விக்ரமாதித்யன் முதுகில் வேதாளம் ஏறிக்கொண்டு விடமாட்டேன் என்று சொல்வது போல சங்கரின் முதுகில் ஏறிக் கொண்டு லைகா நிறுவனம் அவரை படாதபாடுபடுத்தி வருவதுதான் கோலிவுட் வட்டாரங்களில் இன்றைய ட்ரென்டிங்.
ரஜினி நடிப்பில் லைகா தயாரிப்பில் வெளியான டூ பாயிண்ட் ஓ(2.O) திரைப்படத்தின் மூலம் லைகா நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குனராக மாறியவர் சங்கர். அந்தப் படம் கிட்டத்தட்ட 600 கோடி பட்ஜெட்டில் உருவாகி அதில் பாதியைக் கூட எடுக்கவில்லை.
இதன் காரணமாக சங்கரை வைத்து கமலுடன் இந்தியன் 2 படத்தை தயாரிக்க லைகா நிறுவனம் முன்வந்தது. ஆரம்பத்தில் பரபரப்பாக நடைபெற்று வந்த இந்தியன் 2 படப்பிடிப்பு பின்னர் கொரானா சூழ்நிலை, படப்பிடிப்பு தளத்தில் விபத்து என முற்றிலும் இந்தியன் 2 படத்தை முடக்கியது.

இதன் காரணமாக பட்ஜெட்டை குறைக்குமாறு லைகாக கேட்க, இதற்குமேல் குறைத்தால் படம் படமாக இருக்காது என சங்கர் சொல்ல வந்தது பஞ்சாயத்து. இதனால் டென்ஷனான சங்கர் போயா என பொட்டியை கட்டிவிட்டார்.
தற்போது ஷங்கர் அடுத்தடுத்து தெலுங்கில் ஒரு படமும் இந்தியில் ஒரு படம் இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இதனைப் பார்த்த லைகா நிறுவனம் சங்கரை சும்மா விடக்கூடாது என முடிவெடுத்துள்ளதாம்.
ஏற்கனவே ஷங்கர் இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு எந்த படத்தையும் இயக்க கூடாது என கேஸ் போட்டு அந்த கேஸ் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் தற்போது அதே கேசை நோண்டி எடுத்து மேல்முறையீடு செய்ய உள்ளதாம் லைகா நிறுவனம். லைகா சங்கரை ஒருவழியாக்காமல் விடமாட்டார்கள் போல என கோலிவுட்டில் கிசுகிசுக்கின்றனர்.