இருந்தார் என்பதை மறுக்க முடியாது.